Home
News

பிரமாண்டமாக நடத்தப்பட்ட லைட் ஷோ- அடுத்தடுத்து கீழே விழுந்த ட்ரோன்கள்: பதறியடித்து ஓடிய மக்கள்!

சீனாவில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ட்ரோன்கள் மூலம் லைட் ஷோ நடத்த தீர்மானம் செய்யப்பட்டது. அப்போது ட்ரோன்கள் வானில் இருந்து விழத் தொடங்கியது. ட்ரோன்கள் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. அதன் இயக்கத்திற்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் அந்த பகுதிகளை சார்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.

ட்ரோன்கள் மூலம் லைட் ஷோ நிகழ்ச்சி

ட்ரோன்கள் மூலம் லைட் ஷோ நிகழ்ச்சி

சீனாவில் ஜெங்ஷோ என்ற இடத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. அதில் ட்ரோன்கள் மூலம் லைட் ஷோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஏராளமான ட்ரோன்கள் பறக்க விடப்பட்டது. அதில் திடீரென கட்டுப்பாடுகளை இழந்த ட்ரோன்கள் கீழே விழத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் பதறி ஓடத் தொடங்கினர்.

ஷாப்பிங் மாலின் தொடக்க விழா

சீனாவில் ஒரு ஷாப்பிங் மாலின் தொடக்க விழா ஒன்றில் ட்ரோன்கள் மூலம் லைட் ஷோ நடுவானில் நடத்தப்பட்டது. அதில் ட்ரோன்கள் வானில் பறக்க விடப்பட்டன. அப்போது லேசாக மழை பெய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ட்ரோன்கள் பறப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து ட்ரோன்கள் கீழே விழத் தொடங்கியது.

கட்டுப்பாடை இழந்த ட்ரோன்கள்

கட்டுப்பாடை இழந்த ட்ரோன்கள்

கட்டுப்பாடை இழந்த ட்ரோன்கள் கட்டிடங்கள் மீது மோதி கீழே அடுத்தடுத்து விழுந்தது. இதை பார்த்த மக்கள் ஓடத் தொடங்கினர். அது சிலர் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது. ட்ரோன் லைட் ஷோவில் இருந்து பகிரப்பட்ட வீடியோவில், சில நிமிடங்களுக்கு பிறகு ட்ரோன்கள் கீழே விழத் தொடங்கியது. தெருவின் முனையில் மற்றொரு முனைக்கு மக்கள் ஓடத் தொடங்கினர். அதில் சிலர் கவனமாக இருங்கள் எனவும் பின்னாடி வாருங்கள் எனவும் அலறுவதை கேட்க முடிகிறது. இந்த ஒளி நிகழ்ச்சியை காண்பதற்கு பெண்கள், குழந்தைகள் என 5 ஆயிரம் பேர் வீதிகளில் திரண்டிருந்தனர். விபத்தில் ஏராளமானோர் பதறி சிதறி ஓடினர். விபத்துக்கு சரியான காரணம் தெரியவில்லை. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பெரிதளவு வைரலாகி வருகிறது. அதேபோல் ட்ரோன்கள் விழுந்ததற்கான சரியான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. மழை பெய்ததாகவும், அதிகமாக வீசப்பட்ட காற்றின் காரணமாகவும் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ட்ரோன் விதிகள் 2021

ட்ரோன் விதிகள் 2021

ட்ரோன் விதிகள் 2021-ல் வான்வழிச் சான்றிதழ், தனித்துவமான அடையாள எண், முன் அனுமதி மற்றும் ட்ரோன்களின் ஆராய்ச்சி மற்ரும் மேம்பாட்டில் (R&D) ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தொலைநிலை பைலட் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் நீக்கப்பட்டு விட்டது.

கணிசமான காகித நடைமுறை

கணிசமான காகித நடைமுறை

ட்ரோன் இயக்க கணிசமான காகித நடைமுறை, இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பசுமை மண்டலங்களில் எண்ணிக்கை மிகக் குறைவு எனவும் கருத்துகள் வெளியானது. இதையடுத்து ஆளில்லா விமான அமைப்பு முறை விதிகள் 2021-க்கு பதிலாக தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகள் 2021-ஐ மாற்றியமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

புதிய தேசிய கொள்கை

புதிய தேசிய கொள்கை

தற்போது புதிய தேசிய கொள்கையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ட்ரோன்களை சொந்தமாக வைத்து இயக்குவது எளிதாகவும் மலிவானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. தாராளமயமாக்கப்பட்ட பதிப்பில் ட்ரோன் பதிவு செய்வதற்கு மற்றும் உரிமம் விண்ணப்பிக்கும் முன் பாதுகாப்பு அனுமதி கோருவதற்கு ட்ரோன் ஆபரேட்டருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யவும் இயக்கவும் அனுமதி

இறக்குமதி செய்யவும் இயக்கவும் அனுமதி

அதேபோல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் ட்ரோன்கள் மற்றும் அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்யவும் இயக்கவும் அனுமதிக்கப்படும். மேலும் இவைகள் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மூலம் கட்டுப்படுத்தப்படும். ட்ரோன் விதிகள் 2021-ல் வான்வழிச் சான்றிதழ், தனித்துவ அடையாள எண், முன் அனுமதி மற்றும் ட்ரோன்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர்&டி) ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான ரிமோட் பைலட் உரிமம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் நீக்கப்பட்டு விட்டது.

Best Mobiles in India

English summary
Drones Falling From the Sky during a Light Show at the Shopping Mall Opening Ceremony
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X