விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!

|

இந்திய பிரதமர் மோடியின் வாயில் இருந்து, அடிக்கடி வரும் "ஆத்மநிர்பர்" (Atmanirbhar) என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தமென்று தெரியுமா?

ஆத்மநிர்பர் என்றால் தற்சார்பு அல்லது தன்னிறைவு என்று அர்த்தம்!

அதாவது இந்தியாவை தன்னிறைவு மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் தொகுக்கப்படும் திட்டங்கள், மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எல்லாமே "ஆத்மநிர்பர்" என்கிற வார்த்தைக்குள் வந்து விழும்!

உண்மையா.. அல்லது ஓவர் பில்ட் அப்-ஆ?

உண்மையா.. அல்லது ஓவர் பில்ட் அப்-ஆ?

ஆத்மநிர்பர் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேலுமொரு "மேட் இன் இந்தியா" தயாரிப்பு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அது பார்ஓஎஸ் (BharOS) ஆகும்.

பார்ஓஎஸ் ஆனது கூகுளின் (Google) ஆண்ட்ராய்டு ஓஎஸ்-க்கு எதிரானது என்றும், இது ஆண்ட்ராய்டுக்கு (Android) கடும் போட்டியாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

இதெல்லாம் உண்மையா? அல்லது வெறுமனே ஓவர் பில்ட்அப் செய்யப்படுகிறதா? உண்மையில் பார்ஓஎஸ் என்றால் என்ன? கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு எதிராக பார்ஓஎஸ்-ஆல் போட்டியிட முடியுமா? அதை வீழ்த்த முடியுமா?

கூகுளின் ஆண்ட்ராய்டுக்கும் பார்ஓஎஸ்-க்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? இது உண்மையிலேயே பாதுகாப்பானது தானா, அல்லது எல்லாமே "கம்பி கட்டும் கதை"களா? இதோ பதில்கள்!

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

பார்ஓஎஸ் என்றால் என்ன?

பார்ஓஎஸ் என்றால் என்ன?

பார்ஓஎஸ் என்பது கூகுள் ஆப்கள் அல்லது சேவைகள் இல்லாத ஏஓஎஸ்பி (AOSP) அடிப்படையிலான இயங்குதளம் ஆகும்.

ஐஐடி மெட்ராஸின் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ஜாண்ட்கே ஆப்ரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (JandKops) என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பார்ஓஎஸ் ஆனது, இந்தியாவில் உள்ள 100 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் "ப்ரைவேட்" ஆன மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது!

உண்மையிலேயே இது ஆண்ட்ராய்டு-க்கு ஆப்பு  வைக்குமா?

உண்மையிலேயே இது ஆண்ட்ராய்டு-க்கு ஆப்பு வைக்குமா?

99.9% வாய்ப்பில்லை ராஜா! பார்ஓஎஸ் என்பது ஏஓஎஸ்பி (AOSP) அடிப்படையிலான இயங்குதளம் என்று குறிப்பிட்டோம் அல்லவா.. அந்த ஏஓஎஸ்பி என்கிற என்ன அர்த்தமென்று தெரியுமா?

ஏஎஸ்ஓபி (AOSP) என்றால் ஆண்ட்ராய்டு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட் (Android Open Source Project) என்று அர்த்தம். அதாவது தொழில்நுட்ப ரீதியாக, பார்எஸ் என்பது கூகுளுக்கு சொந்தமான ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ல் இருந்து பெரிய அளவில் வேறுபட்டது அல்ல!

அதாவது இது பெயரளவில் மட்டுமே ஒரு உள்நாட்டு ஓஎஸ் ஆகும். ஆக இதன் கீழ் கிடைக்கும் அம்சங்கள் மற்றும் யூசர் இன்டர்பேஸ் (UI) எல்லாமே கூகுளின் ஸ்டாக் ஆண்ட்ராய்டு உடன் ஒற்றுப்போகும்.

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

எல்லாவற்றை விடவும்... மோசமான ஒரு விஷயம் இருக்கிறது!

எல்லாவற்றை விடவும்... மோசமான ஒரு விஷயம் இருக்கிறது!

இந்தியாவில் உள்ள 100 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பை வழங்கும் என்று கூறப்படும் பார்ஓஎஸ்-ல் ஒரு பெரிய பாதுகாப்பு ஓட்டை உள்ளது என்பதே நிதர்சனம்.

பார்ஓஎஸ்-க்கும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-க்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், பார்ஓஎஸ் ஆனது கூகுள் சேவைகளுடன் (ஆப்கள்) அனுப்பப்படாது.

அதாவது இது பயனர்களின் சொந்த விருப்பத்தின் ஆப்களை இன்ஸ்டால் செய்ய அனுமதிக்கும். இந்த இடத்தில் தான் ஒரு முக்கியமான சிக்கலை நாம் கவனிக்க தவறுகிறோம்.

அதென்ன விஷயம்?

அதென்ன விஷயம்?

பார்ஓஎஸ்-ஐ பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஆப்களை இன்ஸ்டால் செய்யும் விருப்பம் கிடைப்பதால், அவர்கள் பல ஆப்களின் ஏபிகே (APK) வெர்ஷன்களையும் அணுகுவார்கள்.

அந்த ஆப்களில் ஏதேனும் ஒன்று மால்வேர் (Malware) ஆக இருந்தால், அது உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை சமரசம் செய்து, ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கலாம்.

"பழம் தின்று கொட்டை போட்ட" கூகுள் நிறுவனமே, பிளே ஸ்டோருக்குள் நுழையும் மால்வேர் ஆப்களை சமாளிக்க முடியாமல் திணறும் சூழ்நிலையில், பார்ஓஎஸ் எப்படி 100 கோடி இந்தியர்களுக்கு பாதுகாப்பான மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டமை வழங்கும் என்கிற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

பார்ஓஎஸ் எப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் வெளியிடப்படும்?

பார்ஓஎஸ் எப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் வெளியிடப்படும்?

தற்போது வரையிலாக, பார்ஓஎஸ் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த சரியான விவரங்கள் எதுவும் இல்லை.

இது ஒரு பரந்த வெளியீட்டை சந்திக்க, அதாவது அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் வர இன்னும் சிறிது காலம் ஆகலாம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

பார்ஓஎஸ் எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகமாகும்?

பார்ஓஎஸ் எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகமாகும்?

தற்போது வரையிலாக பார்ஓஎஸ்-ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலோ அல்லது மொபைல் பிராண்டுகளின் பட்டியலோ வெளியாகவில்லை.

இருப்பினும், ஜாண்ட்கே ஆப்ரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது சில முக்கிய ஆண்ட்ராய்டு மொபைல் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து (முக்கியமான இந்திய மொபைல் பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து) வரவிருக்கும் நாட்களில் பார்ஓஎஸ் உடனான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Every Indian Should Know This Important Truth About Atmanirbhar Mobile Operating System BharOS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X