Home
News

உலகின் முதல் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.. 14" இன்ச் OLED.. டேப்லெட்..டெஸ்க்டாப்.. நோட்புக் எல்லாம் ஒரே டிவைஸில்..

இந்த 2024ம் ஆண்டை தொடர்ந்து இனி உலகளவில் மக்கள் டூயல் டிஸ்பிளே கொண்ட லேப்டாப் (Laptop) சாதனத்தை பயன்படுத்த போகிறார்கள். ஆம், 2 டிஸ்பிளேவுடன் தனியாக பிரித்தெடுக்க கூடிய கீபோர்ட் டிவைஸுடன் புதிய லேப்டாப் சாதனத்தை ஆசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆசஸ் (Asus) நிறுவனம் இப்போது நடைபெற்று வரும் CES 2024 நிகழ்வில் அதன் புதிய ஆசஸ் ஜென்புக் டுவோ லேப்டாப் (ASUS Zenbook DUO Laptop) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகத்தின் முதல் டூயல் டச் டிஸ்பிளே லேப்டாப் (Dual Touch Display Laptop) சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சமே, இதை நீங்கள் 5 இன் 1 சாதனமாக பயன்படுத்தலாம்.

உலகின் முதல் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.. 14

இது லேப்டாப் மோட் (Laptop mode), டூயல் ஸ்கிரீன் மோட் (Dual screen mode), டூயல் ஸ்க்ரீன் கீபோர்ட் மோட் (Dual Screen Keyboard Mode), டெஸ்க்டாப் மோட் (Desktop Mode) மற்றும் ஷேரிங் மோட் (Sharing Mode) போன்ற அம்சங்களுடன் வருகிறது. ஆம், இதை வழக்கமான லேப்டாப் சாதனம் போல ஒரே ஒரு டிஸ்பிளே மற்றும் கீபோர்ட் உடன் பொதுவான டிஸைனுடன் பயன்படுத்தலாம். மறுபுறம், இரண்டு டிஸ்பிளேவையும் பிரித்து பெரிய டிஸ்பிளேவாக மாற்றி பயன்படுத்தலாம்.

ஆசஸ் ஜென்புக் டுவோ லேப்டாப் (ASUS Zenbook DUO Laptop):

இந்த முறையில், கீபோர்ட்டை லேப்டாப்பில் இருந்து தனியாக கீழே பொருத்தியோ அல்லது பிளோட்டிங் கீபோர்ட் (Floating keyboard) சாதனமாகவோ பயன்டுத்தலாம். இறுதியாக, இதை நீங்கள் டூயல் டிஸ்பிளே டேப்லெட் போல பயன்படுத்தலாம். உண்மையில், இந்த வடிவமைப்பு CES 2024 நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லேப்டாப் சாதனங்கள் எதிர்காலத்தில் எப்படி உருமாறப்போகிறது என்பதை ஆசஸ் நிறுவனம் நமக்கு தெளிவாக காண்பித்துவிட்டது.

கடந்த ஆண்டில் ஆசஸ் நிறுவனம் இந்த வடிவமைப்பின் கான்செப்ட் (Concept) மாடலை லீக் செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், ஆசஸ் நிறுவனம் மிகவும் தீவிரமாக வேலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய கான்செப்ட் மாடலை விட, இந்த ஆசஸ் ஜென்புக் டுவோ (2024) மாடலை பல மடங்கு மேம்படுத்தல்களுடன் இரண்டு டச் டிஸ்பிளேவுடன் ஆசஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது.

உலகின் முதல் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.. 14

இந்த லேப்டாப் சாதனத்தின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 14" இன்ச் 3K OLED டிஸ்பிளேவுடன் (14-inch 3K OLED Display) வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்துடன் (120 Hz Refresh Rate) வருகிறது. இது 19.8: இன்ச் அளவிற்கு விரிவாக கூடிய வொர்க்ஸ்பேஸ் அம்சத்துடன் வருகிறது.

இரண்டு 14" இன்ச் 3K OLED டிஸ்பிளே ஒரே லேப்டாப்பில் (Two 14" inch 3K OLED displays in one laptop):

இந்த ஆசஸ் ஜென்புக் டுவோ 2024 சாதனம் இன்டெல் கோர் அல்ட்ரா 9 பிராசஸர் (Intel Core Ultra 9 processor) உடன் வருகிறது. இது 32 GB LPDDR5x ரேம் உடன் 2 TB வரையிலான PCIe® 4.0 SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது டச் கண்ட்ரோல், கெஸ்டர் கண்ட்ரோல் (Gesture control), வாய்ஸ் அசிஸ்டன்ட், ஏஐ (AI) ஆதரவு என்று பல அதிநவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், இதுவொரு எதிர்கால லேப்டாப் மாடல் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த லேப்டாப் உடன் வரும் கீபோர்ட் சாதனம் ஒரு ப்ளூடூத் கீபோர்ட் (Bluetooth keyboard) என்பதனால், இதை எப்போது வேண்டுமானாலும் பிரித்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், இந்த லேப்டாப் இல் இருக்கும் மற்றொரு டிஸ்பிளேவையும் நீங்கள் விர்ச்சுவல் கீபோர்ட் சாதனமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது 13.5 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த லேப்டாப் டால்பி அட்மாஸ் சவுண்ட் உடன் வருகிறது. இந்த லேப்டாப் சவுண்ட் சிஸ்டத்தை ஹர்மான் கார்டன் (Harman Kardon) டியூன் செய்துள்ளது. இந்த லேப்டாப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆசஸ் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள இந்த Aus Zenbook Duo (2024) தகவலை பார்க்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ASUS Zenbook DUO 2024 UX8406 Laptop With 14 Inch Dual Display and 13 Hours Battery Life At CES 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X