Home
News

அடுத்த ஸ்கெட்ச்.. பட்ஜெட் விலை.. 16" இன்ச் பெரிய டிஸ்பிளே.. Infinix INBOOK Y4 Max லேப்டாப் ஸ்பெஷல் என்ன?

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம், அதன் அடுத்த புதிய லேப்டாப் (Laptop) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) என்ற பெயருடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

தெரியாதவர்களுக்கு, இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் மிகவும் குறைந்த விலையில் இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) என்ற லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, இன்பினிக்ஸ் நிறுவனம் இப்போது இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) என்ற லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

அடுத்த ஸ்கெட்ச்.. பட்ஜெட் விலை.. 16

இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) லேப்டாப் சாதனத்தின் சரியான அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், நிறுவனம் இதை விரைவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்பினிக்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 13ம் தேதி அதன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் (Infinix Smart 8 Smartphone) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max):

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் தகவல் படி, இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) லேப்டாப் சாதனம் 16" இன்ச் அளவு கொண்ட பெரிய டிஸ்பிளேவுடன் ஸ்லிம் பேசல்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அலுமினியம் சேசிஸ் உடன் இந்த சாதனம் 7.06" டச் பேனல் மற்றும் பேக்லைட் கீபோர்ட் அம்சத்துடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் Y4 மேக்ஸ் (Infinix INBOOK Y4 Max) லேப்டாப் சாதனம் சில்வர் மற்றும் ப்ளூ நிறங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் லேப்டாப் போன்ற அம்சங்களுடன் சில மேம்படுத்தல்களை பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஸ்கெட்ச்.. பட்ஜெட் விலை.. 16

சமீபத்தில் வெளியான இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) அம்சங்களை பற்றி பார்க்கையில், இந்த இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) லேப்டாப் சாதனம் இந்திய சந்தையில், 15.6" இன்ச் FHD டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்தது. இது FHD வெப்கேம் உடன் டூயல் LED பிளாஷ்லைட் அம்சத்துடன் வந்தது.

இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus):

பிராசஸர் பற்றி பேசுகையில், இந்த லேப்டாப் சாதனம் 11வது ஜென் கோர் i3 உடன் ஒரு மாடலாகவும், கோர் i5 பிராசஸர் உடன் மற்றொரு மாடலாகவும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 50WHr பேட்டரி உடன் 65W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

இன்பினிக்ஸ் இன்புக் Y2 பிளஸ் (Infinix INBOOK Y2 Plus) லேப்டாப் விண்டோஸ் 11 OS உடன் வருகிறது. இதன் விலை இந்தியா சந்தையில் வெறும் ரூ.27,000 விலை புள்ளியில் விற்பனைக்கு வந்துள்ளது. குறைந்த விலையில் ஒரு பட்ஜெட் லேப்டாப் வாங்க வேண்டுமென்றால், இந்த சாதனத்தை நீங்கள் தேர்வு செய்து வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix INBOOK Y4 Max Laptop Might Launch Soon In India Along With Infinix Smart 8 Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X