Home
News

நிலவுக்கு புது பெயர் வைத்த மோடி.. 7 மாதத்திற்கு பிறகு ஓகே சொன்ன உலக நாடுகள்.. என்ன பெயர் தெரியமா?

நிலவை ஆராய்ச்சி செய்ய கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி இஸ்ரோ (ISRO) சந்திரயான்-3 (Chandrayaan-3) திட்டத்தின் ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பி, நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக லேண்ட் செய்தது. இதற்கு முன் எந்தவொரு நாடும் தென்துருவதில் தரையிறங்கியது கிடையாது.

நிலவின் தென்துருவம் (Moon's south pole), விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் மிகவும் சவாலான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கு ராக்கெட்களை (Rockets) வெற்றிகரமாக தரையிறக்குவது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை என்றே உலக நாடுகள் கருதுகின்றன. இதற்கு முன்பு எந்தவொரு நாடும் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் சவால்களை தாண்டி கட்சிதமாக தரையிறங்கியது.

நிலவுக்கு புது பெயர் வைத்த மோடி.. 7 மாதம் பிறகு ஓகே சொன்ன உலக நாடுகள்

நிலவுக்கு பெயர் சூட்டிய மோடி.. என்ன பெயர் தெரியுமா?

உலக நாடுகள் இந்த அசாதாரணமான சாதனையை கண்டு வியப்பில் ஆழ்ந்தன. உலகையே வியப்படைய செய்த சந்திரயான்-3 வெற்றி இந்தியாவுக்கு பெருமையை சேர்த்து. நிலவின் தென்துருவதில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக (National Space Day) இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி (Prime Minister of India Narendra Modi) அறிவித்தார்.

அதேபோல், சந்திராயன்-3 ராக்கெட் சுமந்து சென்ற விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிலவின் தென்துருவ பகுதியை "சிவ சக்தி பாயிண்ட்" | 'Shiv Shakti Point' என்று மோடி பெயர் சூட்டினார். மோடி நிலவின் தென்துருவதில் உள்ள ஒரு பகுதிக்கு சிவ சக்தி பாயிண்ட் என்று பெயர் சுட்டி சரியாக 7 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்போது சர்வதேச விண்வெளி ஒன்றியம் மோடி சூட்டிய பெயருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவின் பரிந்துரையை ஏற்று விக்ரம் லேண்டர் (Vikram Lander) தரையிறங்கிய நிலவின் தென்துருவதில் உள்ள பகுதிக்கு சிவசக்தி என்ற பெயரை அங்கீகரிப்பதாக சர்வதேச விண்வெளி ஒன்றியம் (IAU) அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. IAU என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் அஸ்ட்ரோனோமிக்கள் யூனின் (International Astronomical Union) இந்த சர்வதேச விண்வெளி ஒன்றியம் பாரிஸ்ஸை (Paris) தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு புது பெயர் வைத்த மோடி.. 7 மாதம் பிறகு ஓகே சொன்ன உலக நாடுகள்

சிவ சக்தி பெயருக்கு ஒப்புதல் வழங்கிய சர்வதேச விண்வெளி ஒன்றியம்:

இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி, சரியாக மார்ச் 19,2024 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஒன்றியம், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி (ShivShakti) என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது என்று ISRO தகவல் குறிப்பிடுகிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த மற்றொரு பெருமை என்றும், இஸ்ரோவின் துணிச்சலான விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் மத்திய அரசு பாராட்டியுள்ளது.

இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் செய்யாத காரியத்தை நரேந்திர மோடி செய்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவுக்கே பெயர் சூட்டினார் மோடி என்று பாராட்டுக்கள் இணையத்தை நிரப்பி வருகிறது. நிலவின் தென்துருவத்திற்கு சிவசக்தி என்று பெயர்சூட்டிய பெயருக்கு பின்னணியில் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா?

சிவசக்தி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா?

"சிவசக்தி" என்பது மனிதகுலத்தின் உறுதிப்பாடு மற்றும் "சக்தி" என்பது இந்த மனிதாபிமான அபிலாஷைகளை நனவாக்கும் திறன் என்ற கருத்தின் அடிப்படையில் "சிவ-சக்தி" தேர்வு செய்யப்பட்டது என்று மோடி குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரத்தில் "சக்தி" என்பது பெண் விஞ்ஞானிகளுக்கான ஒரு மரியாதை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Narendra Modi Chosen Name Shiv Shakti For Chandrayaan-3 Landing Site Got Approved By IAU Paris
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X