Home
News

இதெல்லாம் தேவையா கோபி? நாட்டு மக்களிடம் Tiranga Selfie கேட்கும் மோடி.. பதிவேற்றம் செய்வது எப்படி?

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) சமீபத்திய கோரிக்கையை பற்றி அறிந்த பின்னர்.. "ஐயா.. நாட்டுல 1008 பிரச்சனை போய்கிட்டு இருக்கு.. இதுக்கு நடுவுல திரங்கா செல்பீ (Tiranga Selfie) எடுத்து அதை அப்லோட் பண்ணுறது ரொம்ப முக்கியமா?" என்று உங்களில் சிலருக்கு கேட்க தோன்றலாம்.

இல்லையென்றால், பிரதமர் மோடியின் திரங்கா செல்பீ கோரிக்கை ஆனது உங்களின் ஆர்வத்தை தூண்டலாம். ஒருவேளை திரங்கா செல்பீ என்றால் என்னவென்றே உங்களுக்கு தெரியாது என்றால்? ஒரு திரங்கா செல்பீயை எடுப்பது எப்படி? அதை எங்கே பதிவேற்றம் செய்ய வேண்டும்? எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

Tiranga Selfie கேட்கும் மோடி.. பதிவேற்றம் செய்வது எப்படி?

2023 சுதந்திர தினத்தை (2023 Independence Day) கொண்டாடும் நோக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தின் (Har Ghar Tiranga Movement) கீழ் ஹர்கர்திரங்கா.காம் (harghartiranga.com) என்கிற இணையதளத்தில் மூவர்ண கொடியுடன் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடிமக்களை கேட்டு கொண்டுள்ளார்.

"திரங்கா (அதாவது மூவர்ண கொடி) - சுதந்திரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் உணர்வை அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியனும் மூவர்ண கொடியுடன் உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளனர், மேன்மேலும் தேசிய முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க இது நம்மைத் தூண்டுகிறது."

"ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் #HarGharTiranga இயக்கத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திரங்கா உடனான உங்கள் புகைப்படங்களை இங்கே பதிவேற்றவும்... https://hargartiranga.com," என்று நரேந்திர மோடி, எக்ஸ் (X) வலைத்தளத்தில் (முன்னதாக இது ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) பதிவு செய்துள்ளார்.

நினைவூட்டும் வன்ணம் 'ஹர் கர் திரங்கா' என்பது கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை (Azadi Ka Amrit Mahotsav) குறிக்கும் வகையில் கலாச்சார அமைச்சகத்தின் (Ministry of Culture) ஒரு முயற்சியாகும். கலாச்சார அமைச்சகமானது ஹர் கர் திரங்காவிற்கான வலைத்தளம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியது.

அதுதான் ஹர்கர்திரங்கா.காம் வலைத்தளம் ஆகும். இந்த வலைத்தளத்தில் தான் மக்கள் தங்கள் திரங்கா செல்பீகளை பகிர்ந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவேளை திரங்கா செல்பீக்களை எப்படி எடுக்க வேண்டும்? அதை ஹர் கர் திரங்கா வலைதளத்தில் ஏபிசி பதிவேற்று வேண்டும்? என்று உங்களுக்கு தெரியாது என்றால், கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

திரங்கா செல்பீ என்றால் இந்திய தேசிய கொடியுடன் சேர்ந்து நீங்கள் எடுக்கும் புகைப்படம் ஆகும். உங்களுடைய பின்பக்கத்தில் தேசிய கோடியை நிலைநிறுத்தி, அதை மறைக்காதபடி அதன் முன்னால் நின்று புகைப்படமோ அல்லது செல்பீயோ எடுத்துகொள்ளவும். தேசிய கோடியுடன் சேர்ந்து கூட நீங்கள் புகைப்படம் / செல்பீ எடுக்கலாம்.

அதன் பின்னர் நீங்கள் ஹர்கர்திரங்கா.காம் என்கிற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும், அந்த வலைத்தளத்தின் முகப்பு பக்கத்திலேயே (Home Page) 'அப்லோட் செல்பீ வித் ஃபிளாக்' (Upload Selfie with Flag) என்கிற பட்டனை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும். இப்போது ஒரு பாப்-அப் தோன்றும், அதில் உங்கள் பெயரை எழுதவும்

அதனை தொடர்ந்து உங்கள் திரங்கா செல்பீயை பதிவேற்றம் (Upload) செய்யவும்; நீங்கள் நேரடியாகவும் அப்லோட் செய்யலாம் அல்லது உங்கள் போட்டோவையோ டிராப்-டவுனும் (Dropdown) செய்யலாம். பதிவேற்றும் வேலை முடிந்த பின்னர் சப்மிட் பட்டனை (Submit Button) கிளிக் செய்து, அதை சமர்ப்பிக்கவும்.

உங்கள் திரங்கா செல்பீயை பதிவேற்ற, ஹர்கர்திரங்கா.காம் இணையதளத்தில் உங்கள் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்த உங்கள் சம்மதத்தை (consent) நீங்கள் அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பதிவு செய்த புகைப்படமானது ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஹர்கர்திரங்கா வலைதளத்தில் காட்சிப்படுத்தப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PM Modi Asked Citizens To Upload Tiranga Selfie Between 13th to 15th August 2023 Why and How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X