Home
Gadgets

வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?

டால்பி அட்மோஸ், ஹெட் டிராக்கிங், நாய்ஸ் கேன்சலேஷன், டிரிபிள் மைக்ரோபோன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற ஒட்டுமொத்த அல்ட்ரா பிரீமியம் அம்சங்களுடன் மோட்டோ பட்ஸ் பிளஸ் (Moto Buds Plus) இயர்பட்ஸ் மற்றும் மோட்டோ பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ பட்ஸ் பிளஸ் அம்சங்கள் (Moto Buds Plus Specifications): இந்த மாடலில் டூயல் டைனாமிக் டிரைவர்கள் (Dual Dynamic Drivers) வருகிறது. ஆகவே, 11 எம்எம் வூப்பர் (Woofer) மற்றும் 6எம்எம் ட்வீட்டர் (Tweeter) கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி ஹெட் டிராக்கிங் (Dolby Head Tracking) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது.

வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங் சப்போர்ட்!

இந்த டால்பி ஹெட் டிராக்கிங் மூலம் ஹெட் மூவ்மெண்ட்டுக்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கிடைக்கும். ஆகவே, கிளியர் வோகல் (Clear Vocal), டீப் பேஸ் (Deep Bass) ஆகியவற்றுடன் ஸ்டூடியோ குவாலிட்டி மியூசிக் (Studio-quality Music) அனுபவத்தை எதிர்பார்க்கலாம். 46dB நாய்ஸ் கேன்சலிங் (Noise Canceling) சப்போர்ட் வருகிறது.

மியூசிக் மட்டுமல்லாமல், காலிங் அனுபவமும் கிரிஸ்டல் கிளியர் தரத்தில் இருக்கும். ப்ளூடூக் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி வருகிறது. மோட்டோ பட்ஸ் ஆப் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஈஎன்சி (ENC) சப்போர்ட் கொண்ட டிரிபிள் மைக்ரோபோன் சிஸ்டம் (Triple Microphone System) வருகிறது. கிரிஸ்டல்டாக் ஏஐ (CrystalTalk AI) சப்போர்ட் உள்ளது.

சிங்கிள் சார்ஜில் 8 மணி நேர பிளேடைம் கொடுக்கும். அதேபோல சார்ஜிங் கேஸ் ஃபுல் சார்ஜ் செய்யப்பட்டபின் 38 மணி நேரங்களுக்கு பிளே டைம் கொடுக்கும். இந்த மாடலுக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சப்போர்ட் வருகிறது. அதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதுவொரு வாட்டர் ரெப்பிலன்ட் (Water-repellent) மாடலாகும். ஃபாரஸ்ட் கிரே (Forest Grey) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டோ பட்ஸ் பிளஸ் மாடலின் விலை, ரூ.10,868ஆக இருக்கிறது. இதைவிட கம்மியான பட்ஜெட்டில் மோட்டோ பட்ஸ் (Moto Buds) அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அம்சங்கள் மற்றும் விலையை பார்ப்போம்.

மோட்டோ பட்ஸ் அம்சங்கள் (Moto Buds Specifications): இந்த மோட்டோ மாடலில் பேலன்ஸ்டு ஆடியோ (Balanced Audio) சப்போர்ட் கொண்ட 12.4எம்எம் டைனாமிக் டிரைவர்கள் வருகின்றன. ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. மோட்டோ பட்ஸ் ஆப் சப்போர்ட் வருகிறது. டைனாமிக் ஏஎன்சி (Dynamic ANC) கொண்டுள்ளது.

வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங் சப்போர்ட்!

அடாப்டிவ் மற்றும் டிரான்பரன்ஸி மோட் (Adaptive & Transparency Mode) வருகிறது. இந்த மோட்டோ பட்ஸ் மாடலில் 48dB நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் வருகிறது. மொபைல், லேப்டாப் போன்ற டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்து கொள்ள லைட்னிங்-ஃபாஸ்ட் பேரிங் (Lightning-fast Pairing) வருகிறது.

கஸ்டமைசபிள் கன்ட்ரோல் (Customizable Controls) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடலிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வயர்லெஸ் சார்ஜிங் வரவில்லை. இருப்பினும், சிங்கிள் சார்ஜில் 9 மணி நேரங்களுக்கு பிளேடைம் கிடைக்கும். கிளியர் வாய்ஸ் காலிங் அனுபவத்துக்காக இந்த மாடலிலும் கிரிஸ்டல்டாக் ஏஐ வருகிறது.

ஸ்டார்லைட் ப்ளூ (Starlight Blue), கிளாசியல் ப்ளூ (Glacial Blue), கோரல் பீச் (Coral Peach) மற்றும் கிவி கிரீன் (Kiwi Green) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டோ பட்ஸ் மாடலின் விலை ரூ.5,245ஆக இருக்கிறது. இந்த 2 மாடல்களும் ஐரோப்பாவில் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Buds Plus With Dolby Atmos, Wireless Charging, 38 Hours Playtime Unveiled Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X