Home
News

யாரு சாமி நீ.. மொபைல் விலைல Laptop கொடுக்குற.. கலக்கவரும் புது Infinix Inbook Y2 Plus.. என்ன விலை?

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்லிம் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதை இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) என்ற பெயரில் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரம் இதோ.

இன்பினிக்ஸ் நிறுவனம், இந்திய லேப்டாப் சந்தையில் (Indian Laptop Market) மிகவும் குறைந்த விலையில் ஒரு புதிய லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் சரியான அறிமுக தேதி பற்றிய விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனத்தில் இடம்பெறும் முக்கிய சிறப்பம்சங்களை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

யாரு சாமி நீ.. மொபைல் விலைல Laptop கொடுக்குற.. என்ன விலை?

இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் லேப்டாப் (Infinix Inbook Y2 Plus Laptop):

வரவிருக்கும் புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனம் 15.6" இன்ச் கொண்ட ஆன்டி-கிளேர் LCD டிஸ்பிளேவை (15.6" inch anti-glare LCD display) கொண்டுள்ளது. இது முழு எச்டி (Full HD resolution) ஆதரவுடன் 260 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த லேப்டாப் சாதனம் மிகவும் ஸ்லிம் ஆன மற்றும் வெயிட்லெஸ் மாடலாக வெளிவரவுள்ளது என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது.

இது அலுமினியம் பாடி உடன் பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இது 11வது தலைமுறை இன்டெல் கோர் i3 (1th-generation Intel Core i3) மற்றும் i5 (Intel Core i5) சிபியு (CPU) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் பெர்பார்மென்ஸ்க்கு ஏற்ற விருப்பங்களை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இது 16ஜிபி ரேம் உடன் 512ஜிபி PCIe 3.0 ஸ்டோரேஜ் (PCIe 3.0 storage) உடன் வருகிறது.

இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனம் பேக்லைட் கீபோர்டு (backlit keyboard) அம்சத்துடன் வருகிறது. இது 50Wh பேட்டரி (Battery) உடன் வருகிறது. இது 65W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) அம்சத்துடன் PD 3.0 தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது டைப்-சி உடன் டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் (Type-C to Type-C fast-charging) அம்சத்தை ஆதரிக்கிறது.

யாரு சாமி நீ.. மொபைல் விலைல Laptop கொடுக்குற.. என்ன விலை?

இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் லேப்டாப் விலை என்ன? (Infinix Inbook Y2 Plus Laptop Price):

இது 60 நிமிடங்களில் 75% சார்ஜ் ஏறும் திறனை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் சாதனம் விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் (Windows 11 Home edition) உடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ.25,000 முதல் 29,000 என்று விலை பட்டியலுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ளூ (blue), சில்வர் (silver), மற்றும் க்ரேய் (grey) நிறங்களில் வெளிவரும்.

இந்த Infinix Inbook Y2 Plus லேப்டாப்பின் அறிமுகம் இன்னும் சில நாட்களில் நடைபெறும். இன்பினிக்ஸ் நிறுவனத்தின் வழக்கம் போல், இந்த லேப்டாப் சாதனம் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) விற்பனையில் உள்ளது. இது குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் என்பதனால் கூடுதல் யூனிட் விற்பனையாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Inbook Y2 Plus budget friendly laptop to launch soon in India check price and specification details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X