Home
News

ஷாக்கிங் ரிப்போர்ட்: லேப்டாப், மொபைலில் கூட ஆண் பெண் வேறுபாடு வேண்டும்.. மகளீர் தினத்தில் பெண்களின் கருத்து..

பெண்களின் பங்கீடு சமூதாயத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்துவரும் நிலையில் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவது சமூதயத்தின் கடமை. அனைவரது வாழ்க்கையையும் சுலபமாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் பெண்களுக்கு எந்த வகையில் உதவுகிறது? பெண்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?

உலக பெண்கள் தினத்தை (Womens day) முன்னிட்டு புகழ்பெற்ற டெக்னாலஜி அனல்டிக், ரிசர்ச் மற்றும் கன்சல்டிங் (Technology Analytic, Research and Consulting) நிறுவனமான டெக்ஆர்க் (Techarc) பெண்களுக்கும் (Women) தொழில்நுட்பத்திற்கும் இருக்கும் தொடர்பு குறித்த கருத்துகணிப்பை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பிற்காக நாடு முழுவதும் சுமார் 1,150 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களது பதில்களை வைத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஷாக்கிங் ரிப்போர்ட்: லேப்டாப், மொபைலில் கூட ஆண் பெண் வேறுபாடு வேண்டும்

கருத்துக்கணிப்பின் முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு டெக்ஆர்க்கின் தலைமை ஆய்வாளர் மற்றும் நிறுவனர் ஃபைசல் கவூசா (Faisal Kawoosa) கூறுகையில், தொழில்நுட்பமானது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் ஆண், பெண் என்று இருவரின் தேவையும் வெவ்வேறு என்பதால், ஒருவரது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளை அவர்களது விருப்பம், தேவை ஆகியவற்றை பொருத்து உருவாக்கின்றனர்.

ஆண்கள் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக கஸ்டமைஸ் (Customize) செய்யப்படுவதால் மார்கெட்டில் அதற்கான வரவேற்பும் அதிகமாக உள்ளது. இந்த வேறுபாடு ஹார்ட்வேரில் (Hardware) மட்டுமின்றி சாஃப்ட்வேர் (Software) மற்றும் ஆப்களிலும் அமைக்கப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்பின் மூலம், பொதுவாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகள் பெண்களை மனதில் வைத்து உருவாக்கபடவில்லை என்ற அதிருப்தி பெண்கள் மத்தியில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, தொழில்நுட்ப கருவிகளின் டிசைன், நிறம், மெட்டிரியல் (material) மற்றும் அதில் இருக்கும் அப்லிகேஷன்கள் (applications) ஆகியவற்றை பெண்களையும் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும் என்றும், அதற்கு AI மற்றும் இதர தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில்நுட்ப கருவிகளின் உருவாக்கம் குறித்து பெண்களின் கருத்து என்ன என்று இப்போது பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள்: ஸ்மார்ட்போன்களை பொருத்தவரை அதன் வடிவமைப்பு, நிறங்கள் ஆகியவை பெண்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இருந்தாலும் பெண்களின் மூடிற்கு ஏற்றவாறு அவ்வபோது சில அம்சங்களை மாற்றிக்கொள்ளுமாறு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமாம்.

ஷாக்கிங் ரிப்போர்ட்: லேப்டாப், மொபைலில் கூட ஆண் பெண் வேறுபாடு வேண்டும்

வியரபில்ஸ் (Wearables): வியரபில்ஸில் ஸ்மார்ட்ரிங் (Smartring) பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்மார்ட் வாட்ச்களில் பெண்களை மையப்படுத்தும் அம்சங்கள் இருப்பதை அவர்கள் விரும்பினாலும், பெரிய டயல்களைக் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.

லேப்டாப்: ஐடி, ஆராய்ச்சி துறை என்று ஆரம்பித்து பள்ளிக்கூடங்கள் வரை பெண்களும் அதிகமாக லேப்டாப் பயன்படுத்தும் காலம் இது. எனவே பெண்களுக்கு விருப்பமான வடிவமைப்புகளுடன் லைட்-வெய்ட் லாப்டாப்களை அவர்கள் எதிர்பார்ப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் டிவி: பெரும்பாலான பெண்களுக்கு ஸ்மார்ட் டிவி மேல் நல்ல அபிப்ராயம் இல்லை. மேலும், பெண்களுக்கு ஸ்மார்ட் டிவிக்களை கையாள்வதும் கடினமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீட்டு உபயோகப்பொருட்கள்: ஸ்மார்ட் வீட்டு உபயோகப்பொருட்களின் பெரும் வாடிக்கையாளர்கள் பெண்கள் தான் என்றாலும், அதன் அம்சங்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக ஓவன் (Oven), ஃப்ரிட்ஜ் (Fridge), வாஷிங் மெஷின் (Washing machine) ஆகியவற்றில் இருக்கும் ஸ்மார்ட் அம்சங்களை கையாள்வது பெண்களுக்கு கடினமாக இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளையும், வீட்டு உபயோக பொருட்களையும் பெரும்பாலும் பெண்கள் பயன்படுத்தும் சூழ்நிலை அதிகரித்து வருவதால், இனி அவற்றை வடிவமைக்கும் போது பெண்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு விருப்பமானதாகவும், பயனளிப்பதாகவும் உருவாக்க வேண்டும் என்பதே டெக்ஆர்க் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New report says women are not comfortable using with mobile smartphone laptop smartwatch smart tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X