Home
News

ஹாலிவுட் படமே காட்டலாம்.. டூயல் கேமரா.. 4241mAh பேட்டரி.. பைனாகுலர் விஷன்.. மிரட்டலான ட்ரோன்.. எந்த மாடல்?

டிஜி (DJI) நிறுவனத்தின் டிஜி ஏர் 3 (DJI Air 3) ட்ரோன் பிரம்மாண்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. ஒரே ட்ரோனில் வைடு ஆங்கிள் கேமரா மற்றும் மீடியம் டெலி கேமரா என்று 2 கேமராவை கொண்டிருப்பதால், அதிகம் கவனம் பெற்றுள்ளது.

இப்போதெல்லாம், திரைப்படங்கள் முதல் யூடியூப் வீடியோக்கள் வரை ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இதுவரையில் வீடியோ பார்த்து வந்த அனுபவத்தை முற்றிலும் மாற்றும் வகையில், ட்ரோன்களின் வெளியீடு இருப்பதால், அவற்றை தவிர்க்க முடியவதில்லை. இதனால், ட்ரோன் தொடர்பான வியாபாரம் மிகப்பெருமளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.

டூயல் கேமரா.. 4241mAh பேட்டரி.. மிரட்டலான டிஜி ஏர் 3 ட்ரோன்!

அதேவேளையில், ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களும் புதுப்புது தொழில்நுட்பங்களை ட்ரோன்களில் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், ஒரு ஹாலிவுட் படத்தையே எடுத்துவிடும் அளவிலான அம்சங்களுடன் டிஜி ஏர் 3 விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த ட்ரோனின் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் பின்வருமாறு.

டிஜி ஏர் 3 அம்சங்கள் (DJI Air 3 Specifications): இந்த ட்ரோன் 720 கிராம் டேக் ஆஃப் வெயிட் (Takeoff Weight) கொண்டுள்ளது. நொடிக்கு 10மீ வேகத்தில் செல்லக்கூடியது. ஜிபிஎஸ் (GPS) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6000மீ உயரம் வரையில் பறக்கும்.

ஒருமுறை ஃபுல்சார்ஜ் செய்தால் தொடர்ந்து 46 நிமிடங்களுக்கு பயன்படுத்தலாம். 8 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ட்ரோனில் 48 எம்பி வைடு ஆங்கிள் கேமரா (Wide-Angle Camera) மற்றும் 48 எம்பி மீடியம் டெலி கேமரா (Medium Tele Camera) என்று 2 கேமரா வருகிறது.

இரண்டும் 8064×6048 பிக்சல்கள் கொண்டுள்ளது. 12 எம்பி மற்றும் 48 எம்பி அளவில் சிங்கிள் ஷாட் போட்டோகிராபி மோட் வருகிறது. 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்துகொள்ள முடியும். வைடு ஆங்கிள் கேமராவில் 1.3X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் மீடியம் டெலி கேமராவில் 3-9x டிஜிட்டல் ஜூமிங் வருகிறது.

இந்த ட்ரோனை டில்ட் (Tilt), ரோல் (Roll), பேன் (Pan) செய்துகொள்ள முடியும். இந்த ட்ரோனுக்கும் ரிமோட் கன்ரோலருக்கும் 120எம்எஸ் லோவ் லேட்டன்சி (Low Latency) கொடுக்கப்பட்டுள்ளது. லைவ் வீடியோ டிரான்ஸ்மிஷனுக்கு 6 ஆண்டெனாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டூயல் வைபை 802.11 மற்றும் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வருகிறது.

ஓம்னிடைரக்ஷனல் பைனாகுலர் விஷன் சிஸ்டம் (Omnidirectional Binocular Vision System) கொண்டுள்ளது. இதுவொரு சென்சிங் டெக்னாலஜியாகும். ட்ரோன் எதிலும் மோதாமல் இருப்பதை கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4241mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் பிடிக்கும்.

இந்த பேட்டரியை 65W போர்டபில் சார்ஜர் மூலமும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் ஃபுல் சார்ஜ் செய்ய 80 நிமிடங்கள் பிடிக்கும். இந்த ட்ரோனுக்கு டிஜி ஆர்சி - என்2 (DJI RC-N2 ) ரிமோட் கன்ட்ரோலர் (Remote Controller) வருகிறது.

இந்த ரிமோட்டை தொடர்ந்து 6 மணி நேரம் பயன்படுத்தலாம். மொபைல் சார்ஜிங் மூலம் கூடுதலாக 3.5 மணி நேரம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ட்ரோனுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்டோர்களில் டிஜி ஃபிளை ஆப் (DJI Fly App) கிடைக்கிறது. இந்த ட்ரோனின் விலை ரூ.90,105ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதோடு பிளை மோர் காம்போ, டிஜி ஆர்சி என்2 ரிமோட் கன்ட்ரோலர் செட்டப் வேண்டும் என்றால் ரூ.1,10,602ஆக விலை அதிகரிக்கிறது. இந்த ட்ரோனை ஸ்டோர்.டிஜி.காம் (store.dji.com) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
DJI Air 3 Drone With Dual 48MP Cameras, 4241mAh Battery, 46 Minutes Flight Time Announced Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X