Home
News

உங்கள் EPF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? ஆன்லைன், ஆப்லைனில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்..

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி EPF கணக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த EPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் ஆர்கனைசேஷன் ஆனது நிதி பாதுகாப்பதிலும் நிலையான வாழ்க்கையை அமைத்துத் தருவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

அதாவது ஊழியர்கள் மற்றும் முதலாளிகளும் குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இந்த இபிஎப் அக்கவுண்ட்டில் செலுத்துகின்றனர். மேலும் இந்த நிதி சில காலங்களில் பெரும் தொகையாக வளர்ச்சி அடைகிறது. அதன்பின்பு இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுகால செலவீனங்கள் மற்றும் நிதி உதவியைச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் EPF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்..

அதேபோல் ஓய்வுகாலத்துக்காக இபிஎப் வசூலிக்கப்பட்டாலும் சில அவசரக் காலத் தேவைக்காக அந்தப்பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதுதவிர இபிஎப் திட்டத்தில் பல நன்மைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இபிஎப் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், மாதந்தோறும் தங்கள் அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை வீட்டில்ருந்தவாரே தெரிந்து கொள்ள முடியும்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது உங்கள் இபிஎப் பேலன்ஸை ஆப்லைன், ஆன்லைனில் எப்படி சரிபார்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அதவாவது இபிஎப் பேலன்ஸை ஆன்லைனில் சரிபார்க்க இரண்டு முக்கிய முறைகள் உள்ளன. இவை இரண்டுக்கும் உலகளாவிய கணக்கு எண் (யூஏஎன்) மற்றும் இணைய அணுகல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் EPF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்..

EPFO பாஸ்புக் போர்டல் (EPFO Member Passbook portal): உங்கள் இபிஎப் பேலன்ஸை பார்க்க EPFO உறுப்பினர் பாஸ்புக் (EPFO ​​Member Passbook) போர்டலை அணுகவும். இந்த தளத்தில் எப்படி இபிஎப் பேலன்ஸை பார்ப்பது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முதலில் அதிகாரப்பூர்வ உறுப்பினர் பாஸ்புக் போர்ட்டல் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு யூஏஎன் (UAN) எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் பிஎப் கணக்கின் மீது கிளிக் செய்து, அதில் View PF Passbook என்பதை கிளிக் செய்தால் உங்களது பேலன்ஸ் தெரிந்துவிடும்.

உமாங் ஆப் (UMANG App): உமாங் ஆப் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஒரு ஆப் வசதியாகும். குறிப்பாக பொதுமக்கள் அரசு துறை சம்பந்தமான சேவைகளுக்கு எளிதான முறையில் இந்த ஆப் வசதியைப் பயன்படுத்தலாம். அதேபோல் இந்த உமாங் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து, அதில் EPFO என்பதைத் தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கின் UAN எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து சைன் இன் செய்ய வேண்டும். இப்போது உங்களின் இபிஎப்பேலன்ஸ்-ஐ எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

உங்கள் EPF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்..

எஸ்எம்எஸ் (SMS) வசதி: உங்களிடம் UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருக்கிறது என்றால், அதில் இருந்து எஸ்எஸ்எம் அனுப்புவதன் மூலம் இபிஎப் பேலன்ஸ் குறித்த தகவலைத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்களது மொபைல் எண்ணில் இருந்து EPFOHO UAN ENG என்ற வடிவில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய உடன் பேலன்ஸ் விவரங்கள் எளிமையாகத் தெரிந்துவிடும்.

மிஸ்டுகால்டு (Missed call) வசதி: உங்களது UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் அனுப்புவதன் மூலம் உங்களது இபிஎப் பேலன்ஸை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். உடனே உங்களின் கணக்கிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துவிடும், அதில் பிஎப் பேலன்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPF Balance Check: Here are steps to check your EPF balance online and offline
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X