Home
News

எந்த கொம்பனாலும் ஹேக் செய்ய முடியாது.. பிரதமர் கையில் இருக்கும் போனில் இவ்வளவு மேட்டர் இருக்கா? அடேங்கப்பா.!

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி என்ன ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார் என்று தெரியுமா? சிலர் இவர் ஐபோன் பயன்படுத்துகிறார் என்கிறார்கள், இன்னும் சிலர் இவர் ஆண்ட்ராய்டு பயன்படுத்துகிறார் என்கிறார்கள். ஆனால், உண்மை இது இரண்டுமே இல்லை. அப்படியானால் எந்த போனை மோடி பயன்படுத்துகிறார்?

சில நேரங்களில் நீங்கள் கவனித்திருப்பீர்கள், நமது நாட்டின் பிரதமர் (Prime Minister) கையில் போன்களே இருக்காது. ஏனெனில் இவர் நாட்டின் முக்கியமான தலைவர் என்பதனால், இவர் ஸ்மார்ட்போன் (Smartphone) அல்லது மொபைல் (Mobile) சாதனங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக எடுத்த செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், புகைப்படம் (Photos) எடுப்பதற்காக அவ்வப்போது அவர் கைகளில் பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் வழங்கப்படும்.

எந்த கொம்பனாலும் ஹேக் செய்ய முடியாத பிரதமர் கையில் இருக்கும் போன்..

இதில் பெரும்பாலும் ஐபோன்களின் (iPhone) வெவ்வேறு மாடல்கள் அவருக்கு வழங்கப்படும். பெரும்பாலும் ஐபோன் சாதனம் பயன்படுத்தப்படுவதற்கும் சில காரணங்கள் உள்ளது. வெளிநாடு பயணங்கள் மற்றும் வேறு நாடுகளுக்கு செல்லும் பொழுது ஐபோன் ஒரு பொதுவான சாதனமாக செயல்படுகிறது. இருப்பினும், ஒரு உலகளாவிய தலைவராக இருக்கும் பொழுது, பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

மேலும், அவர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் சில சிறப்பு மென்பொருள்கள் (Special safety softwares) பொருத்தப்பட்டுள்ளன. ஆம், பாதுகாப்பு நலன் கருதி, ஹேக் செய்ய முடியாத பலகட்ட பாதுகாப்பை வழங்கும் பிரத்தியேகமான மொபைல் சாப்ட்வேர் (unhackable mobile software) மூலம் இவர் பயன்படுத்தும் போன்கள் பாதுகாக்கப்படுகின்றன. பிரதமர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளின் போது, புகைப்படம் எடுக்க மட்டுமே அவருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும்.

மற்ற நேரங்களில் அவரது சமூக ஊடக கணக்குகளைக் கையாளும் ஒரு தனி குழுவிடம் தான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் சாதனங்கள் இருக்கும். இவருடைய இன்ஸ்டாகிராம் (Instagram), டிவிட்டர் (Twitter or X) அல்லது எக்ஸ் தளங்களின் பதிவுகளை இந்த சிறப்பு குழு முழுமையாக கையாண்டுகொள்ளும். இப்படி இருக்கும் பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) எப்படி மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவார்?

இங்கு தான் மிலிட்டரி தர பாதுகாப்புடன் செயல்படும் சாட்டிலைட் போன்கள் (satellite phones) வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சாட்டிலைட் போனை தான் அவர் பேசுவதற்கு பயன்படுத்துகிறார். இதை சாட்டிலைட் போன் அல்லது RAX என்று அலைகிறார்கள். RAX என்பது ரெஸ்ட்ரிக்டட் ஏரியா கவரேஜ் (Restricted area exchange) என்று கூறப்படுகிறது. அதாவது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி பரிமாற்றம் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்.

எந்த கொம்பனாலும் ஹேக் செய்ய முடியாத பிரதமர் கையில் இருக்கும் போன்..

மற்ற அனைத்து தகவல்தொடர்புகளுக்கும், நவரத்னா பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) மூலம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட என்க்ரிப்ட் செய்யப்பட்ட மொபைல் போன் மூலம் நடக்கிறது. இதுவும் பிரதமர் கைகளில் இருப்பதில்லை. இந்த சாதனம் அவரது முதன்மைச் செயலாளரிடம் தான் முழு நேரமும் இருக்கும். அவர் மூலம் மோடிக்கு தகவல் பரிமாறப்படும்.

உண்மையில், இந்த போன்கள் எவ்வளவு சிறந்தவை என்றால், இந்த சாதனங்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் டிரேஸ் (trace) செய்ய முடியாதாம். இந்த ஃபோன்கள் இராணுவ அலைவரிசையில் (military frequency band) செயல்படுவதால் ஹேக் செய்ய முடியாது. இந்த போன்கள் NTRO மற்றும் DEITY போன்ற ஏஜென்சிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல்,பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஒவ்வொரு வாய்ஸ் கால் அழைப்புகளும் எத்தனை அடுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பை கொண்டுள்ளது என்று தெரியுமா? பிரதமர் அலுவலக மொபைல் வழியாக செயற்கைக்கோள் எண்களைப் பயன்படுத்தி மூன்று அடுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பைப் பயன்படுத்தி (three layers of encrypted security) அழைப்புகளை மேற்கொள்கிறார்.

மேலும், RSA-2048 பிட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட பிறகே அழைப்புகளை மேற்கொள்கிறார். இதுவும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வருகிறது. இது எவ்வளவு உறுதியான பாதுகாப்பு என்றால், பெரிய அளவிலான உயர்தர கணினிகளை கொண்டு இதை ஹேக் செய்ய நினைத்தால் கூட, இந்த பாதுகாப்பை உடைக்க குறைந்தது 7 முதல் 8 ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது. இதனால், தான் பிரதமர் கையில் இருக்கும் போன்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Which Smartphone Does PM Narendra Modi Uses Is It iPhone Or Android It Is Satellite RAX Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X