ஐய்யயோ.. இனி பிஜேபி காரங்கள கையில பிடிக்க முடியாதே.. மோடியை சந்தித்த பின் Elon Musk கொடுத்த பில்ட்-அப் பேட்டி!
3 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா (US) சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கை (Elon Musk) இன்று (ஜூன் 21) சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க் "நான் மோடியின் ரசிகன். இது பிரதமருடன் நடந்த ஒரு அற்புதமான சந்திப்பு, நான் அவரை மிகவும் விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எங்கள் தொழிற்சாலைக்கு (Tesla Motors factory) வருகை தந்து இருந்தார். எனவே, நாங்கள் ஒருவரையொருவர் சிறிது காலமாகவே அறிந்திருக்கிறோம்," என்று கூறினார்.

மேலும் "இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக இருக்கிறேன். உலகிலுள்ள எந்தவொரு பெரிய நாட்டையும் விட இந்தியா அதிக வாக்குறுதிகளை கொண்டுள்ளது" என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார். நினைவூட்டும் வண்ணம், கடந்த 2015ல் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி எலான் மஸ்க்கை சந்தித்தார்.
இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனம் வருவதற்கான காலக்கெடு குறித்து கேட்கப்பட்டபோது, "டெஸ்லா இந்தியாவிற்கு வருமென்று நம்புகிறேன். பிரதமர் மோடி இந்தியாவை பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார், ஏனெனில் அவர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்ய தூண்டுகிறார். அதற்கான சரியான நேரத்தை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்," என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மேலும் "அவர் உண்மையில் இந்தியாவிற்கு சரியானதை செய்ய விரும்புகிறார். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். வெளிப்படையாக இருக்கும் அதே நேரத்தில், அது இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்கிறார்" என்றும் எலான் மஸ்க், மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மறுகையில், எலான் மஸ்க் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று உங்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி @elonmusk! ஆற்றல் முதல் ஆன்மீகம் வரையிலான பிரச்சனைகளில் நாங்கள் பன்முக உரையாடல்களை மேற்கொண்டோம்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மஸ்க், "மீண்டும் சந்தித்தை கௌரவமாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாகவும், மலிவாகவும் மாற்றுவதில் எலான் மஸ்க்கின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும் இந்தியாவில் மின்சார இயக்கம் மற்றும் வணிக விண்வெளித் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும் எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications