Home
Gadgets

60% டிஸ்கவுண்ட்.. 3 வருட FREE வாரண்டி.. வீட்டுக்கு வீடு ஒரு Acer :Laptop.. இல்ல Monitor வாங்க சூப்பர் சான்ஸ்!

ஏசர் (Acer) நிறுவனமானது 2024-ஆம் ஆண்டிற்கான தனது குடியரசு தின சிறப்பு விற்பனையை (2024 Republic Day Sale) அறிவித்துள்ளது. இந்த விற்பனையின்கீழ் என்னென்ன லேப்டாப்கள் மற்றும் மானிட்டர்கள் மீது சலுகைகள் கிடைக்கும்? இந்த சலுகைகளை பெறுவது எப்படி? இதோ விவரங்கள்:

ஏசர் நிறுவனத்தின் குடியரசு தின சிறப்பு விற்பனை சலுகைகள் ஆனது ஏசர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் (Acer online store) மற்றும் பிரத்யேக ரீடெயில் ஸ்டோர்களின் (Exclusive retail stores )) வழியாக கிடைக்கும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனை ஏற்கனவே நேரலையில் உள்ளது.

வீட்டுக்கு வீடு ஒரு Acer :Laptop.. இல்ல Monitor வாங்க சூப்பர் சான்ஸ்!

இதன்கீழ் ஏசர் நிறுவனத்தின் பலவகையான கேமிங் (Gaming), நான்-கேமிங் (Non-gaming) மற்றும் பிஸ்னஸ் லேப்டாப்கள் (Business laptops) மற்றும் மானிட்டர்கள் (Monitors) மீது பெரிய அளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ் (Acer Predator Helios), நைட்ரோ சீரிஸ் (Nitro series), ஆஸ்பயர் 5 கேமிங் லேப்டாப்கள் (Aspire 5 Gaming laptops) மற்றும் ஏசர் டிராவல்மேட் சீரிஸ் ( Acer TravelMate series) ஆகியவைகளும் அடங்கும்.

ஏசரின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இலவச அக்ஸசெரீஸ் (Free accessories), இலவச எக்ஸ்டென்டட் வாரண்டி (Extended warranties) மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள் (No-cost EMI options) போன்ற பிற சலுகைகள் மற்றும் நன்மைகளும் கிடைக்கும். மேலும், இந்த சிறப்பு விற்பனையின்கீழ் லேப்டாப் அல்லது மானிட்டர்களை வாங்கும் மாணவர்களுக்கு 7% சிறப்பு தள்ளுபடியும் (Special Discount) கிடைக்கும்.

வீட்டுக்கு வீடு ஒரு Acer :Laptop.. இல்ல Monitor வாங்க சூப்பர் சான்ஸ்!

என்னென்ன ஏசர் தயாரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ், ஆஸ்பயர் 5 கேமிங் மற்றும் நைட்ரோ சீரிஸ் லேப்டாப்களுக்கு 2 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Extended two-year warranty) முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

மேலும் இந்த விற்பனையின் போது ஏசர் டிராவல்மேட் சீரிஸ் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இலவச அக்ஸசெரீஸ்கள் உட்பட 2 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் முற்றிலும் இலவசமாக பெறுவார்கள். ஒருவேளை உங்கள் தேடல் ஏசர் மானிட்டர்கள் மீது இருந்தால், உங்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ.2000 வரை எக்ஸ்ட்ரா சேவிங்ஸையும் (Extra Savings) நீங்கள் பெறலாம்.

வீட்டுக்கு வீடு ஒரு Acer :Laptop.. இல்ல Monitor வாங்க சூப்பர் சான்ஸ்!

இதேபோல ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பையர் மற்றும் எக்ஸ்டென்சா சீரீஸ் லேப்டாப்கள் மீது 3 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். அதே நேரத்தில் ஆஸ்பையர் 7 கேமிங் லேப்டாப் மாடல்கள் மீது ஆஸ்பையர் 2 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

கூடுதலாக, ப்ரீடேட்டர் ஹீலியோஸ், நைட்ரோ சீரிஸ், ஆஸ்பயர் 5 கேமிங், ஆஸ்பியர் மற்றும் எக்ஸ்டென்சா சீரிஸ் மற்றும் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்களோடு கிடைக்கும் காம்ப்ளிமென்டரி அக்ஸசெரீஸ்கள் (Complimentary Accessories) அல்லது 7% மாணவர் தள்ளுபடி (Student Discount) ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஏசர் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிரத்யேக ஸ்டோர்கள் மூலம் லேப்டாப் மற்றும் மானிட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும். ஏசர் குடியரசு தின சிறப்பு விற்பனையின் கீழ் கிடைக்கும் அனைத்து டீல்களையும் பார்க்க, ஏசரின் அதிகாரப்பூர்வ குடியரசு தின விற்பனை பக்கத்திற்கு (Acer Republic Day Sale Page) செல்லவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer Republic Day Sale Discounts on Predator Helios Nitro Aspire 5 laptops Monitors till Jan 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X