Home
News

அட்ராசக்கை.. பட்ஜெட் விலை.. 16" இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. தூள் கிளப்பும் ஸ்லிம் லேப்டாப்.. என்ன மாடல்?

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம், அதன் போர்ட்போலியோவில் புதிய பட்ஜெட் பிரைஸ் லேப்டாப் (Budget Price Laptop) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) என்று அழைக்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) லேப்டாப் சாதனம் பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget segment laptop) வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த மாதம் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) என்ற மலிவு விலை லேப்டாப் (Laptops) சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்ராசக்கை.. பட்ஜெட் விலை.. 16

Infinix INBook Y4 Max லேப்டாப் ஆனது மெல்லிய பெசல் உடன் வரும் ஒரு பெரிய 16" இன்ச் டிஸ்பிளேவை (16" inches display laptop) கொண்டுள்ளது. இது ஒரு FHD தெளிவுத்திறன், 83 சதவீதம் sRGB ஸ்பேஸ், 300 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 87 சதவீதம் டிஸ்பிளே-டு-பாடி ரேட்ஸியோ (display-to-body-ratio) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் லேப்டாப் (Infinix INBOOK Y4 Max Laptop):

லேப்டாப்பில் பேக்லிட் கீபோர்டு (backlight keyboard) மற்றும் 7.06 இன்ச் ஏஜி கிளாஸ் டச் பேனல் (AG glass touch panel) உள்ளது. இந்த லேப்டாப் சாதனத்தின் டிசைன் பற்றி பேசுகையில், Infinix INBook Y4 Max ஆனது அலுமினிய அலாய் மெட்டல் சேஸ்ஸையும் (aluminium alloy metal chassis), டாப்மூடியில் டூயல் கிரேடியன்ட் பூச்சு வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதன் எடை 1.78 கிலோ மட்டுமே உள்ளது.

இதன் சிறந்த ஆடியோ அம்சத்திற்காக, இது முன்பக்கத்தில் டூயல் 2W ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹூட்டின் கீழ், Infinix INBook Y4 Max லேப்டாப் சாதனம் 13-வது தலைமுறை இன்டெல் கோர் (Intel Core) i3, i5 மற்றும் i7 பிராசஸர் உடன் வருகிறது. இது இன்டெல் ஐரிஸ் Xe ஜிபியு (Intel Iris Xe GPU) உடன் வருகிறது.

அட்ராசக்கை.. பட்ஜெட் விலை.. 16

இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் லேப்டாப் விலை (Infinix INBOOK Y4 Max Laptop Price):

இந்த லேப்டாப் சாதனம் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்எஸ்டி (SSD storage) பேக் செய்கிறது. இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் (Infinix laptop) சாதனம் 65W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (fast charging) 70Wh பேட்டரி செல் (Battery) மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது Windows 11 OS இல் இயங்குகிறது.

Infinix INBook Y4 Max இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் USB-A போர்ட், USB-C போர்ட், மைக்ரோ SD கார்டு ஸ்லாட், 3.5mm ஜாக் மற்றும் HDMI 1.4 போர்ட் ஆகியவை அடங்கும். Infinix INBook Y4 Max லேப்டாப்பின் அடிப்படை வேரியண்ட் மாடல் சுமார் ரூ.37,990 அறிமுக விலையில் வருகிறது. இது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இருந்து ஜனவரி 22 முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் உங்கள் பாக்கெட் மணிக்கு எந்தவொரு பங்கமும் ஏற்படாமல், சிறந்த ஒரு லேப்டாப் சாதனத்தை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் தாராளமாக இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) சாதனத்தை வங்காளம். குறிப்பாக, பட்ஜெட் விலையில் பெரிய டிஸ்பிளே லேப்டாப் வேண்டுமென்பவர்களுக்கு இது சூப்பர் சாய்ஸ்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix INBook Y4 Max with 16 Inch Display and 13 Gen i3 i5 i7 Intel Core Budget Price Laptop Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X