இது மோட்டோரோலா ஒன் பவரா.? அல்லது மோட்டோ X5 ஆ.? நீங்களே சொல்லுங்க.!

லெனோவா நிறுவனத்தின் துணை பிராண்டான மோட்டோரோலா கடைசியாக கடந்த வாரம் மோட்டோ Z3 ப்ளே ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

|

லெனோவா நிறுவனத்தின் துணை பிராண்டான மோட்டோரோலா கடைசியாக கடந்த வாரம் மோட்டோ Z3 ப்ளே ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனம் இப்போது மோட்டோரோலா ஒன் பவர் என்கிற மற்றொரு ஸ்மார்ட்போன் சார்ந்த வேலையில் ஈடுபட்டு வருவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது மோட்டோரோலா ஒன் பவரா.? அல்லது மோட்டோ X5 ஆ.? நீங்களே சொல்லுங்க.!

கூறப்படும் மோட்டோரோலா ஒன் பவர் ஆனது நிறுவனத்தின் இரண்டாவது ஆண்ட்ராய்ட் ஒன் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும் என வதந்திகள் தெரிவிக்கின்றன. ஆண்ட்ராய்ட் ஒன் கொண்டு இயங்கும் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் - கடந்த ஆண்டு வெளியான மோட்டோ எக்ஸ் 4 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான அம்சங்களும் வெளியாகிவிட்டது.! ​​

முழுமையான அம்சங்களும் வெளியாகிவிட்டது.! ​​

மோட்டோரோலா ஒன் பவர் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய எந்த விபரமும் இல்லை. இருப்பினும், இண்டர்நெட்டில் உலாவும் லீக்ஸ் தகவல்களிடம் படி கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும். மறுகையில் கூறப்படும் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களும் கூட வெளியாகிவிட்டது.

கூடுதல் சுவாரசியம்.?

கூடுதல் சுவாரசியம்.?

டெக்கீஸைன் வழியாக வெளியான லீக்ஸ் தகவலின்படி, மோட்டோரோலா ஒன் பவர் ஆனது 2280 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.2 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அதாவது, மோட்டோ எக்ஸ் 4-ல் இடம்பெற்ற என 18: 9-க்கு பதிலாக 19: 9 என்கிற விகிதம் இடம்பெறும் என்பது கூடுதல் சுவாரசியம். மற்றொரு ஆச்சரியமாக, இதன் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்பு திகழ்கிறது. ஆம், டாப் நாட்ச் கொண்டுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் டாப் நாட்ச் கொண்டு வெளியாகும் முதல் மோட்டோரோலா ஸ்மார்ட்போனாக இது திகழும்.

இரட்டை கேமராவை கொண்டிருக்கும்.!

இரட்டை கேமராவை கொண்டிருக்கும்.!

கேமராவை பொறுத்தவரை, மோட்டோரோலா ஒன் பவர் ஆனது செங்குத்தாக அமைக்கப்பெற்ற இரட்டை கேமராவை கொண்டிருக்கும். அதனோடு கீழ் பக்கமாக ஒரு லைட் ப்ளாஷ் ஒன்றும் இருக்கும். அது குறைந்த ஒளி சூழ்நிலைகளில் தெளிவான படங்களை கைப்பற்ற உதவும். சென்சார் அளவீடுகளை பொறுத்தவரை, 12 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் (எப் / 1.8) கூடிய 5 மெகாபிக்சல் ஒரு இரண்டாம் கேமரா (எப் / 2.0) இடம்பெறும். முன்பக்கத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் எப் / 2.2 துளை உடனான ஒரு 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

வன்பொருள் & மென்பொருள்.!

வன்பொருள் & மென்பொருள்.!

வன்பொருள் பகுதியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் உடனாக 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்கும். ஒரு பெரிய 3,780mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும். மென்பொருள் பகுதியை பொறுத்தவரை, மோட்டோரோலா ஒன் பவர் ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையில் இயங்கும் என்று எதிபார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, ஆண்ட்ராய்டு ஒன் கொண்டு இயங்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஆனது குறைந்தபட்சம் இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு புதுப்பித்தல்களை - ஆண்ட்ராய்டு P மற்றும் Q - பெறும்.

இது மோட்டோ X5 ஆ.?

இது மோட்டோ X5 ஆ.?

சில வதந்திகளின்படி, மோட்டோரோலா ஒன் பவர் ஆனது மோட்டோ X5 தான் என்று நம்ப படுகிறது. கடந்த வாரம் 3சி சான்றிதழ் தளத்தை தாண்டிய இந்த ஸ்மார்ட்போன், மாடல் எண் XT1942-1 எண்ணில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது மூன்று சார்ஜிங் வேகங்களை - 5V / 3A, 9V / 2A, மற்றும் 12V / 1.5A பட்டியலிட்டுள்ளது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Motorola, One Power, full specs sheet leaked, Specs, Smartphone, Technology, News, மோட்டோரோலா, அம்சங்கள், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள்

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X