சத்தமில்லாமல் இருங்க சீனா: எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க இந்தியாவின் புதிய முயற்சி.!

|

தற்போது உள்ள புதிய புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சில புதிய தொழில்நுட்ப கருவிகள் சிறந்த பாதுகாப்பு வசதியை உறுதிசெய்கிறது என்றே கூறலாம்.

 ஆளில்லா குட்டி விமானங்கள்

ஆளில்லா குட்டி விமானங்கள்

இந்நிலையில் நமது இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்த அமெரிக்காவில் இருந்து அதிநவீன ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறியது என்னவென்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

நம்பிக்க அதான எல்லாம்! 1,000,000 தயாரிப்புகள் விற்று அசத்திய Nothing: சுவாரஸ்யம் என்ன தெரியுமா?நம்பிக்க அதான எல்லாம்! 1,000,000 தயாரிப்புகள் விற்று அசத்திய Nothing: சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

உன்னிப்பாகக் கண்காணிக்க இந்த ட்ரோன்கள் உதவின

உன்னிப்பாகக் கண்காணிக்க இந்த ட்ரோன்கள் உதவின

அதாவது கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் 'எம்.க்யூ.9பி ட்ரோன்' என்ற அதிநவீன ஆளில்லா குட்டி விமானங்கள் இரண்டை நமது இந்தியக் கடற்படை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வந்தது. குறிப்பாக இந்தியப் பெருங்கடலை உன்னிப்பாகக் கண்காணிக்க இந்த ட்ரோன்கள் உதவின' என்றார்.

எங்கள பார்த்தா எப்படி தெரியுது? எங்கள பார்த்தா எப்படி தெரியுது? "தேவை இல்லாத ஆணிகளை புடுங்க" இந்திய மார்க்கெட்டுக்கு வந்த சைனீஸ் போன்!

சீனா மற்றும் பாகிஸ்தான்

சீனா மற்றும் பாகிஸ்தான்

இந்நிலையில் நமது அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க இன்னும் அதிகமான அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அட்மிரல் ஹரிகுமார்.

திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?

 அமெரிக்காவிடம் வாங்க முடிவு

அமெரிக்காவிடம் வாங்க முடிவு

இதன் முதற்கட்டமாகச் சீன எல்லையிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் நாட்டின் கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த 2400 கோடி ரூபாய் செலவில் சுமார் 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார்.

482 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியது

குறிப்பாக முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அதிநவீன ட்ரோன்கள் 35 மணி நேரம் வரை காற்றில் பறக்கும். பின்பு 1900 கி.மீ பரப்பளவில் மணிக்கு 482 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியது.

டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!டிரைவிங் லைசென்ஸ்-இல் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா? இந்த டெக்னிக்கை ட்ரை பண்ணி பாருங்க!

அமெரிக்க ராணுவம்

இந்த ட்ரோன்கள் மூலம் அமெரிக்க ராணுவம் பல சாதனைகளைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சுருக்கமாகக் கூறினால் இந்த அதிநவீன ட்ரோன்கள் வாயிலாக எதிரிகளின் ட்ரோன்களை எளிதில் கண்டுபிடித்து வீழ்த்த முடியும்.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!

நம் சுயசார்பு

இதுதவிர இந்த ட்ரோன்கள் உதவியுடன் பல அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதுடன், ரகசியமாகச் சென்று தாக்குதல் நடத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் நமது சுயசார்பு கொள்கையில் இருந்தும் விலகவில்லை.

பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!பலருக்கும் தெரியாது இப்படி ஒரு Jio பிளான் இருக்குனு! கம்மி விலையில் நினைச்சு பார்க்காத டேட்டா, 14 OTT சந்தா!

 2047-ம் ஆண்டுக்குள்..

2047-ம் ஆண்டுக்குள்..

அதாவது தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்தாலும், வரும் 2047-ம் ஆண்டுக்குள் தற்சார்பு திட்டத்தின் கீழ், நமக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் அதிநவீன தளவாடங்களை நாமே தயாரிப்பது என்றே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்று கூறினார் கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார்.

அதேபோல் இதுபோன்ற அதிநவீன ட்ரோன்கள் சிறந்த பாதுகாப்பு வசதியை உறுதி செய்கிறது. மேலும் இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்குத் தான் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
India plans to buy 30 armed Predator drones from US: Navy chief: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X