மிகவும் எதிர்பார்த்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் சேல்.!

ஒப்போ எப்7 சாதனம் பொதுவாக 64-பிட் 4ஜிபி ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

மிகவும் எதிர்பார்த்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் சேல்.!
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் எப்எச்டி எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஓப்போ எப்7 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மல்டிடாஸ்கிங் டெக்னாலஜி உள்ளது.

மிகவும் எதிர்பார்த்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் சேல்.!

மற்ற ஸ்மார்ட்போன்களை விட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,900-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இக்கருவியின் விலை ரூ.26,990-ஆக உள்ளது. ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் விற்பனை வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் என்று தெரிவிக்கப்பட்டுள்து.

முதல் ஃப்ளாஷ் சேல்:

முதல் ஃப்ளாஷ் சேல்:

நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பிளாஷ் விற்பனயில் 24 மணி நேரமும்
ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10,000-க்கும் அதிகமான ஸ்மார்ட்போனை விற்க முடிவு செய்துள்ளதுஓப்போ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2, 2018 அன்று ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் முதல் ப்ளாஷ் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 உற்சாகமான சலுகைகள்:

உற்சாகமான சலுகைகள்:

இந்த ஒப்போ எப்7 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஒப்போ அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் இருந்து ஒப்போ எப்7 டிஸ்பிளே உடைந்தால் மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ டெபிட் / கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. அதன்பின்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 120ஜிபி டேட்டா மற்றும் 1200வரை கேஷ்பேக் அறிவித்துள்ளது.

25மெகாபிக்சல் கேமரா:

25மெகாபிக்சல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 25மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும்.

இது வெறுமனே ஒரு கிளிக்கை நிகழ்த்தாது, இந்த தொழில்நுட்பம் ஆனது உங்கள் முகத்தில் உள்ள 296 புள்ளிகளை துல்லியமான முறையில் அங்கீகரித்து, அது சார்ந்த பகுப்பாய்வை நிகழ்த்தி செல்பீக்களை கைப்பற்றும். அதாவது பாலினம், வயது, தோல் நிறம் மற்றும் தோல் வகை ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை கண்டறிந்து ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி செல்பேக்களை எடுக்கும்.

19:9 திரைவிகதிம்:

19:9 திரைவிகதிம்:

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த கலர் அம்சத்தை கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோனை விட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் 2280 ஒ 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9
என்ற திரைவிகிதம் பொறுத்தவரை ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். மேலும ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களை பார்க்க சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

 கலர்ஓஎஸ் 5.0 உடனான பேஸ் அன்லாக் :

கலர்ஓஎஸ் 5.0 உடனான பேஸ் அன்லாக் :

ஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும். இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7 ஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஆக்டோ-கோர்

ஆக்டோ-கோர்

ஒப்போ எப்7 சாதனம் பொதுவாக 64-பிட் 4ஜிபி ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3400எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்லைட் சில்வர் மற்றும் டயமண்ட் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டயமண்ட் பிளாக் ஒப்போ எப்7 சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி அம்சத்தை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

Best Mobiles in India

English summary
OPPO F7 Flash Sale Dont miss the chance to grab the new Selfie Expert ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X