ஜூலை 5 உறுதி: அமேசானின் புதிய தலைமை அதிகாரி பதவியேற்பு- ஜெஃப் பெசோஸ் நிலை என்ன?

|

அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி ஜூலை 5 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ் விலகுவதற்கான காரணம் மற்றும் புதிய சிஇஓ-வாக பதவியேற்பவரின் விளக்கம் குறித்து பார்க்கலாம்.

புதிய சிஇஓ பதவியேற்பு தினம்

புதிய சிஇஓ பதவியேற்பு தினம்

அமேசான் வெப் சர்வீஸ் தலைவராக இருக்கும் ஆண்டி ஜாஸ்ஸி, ஜூலை 5 ஆம் தேதிமுதல் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க உள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் க்ளவுட் கம்ப்யூட்டிங் வணிக வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இருந்தவர். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார். ஜூலை 5 ஆம் தேதி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி பதவியேற்பார் என ஜெஃப் பெசோஸ் அறிவித்தார்.

1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான்

1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமேசான்

அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

இந்தநிலைியல் அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார். 3 ஆம் காலாண்டில் இந்த பதிவி மாற்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகம் விற்பனை மையம்

புத்தகம் விற்பனை மையம்

1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தாலும் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் வெப் சர்வீசை தொடங்கி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர் தற்போது புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1997 ஆம் ஆண்டு அமேசானில் சேர்ந்தார்.

அமேசானில் தொடர்ந்து அங்கம் வகிப்பேன்

அமேசானில் தொடர்ந்து அங்கம் வகிப்பேன்

தனக்கு ஏணைய ஆற்றல் இருக்கிறது. டே ஒன் ஃபண்ட், தி பெசாஸ் எர்த் ஃபண்ட் போன்ற சில விஷயங்களில் ஈடுபட வேண்டிய நேரம் இது. ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு இது இல்லை எனவும் நிர்வாக தலைவராக அமேசானில் தொடர்ந்து அங்கம் வகிப்பேன் எனவும் ஜெப் பெசோஸ் குறிப்பிட்டார்.இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் வாழ்த்துகள், ஜெஃப் பெசோஸ் டே ஒன் மற்றும் எர்த் ஃபண்ட் ஆகியவற்றுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டார்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி

மேலும் முன்னதாக அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட் சியாட்டிலை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து கொண்ட அடுத்த ஆண்டு இருவரும் இணைந்து அமேசான் நிறுவனத்தை தொடங்கினர். அமேசான் ஆரம்ப கட்டத்தின் ஊழியர் குழுவில் மெக்கன்ஸியும் ஒருவராக இருந்தார்.

விவாகரத்து செய்து கொண்ட தம்பதி

விவாகரத்து செய்து கொண்ட தம்பதி

பின் அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்ஸி ஸ்காட் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டில் தங்கள் உறவை முடித்துக் கொள்ள முடிவு செய்து விவாகரத்து செய்து கொண்டனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்தனர்.

Best Mobiles in India

English summary
Amazon Founder Jeff Bezos Step Down as CEO: Andy Jassy Take Over New CEO Role on July 5

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X