Home
News

திறந்து வச்ச மோடிக்கு இதெல்லாம் சொன்னீங்களா.. அடல் சேது பாலத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!

பிரதமர் நரேந்திர மோடியால் (Prime Minister Narendra Modi) திறந்து வைக்கப்பட்ட அடல் சேது பாலமானது (Atal Setu Bridge) இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் மட்டுமல்ல. மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் என்றும் அழைக்கப்படும் இந்த கடல் பாலம் அதிநவீன தொழில்நுட்பங்களால் நிரம்பிய ஒரு பொறியியல் அதிசயமும் ஆகும்.

அடல் சேது பாலமானது இந்தியாவின் வளர்ந்து வரும் பொறியியல் திறமைக்கு ஒரு சான்றாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வெறும் ஐந்தாண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்கில் (Mumbai Trans Harbour Link - MTHL) 8 முக்கியமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அடல் சேது பாலத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!

01. நிலநடுக்கத்தை எதிர்க்கும் வடிவமைப்பு (Earthquake Resistant Design): அடல் சேது பாலமானது ஷாக் அப்சார்பர்களாக (Shock absorbers) செயல்படும் பேஸ் ஐசோலேஷன் பியரிங்ஸ்களை (Base isolation bearings) உள்ளடக்கியது, இது பூகம்பத்தின் போது பாலம் இடிந்துவிடாமல் சிறிது நகர அனுமதிக்கிறது. இந்த வடிவமைப்பு ரிக்டர் அளவுகோலில் 6.5 வரை நடுக்கத்தை தாங்கும் என்று கூறப்படுகிறது.

02. புதுமையான எஃகு தளம் (Innovative Steel Deck): இந்த டெக் வடிவமைப்பானது கட்டமைப்பு ஒருமைப்பாடு மற்றும் நீண்ட இடைவெளிகளை வழங்கும் எஃகு கற்றைகளின் வலையமைப்பால் ஆதரிக்கப்படும் நெளிந்த எஃகு தகட்டை பயன்படுத்துகிறது. எஃகு தளம் பாரம்பரிய கான்கிரீட் அடுக்குகளை விட இலகுவானது, பாலத்தின் ஒட்டுமொத்த எடையைக் குறைத்து, காற்று மற்றும் அலை சக்திகளுக்கு எதிராக செயல்படும்.

அடல் சேது பாலத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!

03. நீளமான இடைவெளிகள் (Longer spans): எஃகு தளமானது ஆதரவு தூண்களுக்கு இடையே நீண்ட இடைவெளிகளை உண்டாக்குகிறது (Longer spans between support piers); தேவையான தூண்களின் எண்ணிக்கையை குறைக்கிறது; மேலும் பாலத்தை மிகவும் அழகான வடிவமைப்பிற்கும் கொண்டு வருகிறது. இதுமட்டுமின்றி, கான்கிரீட் டெக்கை (Concrete deck) விட டெஸ்க்கை ஆய்வு செய்து பராமரிப்பதும் எளிது.

04. ரிவர்ஸ் சர்குலேஷன் ரிக்ஸ் (Reverse Circulation Rigs): அடல் சேது பாலத்தில் உள்ள இந்த ஸ்பெஷலான ரிக்குகள் ஒலி மற்றும் அதிர்வுகளை (Sound and vibrations) குறைக்க உதவுகின்றன. இதன் மூலம் இந்த பாலத்தை சுற்றியுள்ள கடல் வாழ் உயிரினங்கள் (Marine life) பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்படும்.

அடல் சேது பாலத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!

05. இரைச்சல் குறைப்பு நடவடிக்கைகள் (Noise Reduction Measures): மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலத்தின் இரைச்சல் பாதிப்பை குறைப்பதற்காக (Minimise the noise impact of the bridge.), பாலத்தின் பக்கவாட்டில் இரைச்சல் தடுப்புகள் (Noise barriers) மற்றும் சைலன்சர்கள் (Silencers) பொருத்தப்பட்டு உள்ளன.

06. சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகள் (Eco-friendly lighting): அடல் சேது பாலத்தின் விளக்கு அமைப்பானது நீர்வாழ் சூழலுக்கு (Aquatic Environment) இடையூறு விளைவிக்காத வகையில் வடிவமைக்கப்பட்ட குறைந்த ஆற்றல் கொண்ட எல்இடி விளக்குகளை (Low-energy LED lights) பயன்படுத்துகிறது.

07. ஓப்பன் ரோட் டோலிங் சிஸ்டம் (Open road tolling system): அடல் சேது பாலத்தில்.. து வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமின்றி தானாகவே வசூல் செய்ய உதவும்.. இடிசி (ETC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (Electronic toll collection) டெக்னாலாஜி பயன்படுத்தப்படுகிறது. இது சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை (Traffic congestion) குறைக்க உதவுகிறது.

08. நிகழ்நேர போக்குவரத்து தகவல் (Real-time Traffic Information): அடல் சேது பாலத்தின் ரியல்டைம் டிராஃபிக் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளேக்கள் ஆனது போக்குவரத்து நிலைமைகள், பாலம் மற்றும் பாலத்தை சுற்றியுள்ள சாலைகளில் ஏற்படும் விபத்துகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை (Up-to-date information) ஓட்டுநர்களுக்கு வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
8 technologies that make Atal Setu Bridge Mumbai Trans Harbour Link an engineering marvel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X