சவால்விடும் பட்ஜெட் விலை.. 16" இன்ச் பெரிய டிஸ்பிளே.. ரகரகமா 3 மாடல்.. இப்போவே வாங்க பெஸ்ட் Laptop..
குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவுடன் i3, i5 மற்றும் i7 கோர் பிராசஸர் உடன் இயங்கும் லேப்டாப் வேண்டுமா? அப்படியானால், நீங்கள் உடனே வாங்கவேண்டிய லேப்டாப் சாதனம் இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) தான்.
இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) லேப்டாப் சாதனம் பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget segment laptop) வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த மாதம் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) என்ற மலிவு விலை லேப்டாப் (Laptops) சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Infinix INBook Y4 Max லேப்டாப் ஆனது மெல்லிய பெசல் உடன் வரும் ஒரு பெரிய 16" இன்ச் டிஸ்பிளேவை (16" inches display laptop) கொண்டுள்ளது. இது ஒரு FHD தெளிவுத்திறன், 83 சதவீதம் sRGB ஸ்பேஸ், 300 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 87 சதவீதம் டிஸ்பிளே-டு-பாடி ரேட்ஸியோ (display-to-body-ratio) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max):
லேப்டாப்பில் பேக்லிட் கீபோர்டு (backlight keyboard) மற்றும் 7.06 இன்ச் ஏஜி கிளாஸ் டச் பேனல் (AG glass touch panel) உள்ளது. இந்த லேப்டாப் சாதனத்தின் டிசைன் பற்றி பேசுகையில், Infinix INBook Y4 Max ஆனது அலுமினிய அலாய் மெட்டல் சேஸ்ஸையும் (aluminium alloy metal chassis), டாப்மூடியில் டூயல் கிரேடியன்ட் பூச்சு வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதன் எடை 1.78 கிலோ மட்டுமே உள்ளது.
இதன் சிறந்த ஆடியோ அம்சத்திற்காக, இது முன்பக்கத்தில் டூயல் 2W ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹூட்டின் கீழ், Infinix INBook Y4 Max லேப்டாப் சாதனம் 13-வது தலைமுறை இன்டெல் கோர் (Intel Core) i3, i5 மற்றும் i7 பிராசஸர் உடன் வருகிறது. இது இன்டெல் ஐரிஸ் Xe ஜிபியு (Intel Iris Xe GPU) உடன் வருகிறது.

இந்த லேப்டாப் சாதனம் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி (SSD storage) பேக் செய்கிறது. இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் (Infinix laptop) சாதனம் 65W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (fast charging) 70Wh பேட்டரி செல் (Battery) மூலம் ஆதரிக்கப்படுகிறது.
இது Windows 11 OS இல் இயங்குகிறது. Infinix INBook Y4 Max இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் USB-A போர்ட், USB-C போர்ட், மைக்ரோ SD கார்டு ஸ்லாட், 3.5mm ஜாக் மற்றும் HDMI 1.4 போர்ட் ஆகியவை அடங்கும். இந்த லேப்டாப் சாதனம் வைஃபை 6 (Wi-Fi 6) அம்சத்துடன் வருகிறது. இது விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருகிறது.
இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் விலை விபரம் (Infinix INBOOK Y2 Plus Price Details):
இதன் விலை பற்றிய விபரங்களும் இப்போது வெளியாகியுள்ளது. இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) லேப்டாப் சாதனத்தின் i3 லேப்டாப் மாடல் (1315U) 16GBரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் உடன் ரூ.33,990 விலையில் வருகிறது. இதன் அடுத்த வேரியண்ட் மாடலான (1335U) 13வது ஜென் கோர் i5 சாதனம் 16GBரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் ரூ.40,990 விலையில் வருகிறது.
இறுதியாக, இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் மாடலான (1355U) 13வது ஜென் கோர் i7 சாதனம் 16GBரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் உடன் ரூ.49,990 விலையில் வருகிறது. இந்த லேப்டாப் சாதனம் இப்போது ப்ளூ மற்றும் சில்வர் நிறங்களில் வருகிறது. பெரிய டிஸ்பிளேவுடன் பட்ஜெட் விலையில் புது லேப்டாப் வாங்க இது பெஸ்ட் சாய்ஸ்.


Click it and Unblock the Notifications








