பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

|

பெருங்கடலில் மிதக்கும் இந்த நீண்ட, ஹிப்னாடிக் ஸ்ட்ரிங்கி விஷயம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதன் உண்மையான அளவு என்ன என்று கேட்டால் நீங்கள் மிரண்டுவிடுவீர்கள். இப்படி ஒரு உயிரினம் பூமியில் இருக்கிறது என்றே பலருக்கும் தெரியாது. இதைச் சிலர் ஏலியன் உயிரினம் என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மை தான? உலகின் மிக பெரிய ராட்சஸ உயிர் வாழும் இந்த உயிரினத்தைப் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.

பூமியில் ஒளிந்திருக்கும் பல மர்மங்கள்

பூமியில் ஒளிந்திருக்கும் பல மர்மங்கள்

பூமியில் இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்கள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் பெரும்பாலான மர்மங்கள் மனிதனின் கரங்களுக்கு எட்டாத ஆழ்கடலில் தான் ஒளிந்திருக்கிறது. இதுபோல் கடலுக்குள் ஒளிந்திருக்கும் பல மர்மங்களில் ஒன்று தான் இந்த உயிரினம். சமீபத்தில் ஒரு வீடியோ பதிவு மூலம் இந்த தகவல் வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த அசுர உருவம்

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த அசுர உருவம்

மேற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகம், ஷ்மிட் ஓஷன் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராபி உள்ளிட்ட நிறுவனங்களின் சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் குழுவான நிங்கலூ கனியன்ஸ் எக்ஸ்பெடிஷன் சமீபத்தில் இந்த கண்கவர் ஆழ்கடல் உயிரினத்தை ஆராய்ச்சியின் போது கண்டுள்ளது. அதே உடனே கேமராவில் பதிவு செய்து சமீபத்தில் அதை வெளியிட்டுள்ளது.

வேற்று கிரக வாசியின் பறக்கும் தட்டு போல இருக்கும் உயிரினம்

நிங்கலூ கனியன்ஸ் எக்ஸ்பெடிஷன் வெளியிட்ட வீடியோ ஃபுட்டேஜில் ஒரு மர்மமான கடல் வாழ் உயிரினம் ஒன்று தென்பட்டுள்ளது. அது பார்ப்பதற்கு வேற்று கிரக வாசியின் பறக்கும் தட்டு போலவே பறந்து விரிந்து காணப்படுகிறது. ஆனால், இது வானில் பறக்காமல் ஆழ்கடலுக்குள் நீந்தி நகர்ந்து கொண்டிருப்பதை அந்த வீடியோ ஆதாரம் தெளிவாகக் காட்டுகிறது. உண்மையில் இது ஒரு கடல் வாழ் உயிரினம் என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் இதை நம்ப தோணும். அப்படி இருக்கிறது இதன் தோற்றம்.

சிப்பனோபோர் (siphonophores) என்றால் என்ன தெரியுமா?

சிப்பனோபோர் (siphonophores) என்றால் என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் கடலில் மிதந்து உயிரினம் உண்மையில் என்ன தெரியுமா? இந்த மாபெரும் ராட்சஸ உயிரினத்தின் பெயர் சிப்பனோபோர் (siphonophores) என்பதாகும். சிப்பனோபோர் என்பது ஹைட்ரோசோவன்ஸ் வகையைச் சார்ந்த கோரல்ஸ் மற்றும் ஜெல்லி ஃபிஷ் போன்ற உயிரின குழுவைச் சேர்ந்ததாகும். இதனை அப்போலெமியா அல்லது ஸ்டிரிங் ஜெல்லி ஃபிஷ் என்றும் வேறு சில பெயர்களைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இதை அழைக்கின்றனர்.

சிறு சிறு உயிரினங்களால் ஆன ஒரு ராட்சச உயிரினம்

சிறு சிறு உயிரினங்களால் ஆன ஒரு ராட்சச உயிரினம்

உண்மையில் இந்த உயிரினமானது ஒரு பெரிய ஒற்றை உயிரினமே அல்ல, இவை சிறு சிறு உயிரினங்களால் ஆன ஒரு ராட்சச உயிரினம். சூவாய்ட்ஸ் (zooids) எனப்படும் இந்த சிறு சிறு உயிரினங்கள், ஆயிரத்திற்கும் அதிகமான முறை தங்களைத் தாமே குலோன் செய்து பல விதமான வேலைகளைப் பார்க்க வல்லது.இவற்றில் ஒரு பகுதி இந்த ராட்சஸ உயிரின் உணவைக் கவருகிறது, மற்றொரு பகுதி இந்த ஒட்டுமொத்த உருவத்தையும் நகர்த்தச் செயல்படுகிறது. இன்னும் இதில் ஒரு சில பகுதி இனப்பெருக்கத்திற்காகச் செயல்படுகிறது.

ராட்சஸ அளவில் வளர்ந்து உயிர் வாழ்ந்து வரும் உயிரினம்

ராட்சஸ அளவில் வளர்ந்து உயிர் வாழ்ந்து வரும் உயிரினம்

இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே உயிரினமாக மாறி, கிடைக்கும் உணவை அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்து உணவு பரிமாற்றம் செய்து உயிர் வாழ்கிறது என்பது சிறப்பு. அதுமட்டுமன்றி தேவையான நேரத்தில் எச்சரிக்கை சிக்னளையும், இதன் முக்கிய உறுப்புகளுக்கும் மற்ற சூவாய்ட்ஸ்களுக்கும் தகவல் தெரிவிக்கிறது. இதுபோன்ற பல விதமான வேலைகளைக் கூட்டாகச் செய்து ஆழ்கடலில் ராட்சஸ அளவில் வளர்ந்து உயிர் வாழ்ந்து வருகிறது.

உணவு உண்ணுபதற்காகத் தயாராக இருக்கும் உயிரினம்

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அதாவது ஒரு பெரிய உயிரினத்தில் உள்ள உறுப்புகளைப் போல இந்த உயிரில் உள்ள ஒவ்வொன்று பகுதியும் அதன், அதன் வேலையைச் சரியாகச் செய்து கொண்டே இணைந்து இருக்கிறது. அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள சிப்பனோபோர் உணவு உண்ணுபதற்காகத் தயாராக இருப்பதைப் போல ஒரு பொசிஷனில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராட்சஸ உயிரின் நீளம் எவ்வளவு தெரியுமா?

இந்த ராட்சஸ உயிரின் நீளம் எவ்வளவு தெரியுமா?

வீடியோவில் காணப்பட்டுள்ள இந்த உயிரினத்தின் நீளம் சரியாக எவ்வளவு இருக்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை, ஆனால், தோராயமாகக் கணக்கிட்டதை வைத்துப் பார்க்கும் பொழுது இதன் வெளிப் பகுதி மட்டுமே 154 அடி நீளம் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடல் திமிங்கிலங்களை விட இந்த உயிரினம் பெரியது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் பல உயிரினங்களை கண்டறிந்த ஆராய்ச்சி குழு

இந்த ராட்சஸ உயிரினத்தில் ஜெல்லிபிஷ் உடலில் இருப்பது போன்றே ஆயிரக்கணக்கான கூர்மையான டெண்டகில்ஸ் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் இன்னும் பல உயிரினங்களை இந்த ஆராய்ச்சி குழு கண்டறிந்து வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ராட்சஸ உயிர் வாழும் உயிரினமாக தற்பொழுது இந்த சிப்பனோபோர் இடம்பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
World's Largest Giant Siphonophore Deep Sea Animal Found In The Indian Ocean : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X