தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.!

பொதுவான மொழியான ஆங்கிலத்தை தவிர்த்து பங்கலா, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை உள்ளடக்குகிறது கூகுள் நிறுவனம்.

|

இந்தியாவின் 11 நகரங்களில் தேடல் கருத்தரங்கம் 2018 எனும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது கூகுள். இந்த கருத்தரங்கம் பயனர்களுக்காக இந்தாண்டின் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.!

மாநில மொழிகளில் உள்ளடக்கம்(content) வேண்டும் என கோரிக்கை வைக்கும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது கூகுள். இந்த முயற்சியின் மூலம் உயர்தர இணைய உள்ளடக்கங்களை தங்களின் மாநில மொழிகளில் பெற பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூகுள் நம்புகிறது.


பொதுவான மொழியான ஆங்கிலத்தை தவிர்த்து பங்கலா, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை உள்ளடக்குகிறது கூகுள் நிறுவனம். மேலும் இந்தியாவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும் அனைத்து கருத்தரங்குகளுக்கான தேதியும் வெளியிட்டள்ளது. ஜுன் 20ல் திட்டமிடப்பட்டுள்ள முதல் நிகழ்ச்சி குர்கானில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களில் இந்த கருத்தரங்குகள் நடைபெறும். ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களுருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இறுதி நிகழ்ச்சி , முக்கியமாக பெண் இணைய வல்லுநர்களை மையப்படுத்தி நடைபெறும்.

தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.!

கருத்தரங்குகள் நடைபெறும் நகரங்கள் மற்றும் தேதிகள் பின்வருமாறு.

1. குர்கான் -ஜூன்20(புதன்கிழமை)

2. பூனே - ஜூன்22(வெள்ளிக்கிழமை)

3. இந்தூர் - ஜூலை2(திங்கட்கிழமை)

4.பாட்னா- ஜூலை4(புதன்கிழமை)

5.லக்னோ- ஜூலை6(வெள்ளிக்கிழமை)

6. ஹைதராபாத்-ஜூலை16(திங்கட்கிழமை)

7.விசாகப்பட்டினம்- ஜூலை18(புதன்கிழமை)

8. கொல்கத்தா- ஜூலை20(வெள்ளிக்கிழமை)

9.கோயம்புத்தூர்- ஜூலை30(திங்கட்கிழமை)

10. சென்னை - ஆகஸ்ட்1( புதன்கிழமை)

11. பெங்களூர் - ஆகஸ்ட்3(புதன்கிழமை) : பெண் இணைய வல்லுநர்களை மையப்படுத்தி

நிறுவனத்தின் இணையவல்லுநர்களை வெளிப்படுத்தும் குழு பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 'எப்படி தேடல் வேலைசெய்கிறது', 'கூகுள் தேடலில் இந்திய மொழி இணையதளங்களை முன்னிலைப்படுத்துவதற்கான டிப்ஸ்', ' மொபைல் பிரெண்ட்லி இணையதளங்களுக்கான சிறந்த வழிமுறைகள்' மற்றும் 'கூகுள் தேடல் தரத்திற்கான வழிகாட்டிகள்' போன்ற தலைப்புகளும் அதில் அடக்கம்.

தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் கூகுள்: தேடல் கருத்தரங்கம்.!

கூகுள் அட்சென்ஸ் (Adsense) தொடர்பான கருத்தரங்குகளை நடத்தவும் இந்த மெகா தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகளின் மூலம் பயனர்களுக்கு புதிய கொள்கைகளைப் பற்றி விளக்கவும், பயனர்கள் அவர்களின் இணையதளங்களில் அட்சென்ஸ்ஐ பயன்படுத்தும் போது தவறுகள் செய்யவதை தடுக்கவும் இது உதவும்.

Best Mobiles in India

English summary
Google will cover Marathi Tamil Telugu and Bangla during its Search conference 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X