Home
News

நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும்.. நகராதுடி.. Amazon-க்கு வரும் மோடி ஜி.. இந்திய அரசின் புது டீலிங்!

"எலெக்ஷன் வந்துட்டா போதும் நம்ம சின்ராசை கையில புடிக்க முடியாது!" என்கிற மீம் டெம்ப்ளேட்டிற்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்படியான ஒரு வேலையை நமது இந்திய அரசாங்கம் (Indian Government) செய்துள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம், அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான அமேசானுடன் (Amazon) கூட்டும் சேர்ந்துள்ளது.

வரவிருக்கும் நாட்களில், குறிப்பாக 2024 தேர்தலுக்கு (2024 Election) முன்பாக.. இந்த கூட்டணி என்னென்ன வேலைகளை செய்ய போகிறது என்று கூறினால்.. "அட சூப்பர் ஐடியாவே இருக்கே!" என்று கூறி சிலர் பூரிப்படையலாம்... மற்ற சிலர் "நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும்.. நகராதுடி!" என்று கூறி பங்கம் செய்யலாம்!

Amazon-க்கு வரும் மோடி ஜி.. இந்திய அரசின் புது டீலிங்!

அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனமானது, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துடனான (Ministry of Information and Broadcasting) ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது. அமேசானின் கூற்றுப்படி, இந்தியாவில் படைப்பாற்றல் திறன்களை ஊக்குவிக்கவும், மேட் இன் இந்தியா (Made in India) கிரியேட்டிவ் கன்டென்ட்டை உலகளவில் காட்சிப்படுத்தவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நேஷனல் ஃபிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (National Film Development Corporation - NFDC), தூர்தர்ஷன் மற்றும் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா (International Film Festival of India - IFFI) ஆகியவற்றின் கன்டென்ட்கள், அமேசான் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் தளமான ப்ரைம் வீடியோ மற்றும் விளம்பர சேவையான மினிடிவியில் காட்சிப்படுத்தப்படும்.

அதுமட்டுமின்றி அமேசான் மியூசிக் மற்றும் அமேசான் அலெக்சா வழியாக இந்திய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் (அதவாது நம்ம மோடி ஜி) நிகழ்த்தும் உரைகளும் அணுக கிடைக்குமாம். அத்துடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் பொது நலன் பிரச்சாரங்கள் மற்றும் தினசரி நியூஸ் புல்லட்டின்கள் தொடர்பான கன்டென்ட்டும் அணுக கிடைக்குமாம்.

மேலோட்டமாக பார்த்தால், அமேசான் உடனான இந்த கூட்டணியானது இந்திய சினிமா மற்றும் டிவி துறைகளில் உள்ள திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான ஒரு அற்புதமான நடவடிக்கையாக தெரிந்தாலும் கூட, இதற்குள் ஏன் 2024 தேரர்தலுக்கான ஒருசில தந்திரங்கள் புதைந்து இருக்க கூடாது? என்கிற சந்தேகங்களும் எழாமல் இல்லை!

இன்னொரு அறிக்கை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (Film and Television Institute of India) மற்றும் சத்யஜித் ரே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில் (Satyajit Ray Film and Television Institute) உள்ள மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் ஸ்காலர்ஷிப்களை வழங்குவதிலும் கூட அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் மினிடிவி ஆகிய இரண்டும் செயல்பட உள்ளதாக தெரிவிக்கிறது.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 75 கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ (75 Creative Minds of Tomorrow) என்கிற முன்முயற்சியின் ஒரு பகுதியின் கீழ், இளம் கலைஞர்களுக்கு மாஸ்டர் கிளாஸ்களை (Master Class) ஏற்பாடு செய்யவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் திட்டத்தின் கீழ், திரைப்படத் தயாரிப்பு தொடர்பான பல்வேறு திறமைகளை கொண்ட 75 கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படம் தொடர்பான பட்டறைகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் வழியாக மாஸ்டர் கிளாஸ்களும் எடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon to Play PM Modi Speech via Amazon Music and Alexa Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X