புதிய வீடியோ கேம்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் தோஷிபா லேப்டாப்

Posted By: Staff

புதிய வீடியோ கேம்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் தோஷிபா லேப்டாப்
மின்னனு பொருள் உற்பத்தியில் தோஷிபா நிறுவனத்திற்கு ஒரு சிறந்த பெயர் உண்டு. ஏனெனில் அவற்றின் தரமும் தொழில் நுட்பமும் மிக அம்சமாக இருக்கும்.

குறிப்பாக தோஷிபா வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் வைத்து அது எப்போதுமே தமது படைப்புகளை சரியான பாதையில் மாற்றிக் கொண்ட இருக்கும்.

அந்த வகையில் தோஷிபா புதிய க்வோசிமியோ எக்ஸ்770 என்ற புதிய விளையாட்டுகள் நிறைந்த மடி கணினியை அறிமுகப்படுத்துகிறது.

இதற்கு முன்பு இத்தகைய மடி கணனியை பார்த்து இருக்கு முடியாது என்று சொல்லும் அளவிற்கு இந்த புதிய மடி கணனி தரத்திலும் செயல் திறத்திலும் இருக்கிறது.

தோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜி ஷட்டர் கண்ணாடியுடன் வருகிறது. அதனால் இதில் விளையாடும் போது மிக ஆர்வமாக இருக்கும்.

மேலும் க்ராபிக்ஸ் வசதிக்காக என்விடியை க்ராபிக்ஸ் தொழில் நுட்பம் இதில் உள்ளது. மேலும் இதன் ப்ராசஸர் க்வாட் கோர் ஆகும்.

அதனால் இதில் வேகமாக விளையாடலாம். மேலும் இது 4ஜிபி அல்லது 6ஜிபி அல்லது 8ஜிபிகளில் வருகிறது. இதன் டிஸ்ப்ளே 17.3 இன்ச் ஆகும்.

மேலும் இது 4ஜிபி ஹைப்ரீட் ட்ரைவ் கொண்டிருப்பதால் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும். மேலும் இந்த மடி கணினியை பெரிய திரையுடன் இணைக்கவும் முடியும்.

தோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜியில் 3டி வசதி உள்ளதால் 3டி வசதியுடன் இதில் விளையாடலாம்.

இதன் 3டி வெப் கேமரா மூலம் 3டி படங்களையும் 3டி வீடியோ கான்பரன்சிங்கையும் நடத்தலாம்.

இந்த மடி கனணி ஹார்மான்/கார்டோன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இதன் ஒலி அமைப்பும் மிக அருமையாக இருக்கும்.

தோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜின் வெளிப்புறத்தைப் பார்த்தால் இது கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் கீபோர்ட் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. மேலும் இதில் நீயூமரிக் கீபேடும் உள்ளது.

தோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜின் விலையைப் பார்த்தால் இது இந்தியாவில் ரூ.75,000க்கு கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot