Home
News

ஸ்டைலு ஸ்டைலு தான்.. இது Samsung ஸ்டைலு தான்.. மாஸ் பவர் அம்சத்துடன் புது Laptop அறிமுகம்.. என்ன மாடல்?

அடி தூள்.. நீங்க காலத்திற்கு பிறகு சாம்சங் (Samsung) நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு சூப்பர் லேப்டாப் சாதனத்தை அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப் சாதனம் சாம்சங் கேலக்ஸி புக் 4 (Samsung Galaxy Book4) ஆகும்.

சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சாம்சங் கேலக்ஸி புக் 4 (Samsung Galaxy Book4) லேப்டாப் சாதனம் ஒரு நோட்புக் மாடல் கருவியாகும். இந்த புதிய லேப்டாப் சாதனம் மிகவும் சக்தி வாய்ந்த கனெக்டிவிட்டி, பெர்பார்மென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் இதில் இடம்பெற்றுள்ள அசத்தலான அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஸ்டைலு ஸ்டைலு தான்.. இது Samsung ஸ்டைலு தான்.. புது Laptop அறிமுகம்..

சாம்சங் கேலக்ஸி புக் 4 (Samsung Galaxy Book4): லேப்டாப் சாதனம் 15.6" இன்ச் அளவு கொண்ட முழு HD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மிகவும் கிரிஸ்பான மற்றும் கிளாரிட்டியான டிஸ்பிளே அனுபவத்தை வழங்குகிறது. கிளாரிட்டி பற்றி பேசும்போது, சாம்சங் தான் மிகவும் தரமான டிஸ்பிளேக்களை உருவாக்கி வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை சாம்சங் சாம்சங் கேலக்ஸி புக் 4 டிஸ்பிளே மூலம் நிரூபித்துள்ளது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி புக் 4 சாதனம் ஸ்லிம் வடிவில் மெட்டல் சேசிஸ் பாட்டியுடன் வெறும் 1.55 கிலோ எடை உடன் வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப் க்ரேய் மற்றும் சில்வர் ஆகிய இரண்டு நிறங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி புக் 4 லேப்டாப் சாதனம் சாம்சங்கின் பிரத்தியேகமான AI பவர் போட்டோ ரீமாஸ்டர் அம்சத்துடன் வெளிவந்துள்ளது.

இந்த அம்சம் குறைந்த குவாலிட்டியில் உள்ள புகைப்படங்களை AI உதவியுடன் உயர் தரத்திற்கு மாற்றுகிறது. மற்றும் புகைப்படங்களில் காணப்படும் குறைந்த லைட் மற்றும் நிழல்களை நீக்கி புகைப்படத்தின் கிளாரிட்டியை அதிகரிக்கிறது. இந்த சாம்சங் லேப்டாப் சாதனம் ஒன் UI புக் வெர்ஷன் 6 (One UI Book version 6) இன்டெர்பெஸ் உடன் வருகிறது. இந்த லேப்டாப் இன்டெல் கோர் 5 மற்றும் 7 பிராசஸர் உடன் வருகிறது.

ஸ்டைலு ஸ்டைலு தான்.. இது Samsung ஸ்டைலு தான்.. புது Laptop அறிமுகம்..

சாம்சங் கேலக்ஸி புக் 4 விலை (Samsung Galaxy Book4 Price):

இந்த சாதனம் இன்டெல் கிராபிக்ஸ் உடன் 1TB எக்ஸ்பெண்டபிள் SSD ஆதரவுடன் வருகிறது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மாஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் கேமராவை வெப் கேமராவாக பயன்படுத்த அனுபவிக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாம்சங் கேலக்ஸி புக் 4 RJ45 LAN லேன் போர்ட் ஆதரவையும் கொண்டுள்ளது.

சாம்சங் ரூ. 5,000 மதிப்புள்ள பேங்க் கேஷ்பேக், ரூ. 4,000 வரை மேம்படுத்தப்பட்ட போனஸ், 24 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் 10% ஸ்டூடன்ட் தள்ளுபடி ஆகியவற்றை வழங்குகிறது. இந்த லேப்டாப் சாதனம் இப்போது இந்திய லேப்டாப் சந்தையில் ரூ.74,990 என்ற ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வருகிறது என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. பெஸ்டான லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் இந்த டிவைஸை தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Book4 The Most Stylish Laptop From Samsung Launched In India Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X