ஆன்லைனில் ஆர்டர் செய்த Drone.. மாறாக கம்பெனி கொடுத்த ஒரு அதிசிய பொருள்!

|

நேரில் சென்று பொருட்கள் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தான் சிறந்தது என்ற முடிவுக்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வந்து விட்டனர். நேரில் சென்று வாங்கும் விலையை விட ஆன்லைன் போர்ட்டல்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். குறிப்பாக பண்டிகை காலத்தில் வழங்கப்படும் அதீத சலுகைகளை முன்னிட்டு இந்த காலக்கட்டங்களில் ஆர்டர்கள் அதிகரிப்பது வழக்கம்.

இதுதான் அதிர்ச்சியாக உள்ளது..

இதுதான் அதிர்ச்சியாக உள்ளது..

எந்த பகுதியில் இருந்தாலும் இருந்த இடத்திலேயே எந்த ஒரு பொருளையும் ஆர்டர் செய்யலாம். ஆன்லைன் ஆர்டர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

குவியும் கோடிக்கணக்கான ஆர்டர்களில் ஒரு சிலவற்றில் குழப்பங்கள் ஏற்படுவது நிறுவனங்களுக்கு சிக்கலாக அமைகிறது. ஒருசிலவற்றில் பிழைகள் என்பது இயல்பு தானே என்றாலும் ஆர்டர் செய்த பொருளுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பொருளை பெறுவது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன்படியான ஒரு நிகழ்வை தான் பார்க்கப் போகிறோம்.

ட்ரோன் ஆர்டர் செய்த நபர்..

ட்ரோன் ஆர்டர் செய்த நபர்..

குறிப்பிட்ட முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் இதுபோன்ற சிக்கலை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் Meesho-வும் இணைந்துள்ளது.

Meesho தளத்தில் ஒருவர் ட்ரோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளதார். ஆர்டர் செய்த பொருள் டெலிவரிக்கு வந்துள்ளது. பார்சலை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். தொடர்ந்து வீடியோ எடுத்தப்படி பார்சலை பிரித்து பார்த்துள்ளார். இதில் அவர் சந்தேகம் உண்மையாகி இருக்கிறது. நடந்ததை சற்று உன்னிப்பாக பார்க்கலாம்.

மீஷோ தளத்தில் ட்ரோன் ஆர்டர்..

மீஷோ தளத்தில் ட்ரோன் ஆர்டர்..

பீகார் மாநிலம் நாளந்தாவின் பர்வால்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சேத்தன் குமார். இவர் மீஷோ தளத்தில் ட்ரோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த ட்ரோன் டெலிவரிக்கு வந்துள்ளது. டெலிவரி பார்சலை பார்த்த சேத்தன் குமார் சந்தேகம் அடைந்துள்ளார்.

வீடியோவாகவும் பதிவு செய்த சேத்தன் குமார்..

வீடியோவாகவும் பதிவு செய்த சேத்தன் குமார்..

இதையடுத்து டெலிவரி செய்ய வந்து நபரையே பார்சலை பிரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். டெலிவரி பாய் பார்சலை பிரிப்பதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அப்படி பார்சலை பிரித்து பார்த்த போது அதற்குள் உருளைக்கிழங்குகள் இருந்திருக்கிறது.

இந்த வீடியோவானது 'அன்சீன் இந்தியா' என்ற சமூகவலைதள கணக்கில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

இதில் என்ன பலன்?

டெலவரி நபர் பார்சலை பிரித்து கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் உள்ள சிலர் அவரை சூழுகின்றனர்.

அப்போது சேத்தன்குமார் டெலவரி நிர்வாகியிடம் சில கேள்வி எழுப்பிகிறார். அதற்கு அந்த டெலிவரி நிர்வாகி பாவமாக அச்சத்தோடு பதிலளிக்கிறார்.

மரியாதையாக சில கேள்விகளை எழுப்பி பாதுகாப்பாக அனுப்பி வைத்தாலும். டெலிவரி பாய் இடம் கேள்வி எழுப்பி என்ன பலன் என்ற கேள்வி எழுகிறது.

தனது வாழ்வாதாரத்தை காப்பதற்கு அன்றாடம் வெயிலில் அலைந்து திரிந்து உழைக்கும் நபரிடம் கேள்வி எழுப்புவதோடு அவரின் முகத்தை இந்த வீடியோவில் காட்டுவது என்பது சற்று சஞ்சலம் தான்.

அதிர்ச்சி அடைந்த நபர்..

அதிர்ச்சி அடைந்த நபர்..

ஆன்லைன் ஆர்டர்களில் இதுபோன்ற நிகழ்வு அவ்வப்போது நேர்ந்து வருகிறது. உள்நாட்டில் ஆவது பரவாயில்லை வெளிநாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் திகைப்பூட்டும் வகையில் இருக்கிறது.

நியூயார்க்கை சேர்ந்த பெஞ்சமின் ஸ்மிதி என்ற நபர் டிரஸ் ஆர்டர் செய்திருக்கிறார். அவருக்கு அந்த பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டெலிவரி பாக்ஸை திறந்து பார்த்த போது அதற்குள் சில புழுக்கள் நெளிந்து ஓடியுள்ளது. இதை பார்த்த அந்த நபர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

திகைத்து போன நபர்..

திகைத்து போன நபர்..

அதேபோல் இந்த நிகழ்வு நடந்தது 2020 ஆம் ஆண்டு என்றாலும் இது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று. கொரோனா பரவல் பீதியை பரப்பிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது.

அப்போது அமெரிக்காவின் இல்லினோயிஸ் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரியா எல்லிஸ் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோட்டத்தை அலங்கரிக்க வண்ணக் கொடிகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்துள்ளது.

பார்சலை பிரித்து பார்த்த நபர் திகைத்து போகியுள்ளார். காரணம் அந்த பார்சலுக்குள் பாக்கெட் ஒன்று இருந்துள்ளது. அந்த பாக்கெட்டில் Biohazard (உயிருக்கு ஆபத்து) என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாக்கெட்டுக்குள் ஒருவரின் கொரோனா பரிசோதனை மாதிரி இருந்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு..

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு..

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் எதையும் வேண்டாம் என்று புறக்கணித்துவிட முடியாது. காலத்தோடு ஒன்றி ஓடுவது அவசியமாக இருக்கிறது. அதே சமயத்தில் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம்.

மேலும் பெறப்படும் கோடிக்கணக்கான ஆர்டர்களில் ஒரு சில பிழைகள் இயல்பு என்றாலும் அதற்கு நிறுவனம் தரப்பில் இருந்து கிடைக்கும் சரியான பதிலையும் தீர்வையும் தான் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Image Source: Twitter

Best Mobiles in India

English summary
Man Ordered Drone Camera in Meesho But Receives Potatoes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X