இரண்டு பகல் காத்திருந்தால் தூது வரும்.. Apple சொல்லும் ரகசிய செய்தி!

|

தொழில்நுட்ப உலகில் 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வு Apple's Far Out தான். இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 14, ஏர்பாட்ஸ் ப்ரோ 2, வாட்ச் சீரிஸ் 8 உள்ளிட்ட ப்ரீமியம் சாதனங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஃபார் அவுட் மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வில் நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று ஐபோன் ஆகும். இந்த நிகழ்வு எப்போது நடக்கிறது, அப்படி என்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு

மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வு

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வை நடத்துவதற்கு ஆப்பிள் தயாராகிவிட்டது. இந்த நிகழ்வானது செப்டம்பர் 7 ஆம் தேதி (நாளை மறுநாள்) நடக்க இருக்கிறது. மெய்நிகர் நிகழ்வாக வெளியீடு நடத்த இருக்கிறது.

இந்த நிகழ்வில் நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் அனைத்தும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரலையில் அறிமுக நிகழ்வை பார்ப்பது எப்படி?

நேரலையில் அறிமுக நிகழ்வை பார்ப்பது எப்படி?

ஆப்பிள் ரசிகர்கள் இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் இருக்கிறீர்கள் என்பது அறிந்ததே. இந்த நிகழ்வை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளம் உட்பட பிற சமூகவலைதளங்களில் பார்க்கலாம்.

செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்ட வீடியோவாக நிறுவனத்தின் சமூகவலைதளங்களில் இருக்கும்.

ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்கள் அறிமுகமா?

ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்கள் அறிமுகமா?

இந்த நிகழ்ச்சியில் என்னென்ன சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இருப்பினும் புதிய ஐபோன் தொடர் வெளியாகும் என்பது தகவலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்கள் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 14 சீரிஸ்

ஐபோன் 14 சீரிஸ்

இந்த ஆண்டும் ஆப்பிள் நான்கு புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் மினி மாடல் இருக்காது என கூறப்படுகிறது.

தகவலின்படி, iPhone 14, iPhone 14 Plus/iPhone 14 Max, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகியவை இடம்பெறும் என கணிக்கப்படுகிறது.

சரி இதில் என்ன சுவாரஸ்யம் என்ற கேள்வி வரலாம். காரணத்தை பார்க்கலாம் வாங்க.

விண்மீன்கள் நிறம்பிய லோகோ

விண்மீன்கள் நிறம்பிய லோகோ

அறிமுக நிகழ்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஆப்பிள்.. அதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்தது.

அதில் ஆப்பிள் லோகோ விண்மீன் தோற்றங்களால் நிரம்பி இருந்தது. மேலும் அதில் far out எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே இந்த ஐபோன் மாடல் நேரடியாக சாட்டிலைட் இணைப்பை பெறும் என ஆப்பிள் ஆய்வாளர்கள் தரப்பில் தகவல் வெளியானது.

விண்மீன்கள் நிறம்பிய லோகோ என்பது ஐபோன் 14., சாட்டிலைட் இணைப்பை பெறும் என்பதை ஆப்பிள் ரகசியமாக சொல்கிறது எனவும் தகவல்கள் வெளியானது.

செயற்கைக்கோள் நுட்பம்

கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான மீடியா அண்ட் ஃபைனான்ஸ் அசோசியேட்ஸ் இன் செயற்கைக்கோள் தகவல் தொடர்பாளர் ஆலோசகர் டிம் ஃபாரார் மூலம் புதிய ஐபோன் 14 சீரிஸ் இன் செயற்கைக்கோள் நுட்பம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுக நிகழ்வு குறித்த புகைப்படத்தில் இந்த நுட்பம் குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐபோன் மாடல்களில் செயற்கைக்கோள் இணைப்பு விருப்பத்தை பெறுவதற்கு ஆப்பிள் குளோபல்ஸ்டாருடன் இணைந்து செயல்படும் எனவும் ஃபாரர் குறிப்பிட்டார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

பிரபல ஆப்பிள் ஆய்வாளரும், பத்திரிக்கையாளருமான மார்க் குர்மன் இந்த நுட்பம் குறித்து முன்னதாகவே தெரிவித்தார். இவர் வெளியிட்ட தகவலில் வாட்ச் ப்ரோ சாதனமும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பை பெறும் என குறிப்பிட்டார்.

அதேபோல் வரவிருக்கும் ஐபோன் 14 சாதனத்தின் செல்பி கேமரா கூடுதல் மேம்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டார்.

ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதுபோன்ற ஒவ்வொரு தகவலும் ஐபோன் 14 மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

Apple AirPods Pro 2

Apple AirPods Pro 2

இந்த நிகழ்வில் நிறுவனம் Apple AirPods Pro 2 சாதனத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 ஆனது ஆப்பிளின் H1 செயலி, லாஸ்லெஸ் ஆடியோ கோடெக் (ALAC) ஆதரவு, இன்-இயர் விங் டிப் டிசைன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8

வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் ப்ரோ, வாட்ச் எஸ்இ சாதனங்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பு முரட்டுத்தனமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த ஆப்பிள் வாட்ச்சில் உடல் வெப்ப நிலை சென்சார் உடன், கருவுறுதல் சம்பந்தமான விஷயங்களையும் கண்டறியும் என கூறப்படுகிறது.இதனுடன் புதிய ஐபேட்களும் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

எது எப்படியோ இன்னும் இரண்டு பகல் காத்திருந்தால் அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிந்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Apple 2022 Event: AirPods Pro 2, Watch Series 8 Might be Launching with iPhone 14

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X