பிரதமர் மோடி சொன்ன அந்த ஆப் என்ன தெரியுமா: ஆரோக்கிய சேது உங்களுக்கும் முக்கியம்!

|

ஆரோக்கிய சேது செயலியானது பிரதமர் மோடி அறிவுறுத்தியப்படி அனைவரும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அதன் பயன்பாடு குறித்து பார்க்கலாம்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அதேபோல் இந்தியாவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio பைபர் காம்போ பிளான் அறிமுகம்!

தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்திலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் மாநிலங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்திலும் முதல்முறையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்

ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்

ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்
இதையடுத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஆரோக்கிய சேது என்ற ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலி அரசு அறமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்கள் இருப்பிடம்( ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை காட்டும்.

அதிக ஆபத்து என எச்சரிக்கும்

அதிக ஆபத்து என எச்சரிக்கும்

இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து 6 தூரத்தில் நாம் இருந்தோம் என்றால் அது அதிக ஆபத்து என எச்சரிக்கும், இதையடுத்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்து உதவியை பெற வேண்டும்.

கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா

கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா

அதேபோல் இந்த செயலியில் கொரோனா ஆப் தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு, மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்

பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். பிரதமர் கூறும்போது, ‘‘உங்கள் பகுதியில் யாராவது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் செயலி அடையாளம் காட்டும். பல்வேறு மாநிலங்களின் உதவி எண்களும் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். இந்த செயலியை இரண்டு வாரங்களில் மட்டும் 1 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு

மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அப்போது அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்படி அறிவுரை விடுத்தார். அதேபோல் ஆரோக்கிய சேது செயலியில் கூறும் அறிவுரையை பின்பற்றும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Aarogya setu app importance., it can be used says PM modi

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X