வெறும் ரூ.9,999/-க்கு சியோமியின் "செல்பீ சூப்பர் ஸ்டார்" இந்தியாவில் அறிமுகம்.!

எதிர்பார்த்தபடி, சியோமி நிறுவனம் ரெட்மீ Y1 ஸ்மார்ட்போனின் வாரிசான ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிவித்துள்ளது.

|

எதிர்பார்த்தபடி, சியோமி நிறுவனம் ரெட்மீ Y1 ஸ்மார்ட்போனின் வாரிசான ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிவித்துள்ளது

வெறும் ரூ.9,999/-க்கு சியோமியின் செல்பீ சூப்பர் ஸ்டார்; இந்தியாவில்.!

ரெட்மீ Y1 ஆனது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது என்பதும், அதனோடு வெளியான ஒப்போ எப்7, ஹானர் 9ஐ போன்ற ஸ்மார்ட்போன்கள், கடந்த இரண்டு காலாண்டுகளில் சிறந்த விற்பனையை சந்திக்கும் செல்பீ ஸ்மார்ட்போன்களாக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலைப்பாட்டில் சியோமி அதன் ரெட்மீ Y2-ஐ அறிமுகம் செய்து போட்டியை கிளப்பிவிட்டுள்ளது.

கேமரா அம்சங்கள்.!

கேமரா அம்சங்கள்.!

அறிமுகமான ரெட்மீ Y2 ஆனது ஒரு 16 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது அதன் முன்னோடியான ரெட்மீ Y1, நிச்சயமாக விவோ வி9 மற்றும் ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனை விட கேமரா மேம்பாடுகளை கொண்டுள்ளது. பின்பக்கத்தை பொறுத்தவரை, ஒரு 12 எம்பி முதன்மை கேமரா உடனான ஒரு 5 எம்பி இரண்டாம் நிலை கேமராவை கொண்ட இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.

செல்பீ கேமராவின் சிறப்பம்சங்கள்.!

செல்பீ கேமராவின் சிறப்பம்சங்கள்.!

இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவிற்கு எச்டிஆர் மற்றும் எல்இடி ப்ளாஷ் ஆதரவு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. அது குறைந்த ஒளி செல்பீ, சிஏஆர் எச்டிஆர், ஏஐ-பியூட்டி மற்றும் ஏஐ போர்ட்ரெயிட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆகமொத்தத்தில் இதை ஒரு செல்பீ சூப்பர் ஸ்டார் என்றே கூறலாம்.

டூயல் கேமராவின் சிறப்பம்சங்கள்.!

டூயல் கேமராவின் சிறப்பம்சங்கள்.!

பின்புறத்தில், உள்ள டூயல் கேமராவின் 12 எம்பி முதன்மை கேமரா ஆனது எப்/ 2.2 துளை, 1.25µm, PDAF ஆகிய ஆதரவுகள் இருக்க உடன் ஆழம் சார்ந்த 5 எம்பி டெப்த் சென்சார் ஒன்றும் உள்ளது. இந்த அமைப்பு ஐஓஎஸ் (மின்னணு பட உறுதிப்படுத்தல்) மற்றும் LED ப்ளாஷ் ஆதரவுடன் வருகிறது.

ரேம், மெமரி, டிஸ்பிளே

ரேம், மெமரி, டிஸ்பிளே

டிஸ்பிளேவை பொறுத்தவரை, 720 x 1440 பிக்சல்கள் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை கொண்ட 5.99 அங்குல HD+ டிஸ்ப்ளேவை தோற்றுவிக்கிறது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC மற்றும் 3 ஜிபி / 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் / 64 ஜிபி செழிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று கார்ட் ஸ்லாட்களை கொண்டுள்ளது. அதில் இரண்டு சிம் அட்டைகள் மற்றும் ஒரு மைக்ரோ அட்டை பயன்படுத்த முடியும்.

3080mAh பேட்டரி

3080mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் MIUI 9.5 ஸ்கின் கொண்டு இயங்கும். இந்த்ஸ் சியோமி ஸ்மார்ட்போனில் ஒரு புதிய போட்டோ எடிட்டிங் டூல் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.ஒரு 3080mAh பேட்டரியில் இருந்து சக்தி ஈர்க்கும் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மீ Y1 உடன் ஒப்பிடுகையில் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்கும், அதற்கு காரணமாக 14nm pப்ராசஸர் திகழும்.

இணையப்பு ஆதரவுகள்.!

இணையப்பு ஆதரவுகள்.!

பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது மற்றும் செயற்கை நுண்ணறிவின் கீழ் செயல்படும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது. உடன் 4ஜி LTE, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ USB போர்ட் ஆகிய பொதுவான இணைப்பு விருப்பங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

விலை நிர்ணயம் மற்றும் கிடைக்கும் தன்மை.!

விலை நிர்ணயம் மற்றும் கிடைக்கும் தன்மை.!

மூன்று வண்ண விருப்பங்களில் - ரோஸ் கோல்ட், சாம்பெயின் தங்கம் மற்றும் பிளாட்டினம் வெள்ளி - கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக வாங்க மட்டுமே கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாறுபாடானது ரூ 9,999/-க்கும் மற்றும் இதன் 4 ஜிபி ரேம் மாறுபாடு ரூ.12,999/-க்கும் வாங்க கிடைக்கும். ஜூன் 12 அன்று இதன் முதல் விற்பனை தொடங்குகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Y2 With 16MP Selfie Shooter Makes its Debut in India at Rs 9,999. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X