கேம் விளையாடிய Modi.. இந்தியாவின் முக்கிய கேமர்களுடன் ரவுண்ட்டேபிள் மீட்டிங்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்
இந்தியாவின் முக்கிய கேமர்கள் (Gamers) மற்றும் கேம் டெவெலப்பர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஒரு ரவுண்ட்டேபிள் மீட்டிங் கலந்தாய்வில் கலந்துகொண்டார். இந்த மீட்டிங்கில் இந்தியா எப்படி கேமிங் துறையில் முன்னேற வேண்டுமென்ற ஐடியாவை இளைஞர்களுக்கு வழங்கியிருக்கிறார் மோடி.
இந்திய நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு கேமர்கள் மற்றும் கேம் டெவெலப்பர்கள் (game developers) ஒரு பங்காக திகளப் போகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்க மக்களே இது தான் உண்மை என்கிறது இன்வெஸ்ட் இந்தியா (Invest India) கூற்று. சமீபத்தில் வெளியான இன்வெஸ்ட் இந்தியா கூற்றுபடி, ஆன்லைன் கேமிங் துறையானது (Online Gaming Sector) இந்தியாவின் வளர்ச்சி துறையாக கண்டறிப்பட்டுள்ளது.

கேமர்களுடன் கேம் விளையாடிய மோடி:
அதாவது, எதிர்கால இந்தியாவின் அதிகபட்ச வளர்ச்சி சாத்தியத்துடன் நாட்டின் நான்காவது பெரிய துறையாக ஆன்லைன் கேமிங் செக்டர் துறை கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, நாட்டின் புகழ்பெற்ற கேமிங் படைப்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சந்தித்திருக்கிறார். இந்திய கேமிங் துரையின் எதிர்காலம் மற்றும் இ-கேமிங் துறையின் வளர்ச்சி பற்றி இந்த கலந்தாய்வில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இ-கேமிங் துறையில் நாடு சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்த பேச்சும் இந்த ரவுண்ட்டேபிள் மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் வெறும் இளைஞர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுடன் ஒரு இளைஞராக நரேந்திர மோடி இந்த ரவுண்ட் டேபிள் மீட்டிங்கில் பங்கேற்றார் என்று சமூக ஊடகங்களில் பதிவுகள் பறக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டாளர்களிடம் ஆர்வமுள்ள கேள்விகளை எழுப்பினார்.
அதேபோல், இந்திய கேமர்கள் உருவாக்கிய சில கேம்களை அவரே விளையாடி மகிழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ரவுண்ட் டேபிள் மீட்டிங்கில் கேமிங் மற்றும் கேம்பளிங் இடையிலான வேறுபாடு என்ன என்பதை பற்றியும் நரேந்திர மோடி பேசியுள்ளார். இந்திய இளைஞர்களை எப்படி பாதுகாப்பான முறையில் கேமிங் துறையில் இந்தியா வழிநடத்த வேண்டும் என்ற அறிவுரையையும் மோடி வழங்கியுள்ளார்.

இளைஞர்களை எப்படி சரியாக கேமிங் துறையில் வழிநடத்தலாம்? - மோடி:
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை எப்படி சரியாக கேமிங் துறையில் வழிநடத்தலாம் என்ற கேமர்கள் எண்ணங்களுக்கும் மோடி செவிசாய்த்திருக்கிறார். கலந்தாய்வயில் கலந்துகொண்ட ஒவ்வொரு கேமர்கள் மற்றும் கேம் டெவெலப்பர்களின் எண்ணங்களை தனி-தனியாக பட்டியலிட்டு அவர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் தகவல்களை அனுப்பும் படி வலியுறுத்தியுள்ளார். கேமிங் துறையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு இப்போதிலிருந்தே வேலை செய்ய திட்டமிடுகிறார் மோடி என்பது தெளிவாக தெரிகிறது.
இளைஞர்களுடனான இந்த கலந்தாய்வை தேர்தல் யுக்தியாக அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள். இளம் வாக்காளர்களை கவர பிரதமர் மோடியின் இந்த செயல் ஒரு உத்தியாக இருக்குமோ என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த எதிர்பார்ப்பில் பார்த்தால், இது ஒருமுறை நடந்த சம்பவம் அல்ல. ஏனெனில், கடந்த மாதம் மற்றொரு இளைஞர் பட்டாளத்தை பிரமர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இளைஞர் பட்டாளம், இந்தியாவின் முன்னணி சோசியல் மீடியா இன்பிலுவென்சர்கள் (social media influencers) என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த இளைஞர்களின் வயது சுமார் 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








