Income Tax-ல் ஏமாற்றம்.. கேட்டதை கொடுக்காத Budget 2024.. 10 நாளாக குறைச்சுட்டோம்னு பெருமை வேற!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார். அப்போது வரி விதிப்பில் (Income Tax) எந்த மாற்றமும் இல்லை என்றும், அதே நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களை தக்கவைப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு அல்லது வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், அனைவரின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது, வரி செலுத்துவோர் பழையதையே தேர்வு செய்யலாம் என்று நிதியமைச்சர் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய வரி விதிப்பு நடைமுறை (New Regime Tax Slabs): 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது. ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் (பிரிவு 87A-ன் கீழ் வரி தள்ளுபடி கிடைக்கும்). ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் (பிரிவு 87A இன் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடி கிடைக்கும்)
இதேபோல ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரி விதிக்கப்படும். ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும். புதிய வரி விதிப்பில் உள்ள வரி விகிதங்கள் அனைத்து தனிநபர்களுக்கும் (தனிநபர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கும்) ஒரே மாதிரியாக இருக்கும்!

பழைய வரி விதிப்பு நடைமுறை (Old Regime Tax Slabs): ரூ.2.5 வரையிலான வருமானம், பழைய வரி முறையின் கீழ் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் பழைய வரி முறையின் கீழ் 5% வரி விதிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பழைய வரி முறையின்கீழ் 20% சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
தனிநபர் வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30% வரி விதிக்கப்படுகிறது. பழைய வரி விதிப்பில், 60 வயதுக்கு மேற்பட்ட, ஆனால் 80 வயதுக்கு குறைவான மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் வருமான வரி விலக்கு வரம்பு உள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க.. 2013 - 2014 ஆம் ஆண்டில் பணத்தை திரும்ப பெறுவதற்கான சராசரி நேரம் 93 நாட்களில் இருந்து கடந்த ஆண்டில் வெறும் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் சராசரி அசல் வருமானம் (Average Real Income) 50% அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








