எஸ்டி கார்டு - UFS கார்டு:என்ன வித்தியாசம்?

ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்.டி. கார்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு சங்கமே வைக்கும் அளவுக்கு இந்த துறையில் மிக அதிகமான எஸ்.கார்டு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

|

ஒரு ஸ்மார்ட்போனுக்கு அதன் மெமரி என்பது மிகவும் முக்கியமானது ஆகும். அதிக மெமரி இருந்தால் நமக்கு தேவையான அதிக விஷயங்களை அதில் சேமித்து வைத்து கொள்ள முடியும். மெமரி குறைவான டிவைஸ் என்றால் முக்கிய விஷயங்களை பதிவு செய்யும்போது ஏற்கனவே மெமரியில் உள்ளதை டெலிட் செய்துவிட்டு பின்னர் சேமிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது பயனாளிகளுக்கு கூடுதல் வேலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எஸ்டி கார்டு - UFS கார்டு:என்ன வித்தியாசம்?

இதற்காகவே பயனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு தற்போது UFS என்ற மெமரியை தற்போது அரிமுகம் செய்துள்ளார்கள். யுனிவர்சல் பிளாஷ் ஸ்டோரேஜ் இந்த புதிய மெமரி கார்டு, பயனாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே உள்ளது. இதற்கு முன்னர் நாம் எஸ்டி கார்டுகளை மெமரிக்காக பயன்படுத்தி வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்டி கார்டு என்றால் என்ன?
ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்.டி. கார்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு சங்கமே வைக்கும் அளவுக்கு இந்த துறையில் மிக அதிகமான எஸ்.கார்டு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

எஸ்.டி கார்டு பிரபலம் ஆவதற்கு முன்னர் காம்பாக்ட் பிளாஷ், மெமரி ஸ்டிக், மல்டிமீடியா கார்ட் மற்றும் எக்ஸ்டி கார்டு ஆகிய டெக்னாலஜிகளை பயனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இதில் மல்டிமீடியா மார்டு தான் எஸ்டி கார்டாக மாறியுள்ளது. இந்த கார்டுதான் கடந்த 2003ஆம் ஆண்டு மினி எஸ்டு காரு என்றும், 2005ஆம் ஆண்டு மைக்ரோ எஸ்டி கார்டு என்ற வடிவத்திலும் புத்துயிர் பெற்றது.

இந்த எஸ்டி கார்டுகள் எக்ஸ்டர்னல் கார்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தான், எலக்ட்ரானிக் மல்டிமீடியா என்ற கார்டு இண்டர்னல் கார்டாக பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இதுவும் எஸ்டி கார்டு டெக்னாலஜிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்டி கார்டு - UFS கார்டு:என்ன வித்தியாசம்?

UFS:
இது ஒரு முழுமையான டூப்லெக்ஸ் டெக்னாலஜியில் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் எளிதில் ரீட் செய்வது சாத்தியம். சாம்சங் நிறுவனம் இந்த புதிய UFS டெக்னாலஜியை இண்டர்னல் மெமரி சிஸ்டமாக ஒருசில மாடல்களில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது.

எஸ்டி கார்டு - UFS கார்டு:என்ன வித்தியாசம்?


UFS கார்டு:

சாம்சங் நிறுவனம் இந்த UFS கார்டுகளை 32,64,128, மற்றும் 256 ஜிகாபைட்ஸ்களில் அறிமுகம் செய்துள்ளது. இதன் பயன்கள் என்னவென்று பார்ப்போம்

1. வேகமான மெமரி:
சாம்சங் நிறுவனத்தின் இந்த UFS கார்டு மிக வேகமாக ரீட் செய்ய அதாவது 530 எம்பி வேகத்தில் செயல்படும். இது சாதாரண எஸ்டி கார்டு இயங்கும் வேகத்தை விட மிக அதிகம். ஒரு முழு திரைப்படத்தை ஒரு எஸ்டி கார்டு 50 வினாடிகளில் காப்பி செய்கிறது என்றால் UFS கார்டு அதில் 5 வினாடிகளில் காப்பி செய்யும்

2. பேட்டரி தன்மை:
எஸ்டி கார்டை பயன்படுத்தும்போது தேவைப்படும் பேட்டரியை விட மிக குறைவான பேட்டரியே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. செயலி ஸ்டோரேஜை போர்ட்டபிள் செய்யும் வசதி:
எக்ஸ்டர்னலாக செயல்பட்டு வரும் இந்த UFS கார்டு வேகமாக டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யவும், பயன்படுத்த எளிதாகவும் இருப்பதால் எஸ்டி கார்டுகளை விட அனைத்து விதத்திலும் கூடுதல் வசதிடயுன்.

எஸ்டி கார்டு - UFS கார்டு:என்ன வித்தியாசம்?

முடிவுரை:

மொத்தத்தில் UFS கார்டு என்ற புதிய டெக்னாலஜியை பயன்படுத்துவது கூடுதல் பயனுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் வேகமாக செயல்படும் வகையிலும், பேட்டரியின் திறன் குறைவான தேவையாகவும் இருப்பதால் இந்த UFS கார்டு அதிக பயனாளிகளை ஈர்க்கும்.

Best Mobiles in India

English summary
Heres how UFS Cards and SD Cards are different from each other ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X