அலட்சியம் காட்டும் பொதுமக்கள்: மெரினாவில் ட்ரோன் பறக்கவிட்ட போலீஸ்!

|

மெரினா கடற்கரையில் மாஸ்க் அணியாமல் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் போலீஸார் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை பலரது பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மெரினாவில் வாக்கிங் செல்லலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் வாக்கிங் செல்ல அனுமதி

மெரினாவில் வாக்கிங் செல்ல அனுமதி

மெரினாவில் வாக்கிங் செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆர்வத்தோடு நடைபயிற்சி மேற்கொள்ள தொடங்கினர். இருப்பினும் சிலர் மாஸ்க் அணியாமலும் சமூகஇடைவெளி பின்பற்றாமலும் நோய் குறித்த விழிப்புணர்வு குறையும் வகையில் நடந்து கொண்டனர். இதையடுத்து போலீஸார் தரப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ட்ரோன் மூலமாக போலீஸார் கண்காணிப்பு

ட்ரோன் மூலமாக போலீஸார் கண்காணிப்பு

அண்ணாசதுக்கம் மெரினாவில் நடைபயிற்சியில் பலர் மாஸ்க் அணியாமலும் சமூகஇடைவெளி பின்பற்றாமலும் நடந்த கொண்டவர்களை ட்ரோன் மூலமாக போலீஸார் கண்காணித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மெரினாவில் வாக்கிங் செல்ல காலை 6:00 மணி முதல் 9:00 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதியை பயன்படுத்தி அலட்சியம்

அனுமதியை பயன்படுத்தி அலட்சியம்

அனுமதியை பயன்படுத்தி உடல்நலன்களை மேம்படுத்திக் கொண்டு நோய் தொற்று குறைவுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்ட நிலையில் சிலர் அலட்சியமாக முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் செல்கின்றனர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாலை நேரங்களிலும் கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு ஏராளமானோர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலம் கண்காணித்து விழிப்புணர்வு

ட்ரோன் மூலம் கண்காணித்து விழிப்புணர்வு

இதையடுத்து மெரினாவில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு நடத்த போலீஸார் முடிவு செய்தனர். ட்ரோன் மூலம் கண்காணிப்பு செய்த போலீஸார் அங்கு மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்த நபர்களை அழைத்து அவர்களுக்கு மாஸ்க் அணியாததாலும் சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்தாலும் ஏற்படும் விழைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலீஸாரின் இந்த செயல் பலரது பாராட்டுக்கு உள்ளானது.

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் 5-ம் தேதி காலை 6-மணிக்கு நிறைவடைகிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நேற்று அனைத்து துறை செயலர்களுடன்,முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்

அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 12-ம் தேதி காலை 6-மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நேற்று இரவு அறிவித்தார். பின்பு சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அறிவித்தார். அந்த அறிவிப்பில் மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பாஸ் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

மேலும் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் ஏசி வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில், பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவர். பின்பு அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

இ-பாஸ்,இ-பதிவு நடைமுறை ரத்து

இ-பாஸ்,இ-பதிவு நடைமுறை ரத்து

குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ்,இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் 50 பேர், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்ற அனுமதிக்கப்படுவர். இதுதவிர பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

File Images

Best Mobiles in India

English summary
Drone Surveilance in Marina For Making Awareness Who Walking Without Mask

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X