1500 ட்ரோன்கள்.. சீனா வானில் தோன்றிய ராட்சஸ டிராகன் உருவம்.. வைரல் ஆகும் வீடியோ.. என்ன சர்ப்ரைஸ்?
சீனர்கள் சிறந்த வித்தைக்காரர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டனர். சங்ககாலத்தில் இருந்தே பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதும் அவற்றை வெளி உலகிற்கு தெரியப்படுத்துவதை பழக்கமாக வைத்துள்ள சீனா (China), தற்போது ஒரு வியக்கத்தகு விஷயத்தை ஆளில்லா ரிமோட் ட்ரோன்களை (Drone) பயன்படுத்தி செய்துள்ளது.
ட்ரோன்கள் (Drones) என்பது முறையாக ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது ஆளில்லா விமான அமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அடிப்படையில், ஒரு ட்ரோன் என்பது தொலைதூரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் ரோபோ சாதனமாகும் (Remote Controlled Flying Robot Device). இதை இப்போது விவசாயம் (Agriculture), இராணுவ எல்லை பாதுகாப்பு, உணவு மற்றும் மருந்து டெலிவரி என்ற பல செயல்பாடுகளுக்கு இவற்றை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இத்தகைய சாதனத்தை வைத்து, சீனா சமீபத்தில் ஒரு வான் வித்தை நிகழ்வை இரவு நேரத்தில் நிகழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வை பார்த்த பிறகு, உங்களால் இதை பாராட்டாமல் இருக்க முடியாது என்பதே உண்மை. சீனாவில், மிகவும் பிரபலமான டிராகன் போட் பெஸ்டிவல் (Dragon Boat Festival) என்ற பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
சீன கேலண்டரின் ஐந்தாவது மாதத்தின் ஐந்தாவது நாளில் இந்த பண்டிகை நடைபெறும். இந்த திருவிழா, பண்டைய கவிஞர் கு யுவானின் (ancient poet Qu Yuan) நினைவாக உள்ளது. இது பொதுவாக டிராகன் போட் போட்டிகள் மற்றும் ஸ்டிக்கி ரைஸ் டாம்ப்ளிங்ஸ் சாப்பிடும் போட்டி என்று இந்த திருவிழா கோலாகலமாக கொண்டப்பட்டது. திருவிழாவின் ஒரு முக்கிய பகுதியாக இம்முறை ட்ரோன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் 1500 ட்ரோன் (1500 Drones) சாதனங்கள் ஒன்றாக சிங்க் (Sync) செய்யப்பட்டு, சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரத்தில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் இருந்து, இந்த ட்ரோன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வானில் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சிங்க் செய்யப்பட்ட 1500 ட்ரோன்களை வைத்து, இராட்சஸ உருவங்களை ட்ரோன் கலைஞர்கள் உருவாக்கி வானையே அலங்கரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன் நிகழ்ச்சியின் போது, வானில் ராட்சஸ டிராகன் உருவம், திமிங்கலம், மீன், டிராகன் படகு, கழுகு மற்றும் சூரிய குடும்பத்தின் கோள்கள் என்று பல விதமான உருவங்களை பிரதிபலித்தது என்பது கவனிக்கத்தக்கது.
எழுத்தாளரும் AI நிபுணருமான பாஸ்கல் போர்னெட் இது பற்றி கூறுகையில், இது தான் இதுவரை பார்த்தவற்றில் சிறந்த ட்ரோன் நிகழ்ச்சி என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற மூன்று நாள் திருவிழாவின் போது, ஷென்சென் 3.38 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்றது. இந்த ட்ரோன் ஷோவின் பங்களிப்பு 2022 ஆண்டை விட 34.9% அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை ஏராளமான மக்கள் நேரில் கண்டு மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற இந்த டிராகன் போட் பெஸ்டிவல் திருவிழாவின் சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சி வீடியோ இப்போது அதிக மக்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








