இது தொழில்நுட்ப காலம்., இனி அவ்வளவு கட்டுப்பாடு இல்லை: ட்ரோன்களை ஓட்டி பழகுங்க- புதிய ட்ரோன் விதிகள்!

|

ட்ரோன் விதிகள் 2021-ல் வான்வழிச் சான்றிதழ், தனித்துவமான அடையாள எண், முன் அனுமதி மற்றும் ட்ரோன்களின் ஆராய்ச்சி மற்ரும் மேம்பாட்டில் (R&D) ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தொலைநிலை பைலட் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் நீக்கப்பட்டு விட்டது.

ட்ரோன் இந்தியா

ட்ரோன் இந்தியா

ட்ரோன் இயக்க கணிசமான காகித நடைமுறை, இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பசுமை மண்டலங்களில் எண்ணிக்கை மிகக் குறைவு எனவும் கருத்துகள் வெளியானது. இதையடுத்து ஆளில்லா விமான அமைப்பு முறை விதிகள் 2021-க்கு பதிலாக தாராளமயமாக்கப்பட்ட ட்ரோன் விதிகள் 2021-ஐ மாற்றியமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

ட்ரோன்களை சொந்தமாக வைத்து இயக்குவது எளிது

ட்ரோன்களை சொந்தமாக வைத்து இயக்குவது எளிது

தற்போது புதிய தேசிய கொள்கையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ட்ரோன்களை சொந்தமாக வைத்து இயக்குவது எளிதாகவும் மலிவானதாகவும் மாற்றப்பட்டுள்ளது. தாராளமயமாக்கப்பட்ட பதிப்பில் ட்ரோன் பதிவு செய்வதற்கு மற்றும் உரிமம் விண்ணப்பிக்கும் முன் பாதுகாப்பு அனுமதி கோருவதற்கு ட்ரோன் ஆபரேட்டருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிபந்தனைகள் நீக்கம்

பல்வேறு நிபந்தனைகள் நீக்கம்

அதேபோல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் ட்ரோன்கள் மற்றும் அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்யவும் இயக்கவும் அனுமதிக்கப்படும். மேலும் இவைகள் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் மூலம் கட்டுப்படுத்தப்படும். ட்ரோன் விதிகள் 2021-ல் வான்வழிச் சான்றிதழ், தனித்துவ அடையாள எண், முன் அனுமதி மற்றும் ட்ரோன்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர்&டி) ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான ரிமோட் பைலட் உரிமம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் நீக்கப்பட்டு விட்டது.

கட்டுப்படியாகும் வகையில் கட்டணம்

கட்டுப்படியாகும் வகையில் கட்டணம்

கட்டணங்கள் ட்ரோன்கள் அளவின் அடிப்படையில் இல்லாமல் கட்டுப்படியாகும் வகையில் குறைத்து அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் காலத்திற்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களுடன் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுமை மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள்

புதுமை மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள்

இந்த புதிய ட்ரோன் விதிகளானது இந்த துறையில் பணிபுரியும் தொடக்கநிலை மற்றும் இளைஞர்களுக்கு பெரிதும் உதவும். இந்த தாராளமயமானது புதுமை மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகளை திறக்கும். இது இந்தியாவை ட்ரோன் மையமாக மாற்ற புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் இந்தியாவின் பலத்தை மேம்படுத்த உதவும் என பிரதமர் மோடி டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மண்டல எல்லை அளவுகள் குறைப்பு

மண்டல எல்லை அளவுகள் குறைப்பு

வான தளத்தை மின்னணு சாதனங்களுக்கு பயன்படுத்துவதற்காக ஒற்றை சாளர முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மிகக் குறைவான மனித இடையூறுகள் உடன் தன்னிலை அனுமதிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பசுமை மண்டலங்களில் ட்ரோன்களை இயக்குவதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை. மின்னணு வான தளத்திற்கு பச்சை, மஞ்சள் மற்றும் சிறப்பு மண்டலங்கள் என அமைக்கப்பட்டுள்ளது. இதில் விமான நிலைய பகுதியில் இருந்து 45 கிலோ மீட்டர் ஆக இருந்த மஞ்சள் மண்டலம் 12 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களானது தங்களின் பசுமை மண்டலத்தில் இருக்கும் தங்களது சொந்த இடத்திலும் வாடகை இடத்திலும் ட்ரோன்களை இயக்கலாம். இதற்கு எந பிரத்யேக அடையாள எண் மற்றும் தொலைத தூர பைலட் உரிமங்கள் தேவையில்லை. இறக்குமதி, ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படும் ட்ரோன்களுக்கு பிரத்யேக அடையாள எண் தேவையில்லை என்றாலும் ட்ரோன்கள் இந்தியாவில் இயக்கப்படும் போது வகை சான்றிதழ் தேவைப்படும்.

Best Mobiles in India

English summary
Liberalized drone rules: Now you can buy and operate your own drone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X