"இது எல்லாமே ரொம்ப பெருமையா இருக்கு"- பிரமாண்ட ட்ரோன் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு!

|

பாரத் ட்ரோன் மஹோத்சவ் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழாவானது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு தூதர்கள், ஆயுதப்படையினர்கள், மத்திய ஆயுதப் படை வீரர்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்பட 1600 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ட்ரோன் டாக்ஸி சேவைக்கான முன்மாதிரி

ட்ரோன் டாக்ஸி சேவைக்கான முன்மாதிரி

இந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், தயாரிப்பு வெளியீடு, குழு விவாவதம் உட்பட பல நிகழ்வுகள் நடக்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸி சேவைக்கான முன்மாதிரி காட்சி இந்த நிகழ்வில் நடக்கிறது, அதேபோல் ட்ரோன் பைலட் சான்றிதழும் இந்த நிகழ்வில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ட்ரோன் திருவிழா

இந்தியா ட்ரோன் திருவிழா

மிகப்பெரிய ட்ரோன் விழாவான "இந்தியா ட்ரோன் திருவிழாவை" பிரதமர் மோடி தொடங்கி வைத்து இந்த ட்ரோன் கண்காட்சியை பார்வையிட்டார். அதில் பேசிய அவர், மேக் இன் இந்தியா முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார். இந்தியா ட்ரோன் திருவிழாவை ஏற்பாடு செய்ததற்கு அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த ட்ரோன் கண்காட்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிமையான அனுபவத்தை வழங்கியது. இங்குள்ள ஒவ்வொரு பிரிவும் மேக் இன் இந்தியா என பெருமையாக அனைவரும் சொல்வார்கள்.

ட்ரோன் தொழில்நுட்பம் மீதான வரவேற்பு

ட்ரோன் தொழில்நுட்பம் மீதான வரவேற்பு

ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் உற்சாகம் ஆச்சரியமளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். ட்ரோன் தொழில்நுட்பம் மீதான வரவேற்பு என்பது இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக மாற்றும் என்பதை குறிக்கிறது. ட்ரோன் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கிறது. அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் குறித்து ஆர்வம் இருக்கும் அனைவரும் இந்த நிகழ்ச்சியை காணும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொழில்நுட்பம் மக்களுக்கே முதலில்

தொழில்நுட்பம் மக்களுக்கே முதலில்

அதேபோல் கடந்த காலங்களில் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் என்பது உயரடுக்கு வகுப்பினருக்கு மட்டுமே என கருதப்பட்டன ஆனால் இன்று தொழில்நுட்பம் மக்களுக்கு முதலில் சென்றடைகிறது. குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆட்சி என்ற பாதையை பின்பற்றி, எளிதாக வாழ்வதற்கும் எளிதாக தொழில் செய்வதற்கும் முன்னுரிமை அளித்துள்ளோம் என குறிப்பிட்டார்.

ட்ரோன்கள் தயாரிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு

ட்ரோன்கள் தயாரிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு

2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிவிலியன் ட்ரோன் நடவடிக்கைகளில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்ரோன் விதிகள் 2021-ஐ அரசு அறிவித்தது. இது ட்ரோன் துறை வளர்ச்சியை குறிக்கிறது. இந்தியாவில் ட்ரோன்கள் தயாரிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. பிரதமர் சுவாமித்வா திட்டத்தின் செயல்பாடு மற்றும் முன்னோக்க நடவடிக்கை குறித்து அவர் விளக்கினார்.

பிரதமர் சுவாமித்ரா திட்டம்

பிரதமர் சுவாமித்ரா திட்டம்

பிரதமர் சுவாமித்ரா திட்டத்தின் மூலம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொறு சொத்துகளும் டிஜிட்டல் மேப்பிங் செய்யப்படுகிறது. அதன்படி அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் சொத்து அட்டைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ட்ரோன்கள் தொழில்நுட்பமானது விவசாயத் துறையை புதிய உயரத்திற்கு எடுத்து செல்கிறது எனவும் விவசாயத்தில் ட்ரோன்கள் பங்காற்றுகிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகள் மூலமாக தொழில்நுட்பத்தின் மீதான விவசாயிகள் நம்பிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

புதிய இந்தியா இளம் இந்தியா

புதிய இந்தியா இளம் இந்தியா

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆட்சியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அலட்சியமான சூழல் நிலவியது. தற்போது தொழில்நுட்பத்தை அனைவரும் அணுகும் வகையில் மாற்றியுள்ளோம். 21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவில் இளம் இந்தியாவில் நாட்டிற்கு புதிய சக்தி, வேகம் மற்றும் அளவைக் கொடுக்க தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய அங்கமாக மாற்றி இருக்கிறோம். நாடு உருவாக்கிய வலுவான யூபிஐ கட்டமைப்பின் உதவியுடன் பல லட்சம் கோடி ரூபாய் ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றப்படுகிறது. குறிப்பாக பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் தற்போது அரசிடம் இருந்து நேரடியாக உதவி பெறுகின்றனர் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
India Drone Mahotsav Festival: Proud about make in india and More says PM Modi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X