Home
News

இந்தியாவின் குறைந்த விலை Laptop.. மொபைலை விட கம்மி ரேட்.. என்ன மாடல்? எப்போது விற்பனை?

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலையில் ஒரு புதிய லேப்டாப் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனம், இந்திய லேப்டாப் சந்தையில் (Indian Laptop Market) மிகவும் குறைந்த விலையில் இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) என்ற புதிய லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் இன்புக் Y1 பிளஸ் (Infinix Inbook Y1 Plus) மாடலின் வாரிசாக வெளிவந்துள்ளது.

இந்தியாவின் குறைந்த விலை Laptop.. மொபைலை விட கம்மி ரேட்.. என்ன மாடல்?

இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனத்தில் இடம்பெறும் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை மற்றும் விற்பனை விபரங்கள் இதோ. புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனம் 15.6" இன்ச் கொண்ட ஆன்டி-கிளேர் LCD டிஸ்பிளேவை (15.6" inch anti-glare LCD display) கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus):

இது முழு எச்டி (Full HD resolution) ஆதரவுடன் 260 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த லேப்டாப் சாதனம் மிகவும் ஸ்லிம் ஆன மற்றும் வெயிட்லெஸ் மாடலாக வெளிவந்துள்ளது. இது அலுமினியம் பாடி உடன் பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இது 11வது தலைமுறை இன்டெல் கோர் i3 (11th generation Intel Core i3) மற்றும் i5 (Intel Core i5) சிபியு (CPU) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனம் இரண்டு வெவ்வேறு விலையில் வாங்க கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் பெர்பார்மென்ஸ்க்கு ஏற்ற விருப்பங்களை தேர்வு செய்துகொள்ளலாம். இது 16ஜிபி ரேம் உடன் 512ஜிபி SSD ஸ்டோரேஜ் (SSD storage) உடன் வருகிறது. இந்த லேப்டாப் கீபோர்ட் பேக்லைட் அம்சத்துடன் (backlit keyboard) வருகிறது.

இந்தியாவின் குறைந்த விலை Laptop.. மொபைலை விட கம்மி ரேட்.. என்ன மாடல்?

இது 50Wh பேட்டரி (Battery) உடன் வருகிறது. இது 65W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) அம்சத்துடன் PD 3.0 தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது டைப்-சி உடன் டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் (Type-C to Type-C fast-charging) அம்சத்தை ஆதரிக்கிறது. இது 60 நிமிடங்களில் 75% சார்ஜ் ஏறும் திறனை கொண்டுள்ளது. இந்த லேப்டாப் சாதனம் விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் (Windows 11 Home edition) உடன் வருகிறது.

முக்கிய குறிப்பாக, இந்த லேப்டாப் சாதனம் 6.36" இன்ச் ஏஜி கிளாஸ் டச்பேட் (AG glass touchpad) உடன் வருகிறது. இந்த புதிய Infinix Y2 Plus ஆனது Core i3 மாடல் 8GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் விலை ரூ.27,490 முதல் தொடங்குகிறது. அதேபோல், Core i5 உடன் வரும் 16GB ரேம் மற்றும் 512GB மாடல் விலை ரூ.34,990 விலைக்கு வருகிறது.

இது இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. இது ப்ளூ (blue), சில்வர் (silver), மற்றும் க்ரேய் (grey) நிறங்களில் வாங்க கிடைக்கிறது. குறைந்த விலையில் புதிய லேப்டாப் வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த இன்புக் Y2 பிளஸ் (Infinix Inbook Y2 Plus) லேப்டாப் சாதனத்தை தாராளமாக வாங்கி பயன்பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Inbook Y2 Plus Budget Segment Laptop Launched In India Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X