Redmi 210W Vs Realme 150W.. உண்மையான மின்னல் வேக சார்ஜிங் போன் எது? டெஸ்ட் ரிசல்ட் இதோ!

|

வேகமாக ஓடும் காலத்தில் எதற்கும் காத்திருக்க நேரமில்லை. அடுத்தடுத்தக் கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறோம். அதற்கு ஈடாக தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அலப்பறியதாக இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் வளர்ச்சி என்பதை குறிப்பிட்டு சொல்லலாம்.

காத்திருக்க நேரமில்லை..

காத்திருக்க நேரமில்லை..

ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் நேரம் வரைக் கூட யாராலும் காத்திருக்க முடியவில்லை. சிறிது நேரம் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்றால் ஏதோ இழந்தது போல் உணர்பவர்கள் பலர். இதை அறிந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சார்ஜிங் வேகத்தை அதிகரித்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தொடங்கின. அதன்படியான வெளியான இரண்டு ஸ்மார்ட்போன்களை தான் பார்க்கப்போகிறோம்.

அதிவேக சார்ஜிங் அம்சம் எந்த போனில் தெரியுமா?

அதிவேக சார்ஜிங் அம்சம் எந்த போனில் தெரியுமா?

Xiaomi நிறுவனத்தின் தரப்பில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 12 சீரிஸ், கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிஸ் இல் ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கிறது. இதில் சிறப்பு பதிப்பாக ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் இடம்பெற்றிருக்கிறது. பிற ஸ்மார்ட்போன்களைவிட அதிவேக சார்ஜிங் அம்சம் இதில் இடம்பெற்றருக்கிறது.

210 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்

210 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்

ரெட்மி நோட் 12 சீரிஸ் இல் விலை உயர்ந்த மாடலாக ரெட்மி நோட் 12 ப்ரோ+ இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இதைவிட குறிப்பிடத்தக்க உயர்ந்த அம்சத்துடன் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் 210 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இதில் 4300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

அவ்வளவு வேகம் இல்லையே?

அவ்வளவு வேகம் இல்லையே?

ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை முழுமையாக 9 நிமிடத்தில் சார்ஜ் செய்ய முடியும் என சியோமி கூறுகிறது. ஆனால் நிறுவனம் கூறியது போல் அவ்வளவு வேகம் இல்லை என ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது. ரியல்மி வெளியிட்ட 150 வாட்ஸ் சார்ஜிங் போனுக்கு எதிராக இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.

தோற்றுப்போனதா ரெட்மி?

தோற்றுப்போனதா ரெட்மி?

ChargerLAB இன் சார்ஜிங் சோதனை அறிக்கையில் வெளியான தகவலின்படி, ரெட்மி நோட் 12 டிஸ்கவரி பதிப்பு 184.85W என்ற உச்ச சார்ஜிங் வாட்டேஜை எட்டியதாக கூறப்படுகிறது. இது நிறுவனம் அறிவித்த 210 வாட்ஸ் வேகம் என்பதை விட குறைந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும் சராசரி வேகம் தொடர்ந்து 120W க்கு மேல் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உண்மையாகவே வரவேற்கத்தக்க விஷயம் ஆகும்.

நேர வித்தியாசம் எவ்வளவு?

நேர வித்தியாசம் எவ்வளவு?

சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை 9 நிமிடத்தில் 0 டூ 100 சதவீதம் சார்ஜ் செய்யும் என குறிப்பிட்டது. ஆனால் ChargerLAB அறிக்கை மாறுபட்டிருக்கிறது. நிறுவனம் குறிப்பிட்டத்தை விட சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கப்படுகிறது. இருப்பினும் இதில் அவ்வளவு வித்தியாசம் ஒன்றுமில்லை. அதாவது ChargerLAB அறிக்கைப்படி ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 10 நிமிடங்கள் மற்றும் 10 வினாடிகள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சியோமி அறிவித்த நேரத்துடன் இது பொருந்தவில்லை என்றாலும் அதிவேக சார்ஜிங் போனில் இது முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

வேகத்தில் பாதுகாப்பு இருக்கிறதா?

வேகத்தில் பாதுகாப்பு இருக்கிறதா?

இவ்வளவு வேகத்தில் சார்ஜிங் ஆகிறது என்ற போது இதன் பாதுகாப்புத் தன்மை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வது அவசியம். அதிக வாட்டேஜ் இல் இந்த ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது, சார்ஜர் மற்றும் ஸ்மார்ட்போன் குறிப்பிடத்தக்க வெப்பத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 43.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டியதாக கூறப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட சார்ஜிங் நுட்பத்துடன் குளிரூட்டும் அமைப்பும் இருக்கிறது. இதன் செயல்பாடு போன்றவற்றை ரிவ்யூக்களை வைத்து தான் கணிக்க முடியும்.

Realme GT Neo 3 150W எப்படி இருக்கு?

Realme GT Neo 3 150W எப்படி இருக்கு?

மறுபுறம் போட்டியில் இருக்கும் Realme GT Neo 3 150W குறித்து பார்க்கையில், 210 வாட்ஸ் வேகத்துக்கும் 150 வாட்ஸ் வேகத்துக்கும் அவ்வளவு ஒன்றும் வித்தியாசம் இல்லை. அதாவது Realme GT Neo 3 ஸ்மார்ட்போனானது 150 வாட்ஸ் சார்ஜிங் நுட்பத்துடன் வெளியானது. ரியல்மி ஜிடி நியோ 3 குறித்து ChargerLAB வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனானது 6 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆனதாகவும் 16 நிமிடம் மற்றும் 53 வினாடியில் முழுமையாக சார்ஜ் ஆனதாகவும் கூறப்படுகிறது.

கவனிக்கத்தக்க விஷயம் இதுதான்

கவனிக்கத்தக்க விஷயம் இதுதான்

சார்ஜர் லேப் அறிக்கைப்படி 210 வாட்ஸ் வேகத்துக்கும் 150 வாட்ஸ் வேகத்துக்கும் உள்ள வித்தியாசம் ஆறு நிமிடமே ஆகும். ஆனால் இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இரண்டிலும் வெவ்வேறு அளவிலான பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது ரெட்மி நோட் 12 டிஸ்கவரி பதிப்பில் 4300 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. அதேநேரத்தில் Realme GT Neo 3 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi 210W Vs Realme 150W.. Which one is Best in Fast Charging Smartphone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X