இனி Flash News என்ற பெயரின்கீழ் போலி செய்திகளுக்கு அடி; கூகுள் அதிரடி.!

கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

|

வெற்றியை நோக்கி பயணிப்பதற்கு நேர்மையான இதழியல் (பத்திரிக்கைத்துறை) தேவை என்பதை புரிந்துகொண்ட உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், போலி செய்திகளை எதிர்க்கும் முனைப்பின்கீழ் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இனி Flash News என்ற பெயரின்கீழ் போலி செய்திகளுக்கு அடி; கூகுள் அதிரடி!

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் (ஜிஎன்ஐ) எனும் 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது "தரமான பத்திரிகைகளை உயர்த்தவும், வலுப்படுத்தவும்" உதவுமென்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துடன் சேர்த்து, பயனர்கள் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறும், அது பயனர்களுக்கு பிடித்த செய்தி வெளியீடுகளை எங்கிருந்தும் அணுக உதவுமென்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் திட்டத்தை பற்றி பேசுகையில், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில்
போலி செய்திகளின் பங்களிப்பு இன்றும் இருப்பதாக கூகுள் நம்புகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின்போது தான், போலி செய்திகளானது எவ்வளவு பெரிய சிக்கல் என்பதையும், அதை நிரந்தரமாக களைய வேண்டும் என்கிற குரல்களும் எழுந்தன, அதற்கு கூகிள் செவிகொடுக்க ஆரம்பித்தது.

ஒரு வலைப்பதிவு இடுகையில் கூகுள் "உண்மையான (மற்றும் போலியான) ஆன்லைன் தகவல்களை வேறுபடுத்தி காண்பதென்பது மிகவும் கடினமானதாக உள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளது. இந்த ஒப்புதலானது, போலிகளை கண்டறிய மிகப்பெரிய முயற்கிகளை கூகுள் நிறுவனம் எடுக்கவிருப்பதை வெளிப்படுத்துகிறது.

இனி Flash News என்ற பெயரின்கீழ் போலி செய்திகளுக்கு அடி; கூகுள் அதிரடி!

அப்படியானதொரு பெரிய முயற்சி வேறொன்றுமில்லை - கூகுள் நியூஸ் இனிஷியேடிவ் திட்டம் தான். இந்த திட்டமானது மூன்று பிரதான குறிக்கோள்களை மையமாகக் கொண்டிருப்பதாக கூகுள் கூறுகிறது. ஒன்று தரமான பத்திரிகைகளை உயர்த்த மற்றும் வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, நிலையான வளர்ச்சியை அடைய வணிக மாதிரிகள் உருவாக்குவது மற்றும் இறுதியாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வழியாக செய்தி நிறுவனங்களுக்கான அதிகாரங்களை அளித்தல் ஆகியவைகளாகும். இது சாத்தியமாகும் பட்சத்தில், விரைவு செய்திகள் மற்றும் பிளாஷ் நியூஸ் என்கிற பெயரின்கீழ் பரப்பப்படும் போலி செய்திகளுக்கு தான் முதல் அடி விழும்.

போலி செய்திகளை ஒழிக்கும் முயற்சியின் மற்றொரு பகுதியாக, செய்தி நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் வருவாயை வளர்ப்பதற்காக கூகுள் உதவவுள்ளது. ஒரு நல்ல பத்திரிகை நிறுவனத்திற்கு பணம் கிடைக்க வேண்டும் என்று கூகுள் நம்புகிறது. அதனால் தான் கூகுளை சப்ஸ்க்ரைப் செய்யுமாறு அறிவித்துள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

இது போலி செய்திகளுக்குக்கு எதிரான முதல் நடவடிக்கை எல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரே கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளை அறிவித்து, அது சார்ந்த பணிகளையும் செய்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
Google News Initiative announced to combat fake news and help publishers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X