யாரு சாமி அவன்.. வெறும் ரூ.10999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 1TB மெமரி.. லெதர் பேனல்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்கும் விதமாக 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 1டிபி மெமரி, டைமன்சிட்டி சிப்செட் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்கள், லெதர் பேக் டிசைன் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) போன் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specifications): இந்த ஹாட் மாடலில் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 1080பி ஹைபர்விஷன் (1080P HyperVision) மற்றும் ஐ கேர் மோட் (Eye Care Mode) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, வீடியோ மற்றும் கேமிங் அவுட்புட் பக்காவாக இருக்கும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) வருகிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் மற்றும் மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஹாட் 30 5ஜி போனில் 2 வேரியண்ட்கள் வருகின்றன.
ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நைட்போட்டோகிராபி சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு ஏஐ லென்ஸ் (AI Lens) உடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. குவாட் எல்இடி சப்போர்ட் உள்ளது. இந்த கேமராவில் சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஃபிலிம் மாஸ்டர் (Flim Master) போன்ற பீச்சர்கள் வருகின்றன. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Dual Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் IP53 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனில் மிரளவிடும் பீச்சராக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. தொடர்ந்து 21 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும். இதில் அல்ட்ரா பவர் சேவிங் மோட் (Ultra Power Saving Mode) மூலம் 5 சதவீத சார்ஜில் 24 மணி நேரத்துக்கு ஸ்டான்ட்பை கிடைக்கும்.
இந்த போனில் க்நைட் பிளாக் (Knight Black), அரோரா ப்ளூ (Aurora Blue) மற்றும் லெதர் பேக் கொண்ட மியாமி ஆரஞ்ச் (Miami Orange) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1000 டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்ட்டில் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications