Bhashini-ஐ வைத்து வித்தை காட்டிய மோடி.. தமிழ்ல தான் பேசுனாரு.. ஆனா மத்தவங்களுக்கு கேட்காது! அதெப்படி?
பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தமிழில் பேசி கைதட்டல்களை வாங்குவதும், சுற்றி இருக்கும் தமிழர்களை வியப்படைய வைப்பதும் ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் கூட சமீபத்தில் வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமத்தில் பேசியபோது.. அவரது "தமிழ் பேச்சு" முற்றிலும் வித்தியாசமாக இருந்தது!
வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக.. ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான ட்ரான்ஸ்லஷன் டூல் (Translation Tool) ஆன பாஷினியை (Bhashini) பயன்படுத்தி தமிழ் மொழியில் பேசினார்.

பாஷினி என்றால் என்ன? பாஷினி என்பது நிகழ்நேரத்தில் (Realtime) மொழிமாற்றம் செய்யக்கூடிய ஒரு ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் டூல் ஆகும். இது பாஷா இன்டர்ஃபேஸ் ஃபார் இந்தியா ( BHASa INterface for India) அல்லது டிஜிட்டல் இந்தியா பாஷினி (Digital India Bhashini) என்றும் அழைக்கப்படுகிறது.
இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பாஷினி ஏஐ டிரான்ஸ்லஷன் டூலை அறிமுகம் செய்ததே பிரதமர் நரேந்திர மோடி தான். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன்பிறகு இப்போது தான் நரேந்திர மோடி பாஷிணியை பயன்படுத்தி பேசியுள்ளார்.
பாஷினியை பயன்படுத்தி காசி தமிழ் சங்கமத்தில் நரேந்திர மோடி பேசிய போது, அங்கிருந்த தமிழர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டிவைஸ் மற்றும் இயர்போன்ஸ் வழியாக மோடியின் பேச்சை தமிழ் மொழியில் கேட்க முடிந்தது. அதாவது நிகழ்நேரத்தில் மோடியின் பேச்சு தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.
தனது உரையின் போது, "இதை நான் முதல் முறையாக பயன்படுத்துகிறேன், செயற்கை நுண்ணறிவு வழியிலான புதிய தொழில்நுட்பத்தை நாம் இங்கே பயன்படுத்துகிறோம். இது ஒரு புதிய தொடக்கமாகும், இது உங்களை சென்றடைவதை எளிதாக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று மோடி கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாஷினியின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் நாக்கின் காற்றுப்பை, இது 12 முதல் 14 மொழிகளில் ஆட்டோமேட்டிக் ஸ்பீச் ரிக்கனைசேஷன் (Automatic speech recognition), 22 மொழிகளில் டெக்ஸ்ட் ட்ரான்ஸ்லேஷன் (Text Translation) மற்றும் 14 மொழிகளில் ஸ்பீச் சிந்தஸிஸ் (Speech synthesis) உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குகிறது.
பாஷினி பிளாட்ஃபார்மில் ஜுகல்பந்தி என்கிற ஆப்பும் (Jugalbandi App) உள்ளது. இது கேள்விகளை அடையாளம் கண்டு, ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை பயன்படுத்தி பதில்களை வழங்க முடியும். இந்த அம்சம் டிஜிட்டல் கல்வியறிவு இல்லாத அல்லது படிக்க தெரியாத நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
"பாஷினியால் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து விரைவான, நியாயமான கேள்விகளுக்கான பதில்களையும் வழங்க முடியும். உங்கள் கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளிப்பதன் மூலமும், தகவல்களை எளிமையாக கொடுப்பதன் மூலம், இது பாரம்பரியமான தேடல் வசதிகளுக்கு முற்றுலும் அப்பாற்பட்டது" என்றும் அமிதாப் நாக் கூறியுள்ளார்.
பாஷினியின் தற்போதைய வெர்ஷன் (Current Version) குறிப்பிட்ட தலைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மற்ற தலைப்புகள் மற்றும் தகவல்களை உள்ளடக்கிய பல்வேறு வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதையும் அமிதாப் நாக் வெளிப்படுத்தி உள்ளார். பாஷினி ஆப் தற்போது ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டிலுமே பீட்டா வெர்ஷனாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பாஷினியின் நோக்கம் என்ன? பிற இந்திய மொழிகளை பேசுபவர்களுடன் தொடர்புகொள்ளும் போது, மக்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுவதற்கு பாஷினி உதவுகிறது. இதன் நோக்கம் இந்திய மொழிகளில் வசதியான மொழிபெயர்ப்பு சேவைகளை எளிதாக்குவது (Convenient translation services), குரல் அடிப்படையிலான அணுகலை இணைப்பது (Voice-based access) மற்றும் வட்டார மொழிகளின் (Vernacular languages) பயன்பாட்டை விரிவுபடுத்துவதாகும்.


Click it and Unblock the Notifications








