அடிப்படை கம்யூட்டிங்கிற்கு ஏற்ற ஏசர் நெட்புக்

By Super
|
அடிப்படை கம்யூட்டிங்கிற்கு ஏற்ற ஏசர் நெட்புக்
ஏசரின் புதிய நோட்புக் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகம் தரக்கூடியது. அதாவது அதன் நவீன தொழில் நுட்பமும் செயல் திறனும் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை மிரட்டும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் ஏசரின் புதிய ஏசர் அஸ்பயர் ஒன் எஒ722-சி58கேகே நோட்புக் வாடிக்கையாளர்களிடம் நல் மதிப்பைப் பெறும் என நம்பலாம்.

ஏசர் அஸ்பயர் ஒன் எஒ722-சி58கேகே லைட் மினிகோ அடாப்டர் கொண்டிருப்பதால் யுஎஸ்பி இல்லாம் நேரடியாகவே நாம் மின்சார இணைப்பை பெறமுடியும். இது 1.46 கிலோ எடையையும், ஒரு இன்ச் மட்டுமே தடிமனையும் கொண்டிருக்கிறது. இதனால் இதை ஒரு போர்ட்டபுள் நோட்புக் எனலாம்.

இந்த அஸ்பயர் ஒன் நெட்புக் அழகாக கருப்பு சேசிஸ் வண்ணத்தில் வருகிறது. அதனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. தகவல் பரிமாற்றத்திற்காக எர்த்நெட், யுஎஸ்பி, விஜிஎ மற்றும் எச்டிஎம்ஐ போன்ற போர்ட்டுகளைக் கொண்டிருக்கிறது. விஜிஎ மற்றும் யுஎஸ்பி போர்ட்டுகளக்கு இடையில் ஏர் வென்ட்கள் உள்ளன.

இதன் வலது புறம் 5 இன் 1 மெமரி கார்டு ரீடர் உள்ளது. மேலும் இதன் வலது புறம் உள்ள மற்ற 2 யுஎஸ்பி போர்ட்டுகளுக்கு பக்கத்தில் ஹெட்போன் மற்றும் மைக் ஜாக்குகள் உள்ளன. ஏசர் அஸ்பயர் ஒன் எஒ722-சி58கேகே வெளிப்புறம் ரப்பரால் மூடப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே சினிகிரிஸ்டல் தொழில் நுட்பத்துடன் 11.6 இன்ச் எல்இடி பேக்லிட் டிஎப்டி எல்சிடி கொண்டதாகும்.

இதன் பிக்ஸல் ரிசலூசன் 1366X768 ஆகும். மேலும் இது எஎம்டி பார்சோஸ் சி50 ப்ராசஸர் மற்றும் 2ஜிபி டிடிஆர் 3 ராம் கொண்டிருப்பதால் இதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். க்ராபிக்ஸ் வசதிகளுக்காக எடிஐ ரேடியோன் எச்டி 6250 க்ராபிக்ஸ் 256 எம்பி மெமரி கார்டு கொண்டிருப்பதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளைப் பக்காவாக செய்யலாம். அதுபோல் எச்டி வீடியோக்களை இதில் பார்க்கும் போது மிக பரவசமாக இருக்கும்.

ஏசர் அஸ்பயர் ஒன் எஒ722-சி58கேகேயின் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் அதன் கீபோர்டு. இதன் கீபோர்டை இன்னும் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். ஆனால் அதன் டச்பேட் மிருதுவாக மல்டிடச் வசதி கொண்டிருக்கிறது.

அடிப்படை கம்யூட்டிங்கிற்கு இந்த நெட்புக் சரியான தேர்வாகும். இது விண்டோஸ் 7 ஓஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இது சிறந்த சேமிப்பு வசதியுடன் 320ஜிபி எச்டிடி கொண்டுள்ளது. இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமரா வீடியோ ரிக்கார்டிங் செய்ய உதவியாக இருக்கும். மேலும் இது 7 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதியைக் கொண்டது. இந்தியாவில் ரூ.19,500 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X