MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

|

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) ஆதரவில் இயங்கும் நிறுவனம், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஒரு கேமரா ட்ரோன் (Camera Drone) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ட்ரோன் டிவைஸிற்கான பெயரை நிறுவனம் ட்ரோனி (Dhroni) என்று பெயரிட்டுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், இந்தியாவில் உள்ள ட்ரோன் நிறுவனங்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.

எம்.எஸ். தோனி அறிமுகம் செய்த ட்ரோனி ட்ரோன் (Droni Drone).!

எம்.எஸ். தோனி அறிமுகம் செய்த ட்ரோனி ட்ரோன் (Droni Drone).!

சென்னையில் நடந்த குளோபல் ட்ரோன் எக்ஸ்போவில் (Global Drone Expo) இந்த புதிய கேமரா ட்ரோன் காட்சிப்படுத்தப்பட்டது. இது ஏராளமான அம்சங்கள் மற்றும் திறன்களுடன் வருகிறது.!

இந்த புதிய ட்ரோனி ட்ரோனின் (Droni Drone) அம்சங்கள் மற்றும் சிறப்புக்கள் என்ன என்பதைப் பார்க்கலாம். இந்த ட்ரோன்கள்- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமாகும். த்ரோனி என்பது பேட்டரியில் இயங்கும் ட்ரோன் (Battery Powered Drone) ஆகும்.

மேட் இன் இந்தியா ட்ரோன்-ஆ இந்த

மேட் இன் இந்தியா ட்ரோன்-ஆ இந்த "ட்ரோனி ட்ரோன்".!

இந்த புதிய ஆளில்லா விமானமான ட்ரோனி ட்ரோன், இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைப்படுத்தாடும் என்றும், இந்தியர்களுக்கு வாங்குவதற்குக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் (Made in India Drone) தயாரிப்பாகும்.

இந்த ட்ரோனி ட்ரோனின் முதன்மை செயல்பாடு கண்காணிப்பாக இருக்கும் என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய புதிய ட்ரோன் பற்றிய கூடுதல் தகவல்களை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

புதிய ட்ரோனி ட்ரோனின் விலை வெளியானதா?

புதிய ட்ரோனி ட்ரோனின் விலை வெளியானதா?

MS Dhoni அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ட்ரோனி ட்ரோனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ட்ரோன் பற்றிய அணைத்து தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ட்ரோனி ட்ரோன் பற்றி கருடா ஏரோஸ்பேஸ் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம், "எங்கள் ட்ரோன் ஒரு உள்நாட்டு ட்ரோன், அது செய்யக்கூடிய கண்காணிப்பு பயன்பாடுகளில் நெகிழ்வானது.

தோனி தான் இந்த நிறுவனத்திற்கு உரிமையாளரா?

தோனி தான் இந்த நிறுவனத்திற்கு உரிமையாளரா?

நம்பமுடியாத திறமையுடன் கூடுதலாக, இது அதிநவீன கட்டுமான நுட்பங்களைக் கொண்டுள்ளது மற்றும் விதிவிலக்காக உயர் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது." என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

தோனி இந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு பொது முகமாக மட்டுமல்லாமல், நிறுவனத்தில் முதலீட்டாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.! இந்த Samsung 5G போன் மீது ரூ.19,000 தள்ளுபடியா? வாங்க வொர்த்-ஆ.! இல்லையா?அடேங்கப்பா.! இந்த Samsung 5G போன் மீது ரூ.19,000 தள்ளுபடியா? வாங்க வொர்த்-ஆ.! இல்லையா?

தோனியின் ஐடியா.! ​​விவசாயிகளுக்கு ட்ரோன்கள் எப்படி உதவ போகிறது?

தோனியின் ஐடியா.! ​​விவசாயிகளுக்கு ட்ரோன்கள் எப்படி உதவ போகிறது?

கோவிட்-19 லாக்டவுன் நேரத்தின் போது, ​​தோனி விவசாயத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருந்தபோது, ​​விவசாயிகளுக்கு ட்ரோன்கள் வழங்கக்கூடிய மதிப்பை உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.

அதேபோல், இந்திய விமானப்படையின் முன்னாள் விங் கமாண்டர் மற்றும் இந்திய ட்ரோன் சங்கத்தின் தற்போதைய தலைவரான ஆனந்த் குமார் தாஸ் கூறியதாவது, கருடா ஏரோஸ்பேஸுடன் இணைந்து குளோபல் ட்ரோன் எக்ஸ்போவை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

விவாசகிகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கிசான் ட்ரோன் (Kisan Drone).!

விவாசகிகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கிசான் ட்ரோன் (Kisan Drone).!

இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மற்றொரு புத்தம் புதிய தயாரிப்பான கிசான் ட்ரோனும் (Kisan Drone) காட்சிக்கு வைக்கப்பட்டது. இது விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.

இந்த கிசான் ட்ரோன் உதவியோடு விவசாயிகள் ஒரே நாளில் மூன்று ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. கண்காணிப்பு, நில ஆய்வுகள், பயிர்களை வளர்ப்பது, சோலார் பேனல்களை சுத்தம் செய்வது போன்ற பல விஷயங்களை இந்த ட்ரோன்கள் செய்கின்றன.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

இந்தியாவில் ட்ரோன் கலாச்சாரம் வளருமா?

இந்தியாவில் ட்ரோன் கலாச்சாரம் வளருமா?

கருடா ஏரோஸ்பேஸ் தயாரித்த இந்திய ட்ரோன்களுக்கான தேவை பல சாத்தியமான பயன்பாடுகளில் தேவைப்படுகிறது என்பதனால், இந்தியாவில் விரைவில் ட்ரோன் கலாச்சாரம் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா இப்போது மாநகராட்சி வழங்கிய ஆய்வு ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்துகிறது. கருடா நிறுவனம் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்திய ஆயுதப் படை, Swiggy மற்றும் MapMyIndia போன்றவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
MS Dhoni Launched Made In India Battery Powered Drone Called Droni At The Global Drone Expo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X