கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

By Prakash
|

கூகுள் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.11,001 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.39,999-விலையில்
விற்பனை செய்யப்பட்டது, மேலும் கூகுள் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விலை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறவனம் அறிவிப்பின் படி கூகுள் பிகசல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.11,001 மற்றும் ரூ.8,001 விலைகுறைக்கப்பட்டு ரூ.41,999 மற்றும் ரூ.56,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த சலுகை குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையுடன் கேஷ்பேக் மற்றும் மாத தவணை சலுகைகள் வழங்கப்படுகிறது.

கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

தள்ளுபடி விற்பனை:

64ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.19,001-வரை தள்ளுபடி செய்யப்பட்டு இப்போது ரூ.41,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

128ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.19,001-வரை தள்ளுபடி செய்யப்பட்டு இப்போது ரூ.50,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

64ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,001-வரை தள்ளுபடி செய்யப்பட்டு இப்போது ரூ.56,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

128ஜிபி கொண்ட கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.16,001-வரை தள்ளுபடி செய்யப்பட்டு இப்போது ரூ.65,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கூகுள் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ்ச் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 2 and Pixel 2 XL get a limited period price cut in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X