அரளுது மார்க்கெட்.. வாங்குனா இந்த Laptop தான் வாங்கணும்.. விலை என்ன? என்ன மாடல்?
ஏசர் (Acer) நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 சீரிஸ் (Acer Swift Go 14 Series Laptop) லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 சீரிஸ் (Acer Swift Go 14 Series Laptop) வரிசையின் கீழ், 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 இன்டெல் கோர் அல்ட்ரா 7 (Acer Swift Go 14 Intel Core Ultra 7) என்ற ஒரு மாடலும், இன்டெல் கோர் அல்ட்ரா 5 (Acer Swift Go 14 Intel Core Ultra 5) என்ற மற்றொரு மாடலை கொண்டிருக்கும்.

16GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜ் உடன் இந்த ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 இன்டெல் கோர் அல்ட்ரா 5 (Acer Swift Go 14 Intel Core Ultra 5) லேப்டாப் சாதனம் ரூ.84,990 விலையில் பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் ஹை-எண்டு லேப்டாப் சாதனமான ஏசர் ஸ்விஃப்ட் இன்டெல் கோர் அல்ட்ரா 7 (Acer Swift Intel Core Ultra 7) லேப்டாப் ரூ.99,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 சீரிஸ் (Acer Swift Go 14 Series Laptop):
ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 இன்டெல் கோர் அல்ட்ரா 7 (Acer Swift Go 14 Intel Core Ultra 7) மற்றும் ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 இன்டெல் கோர் அல்ட்ரா 5 (Acer Swift Go 14 Intel Core Ultra 5) லேப்டாப் சாதனங்கள் 14" இன்ச் அளவு கொண்ட WQXGA (2240 x 1400 pixels) ரெசொலூஷன் உடைய IPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளே 100% DCI-P3 உடன் 400 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. இது 16:10 ஆக்ஸ்பெக்ட் ரேட்ஸியோ உடன் 60Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இந்த லேப்டாப் சாதனங்கள் முறையே இன்டெல் கோர் அல்ட்ரா 5 (Intel Core Ultra 5 ) மற்றும் இன்டெல் கோர் அல்ட்ரா 7 (Intel Core Ultra 7) சிப்செட் கொண்ட பிராசஸர் உடன் வருகிறது.

இந்த லேப்டாப் சாதனங்கள் இன்டெல் ஆர்க் கிராபிக்ஸ் (Intel Arc graphics) அம்சத்துடன் செயல்படுகிறது. இந்த லேப்டாப் சாதனங்கள் விண்டோஸ் 11 (Windows 11) உடன் இயங்குகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த ஏசர் ஸ்விஃப்ட் கோ 14 (Acer Swift Go 14) லேப்டாப் சாதனம் 16ஜிபி LPDDR5X-6400 DRAM உடன் வருகிறது. இது டூயல் 512GB PCIe Gen 4 SSD உடன் வருகிறது.
இந்த லேப்டாப் சாதனம் பிரைவசி ஷட்டர் உடன் 1440p QHD கேமராவை கொண்டுள்ளது. இது 65wh பேட்டரி உடன் 12.5 மணி நேர பயன்பட்டு நேரத்தை வழங்குகிறது. இது 100W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இந்த லேப்டாப் சாதனத்தின் டச்பேட் 125mm x 76.7mm, மல்டி கண்ட்ரோல் டச்பேட் (multi-control touchpad) உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass), ஓசன் கிளாஸ் (OceanGlass) அம்சத்துடன் வருகிறது.
வைஃபை 6E, ப்ளூடூத் 5.3, இன்டெல் ப்ளூடூத் LE ஆடியோ, 1 x USB 3.2 போர்ட், 1 x USB 3.2 ஜென் 1 போர்ட், 1 x USB Type-C உடன் DC-in, 1 x HDMI 2.1 போர்ட் உடன் இது வருகிறது. இது 1.32 kg எடையுடன் வருகிறது. தரமான அம்சங்களுடன் வரும் இந்த லேப்டாப் சாதனத்தை உடனே வாங்கி பயன்பெறுங்கள்.


Click it and Unblock the Notifications








