சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!

|

சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் சொல்லாக ட்ரோன்கள் மாறியுள்ளது. குறிப்பாக இதை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவிலும் ட்ரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இயற்கை பேரிடர்களில் இந்த ட்ரோன்கள்

அதாவது இயற்கை பேரிடர்களில் இந்த ட்ரோன்கள் பெருமளவு கைகொடுத்து வருகின்றன. இதுதவிர பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் ட்ரோன் பயன்படுத்த புதிய விதிமுறைகளை நமது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக முன்பு ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்பட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ரிக்காவில் உள்ள எவர்கிளாட்

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள எவர்கிளாட்ஸ் பகுதியில் இருக்கும் பூங்காவில் சுற்றலாப் பயணிகள் நீரோடைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அந்த சமயம் நீருக்குள் முதலை இருப்பதைக் கண்ட அவர்கள், ட்ரோன் மூலம் அதனை வீடியோவாக எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

ஒரே டுவிட்., குழப்பத்தில் நெட்டிசன்கள்: எலான் மஸ்க் சொல்ல வருவது என்ன?- இதை செய்யப்போறாரா?ஒரே டுவிட்., குழப்பத்தில் நெட்டிசன்கள்: எலான் மஸ்க் சொல்ல வருவது என்ன?- இதை செய்யப்போறாரா?

னுப்பிய அந்த ட்ரோன் ஆனது

மேலும் அவர்கள் அனுப்பிய அந்த ட்ரோன் ஆனது கரைக்கு அருகாமையில் நீரில் இருந்த முதலைக்கு அருகில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் ஒருவித ஒலியுடன் டிரோன் இருந்ததால் அந்த முதலை தீடிரென ட்ரோனை கவ்வி விழுங்கியது. பின்பு அந்த ட்ரோனை கவ்விய சிறுது நேரத்தில் முதலையின் வாயில் இருந்து குபுகுபுவென புகை வெளிவரத் தொடங்கியது.

ஒரு வரம்பு இல்லையா?- சமூகவலைதளம், யூடியூப் சேனல்களில் பரப்பப்படும் பொய் செய்திகள்: உச்சநீதிமன்றம் கவலை!ஒரு வரம்பு இல்லையா?- சமூகவலைதளம், யூடியூப் சேனல்களில் பரப்பப்படும் பொய் செய்திகள்: உச்சநீதிமன்றம் கவலை!

 அந்த சுற்றலாப் பயணிகள்,

கரையில் இருந்த அந்த சுற்றலாப் பயணிகள், முதலை ட்ரோன் கேமராவை கவ்வியதை மற்றொரு கேமராவில் படம் பிடித்துக்
கொண்டிருந்தனர். மேலும் இந்த வீடியோவை சுந்தர் பிச்சை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். பின்பு
இந்த வீடியோ யூடியூப்பிலும் வைரலாக பகிரப்பட்டது.

பூமியில் சூரியன் இப்படி கூட காட்சி அளிக்குமா? பெருங்கடல் மீது இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்கலையே.!பூமியில் சூரியன் இப்படி கூட காட்சி அளிக்குமா? பெருங்கடல் மீது இப்படி ஒரு காட்சியை யாரும் எதிர்பார்கலையே.!

ருக்குள் துப்பியது

டிரோன் மூலம் படம்பிடித்தவர் கூறியது என்னவென்றால், நாங்கள் அனுப்பிய ட்ரோன் ஆனது முதலைக்கு அருகே சென்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது முதலையின் வாய் பகுதிக்கு அருகாமையில் ட்ரோனை நகர்த்தும்போது, அது தீடிரென கவ்வியது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, கரையில் இருந்து நாங்கள் கூச்சலிட்டோம். பின்பு சிறிது நேரத்தில் அந்த முதலையின் வாயில் இருந்து அதிக புகை கிளம்பியது. முதலைக்கு ஏதேனும் ஆகிவிட்டதா என்று அஞசினோம், ஆனால் முதலை கவ்விய ட்ரோனை நீருக்குள்துப்பியது என்று தெரிவித்தார்.

கிறிஸ் ஆண்டர்சன் என்பவர் பகிர்ந்த

குறிப்பாக கிறிஸ் ஆண்டர்சன் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவை சுந்தர் பிச்சை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதேபோல் யூடியூப்பில் மட்டும் இந்த வீடியோ அதிக பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் முதலை வாயில் ட்ரோன் வெடித்த இந்த வீடியோவுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பின்பு இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் தேவையான இடங்களில் மட்டும் இந்த ட்ரோன்களை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். குறிப்பாக புகைப்பட கலைஞர்கள், பயண விரும்பிகள் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கு இந்த ட்ரோன்கள் அதிக பயனுள்ளதாக இருக்கின்றன. டிரோன்களை பயன்படுத்தி வீடியோக்களை மிக அழகாகவும், வித்தியாசமாகவும் படம்பிடிக்க முடியும். இதுதவிர இதனை இயக்குவதும் எளிமையான ஒன்று தான். இந்த டிரோன் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கும்
நிலையிலும் பல்வேறு நாடுகளில் டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. அதுவும் குறிப்பிட்ட நாடுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் மட்டும் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sundar Pichai shares the video of the crocodile that Catching the drone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X