நிஜமா தான் சொல்றோம்.. ரூ.15000 விலையில் QLED Smart TV வாங்கலாம்.. என்ன மாடல்? எவ்வளவு சலுகை?
குறைந்த விலையில் எல்லோரும் HD தரத்தில் LED ஸ்மார்ட் டிவி (Smart TV) கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சொல்லும் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்தினால், ரூ.15,000 விலையில் பெஸ்டாக ஒரு QLED ஸ்மார்ட் டிவியையே வாங்கிட முடியும்.
முதலில் LED டிவிகள் சிறந்ததா அல்லது QLED டிவிகள் சிறந்ததா என்பதை தெரிந்துகொண்டு, நேரடியாக பதிவிற்கு செல்லலாம். உண்மையை சொல்ல போனால், QLED ஸ்மார்ட் டிவிகள் தரத்தில் சிறந்தவை. அதேபோல், இவற்றின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. இதனாலேயே பெரியளவு மக்கள் LED டிவியை வாங்க முயல்கிறார்கள். QLED ஐ, LED இன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று கூட நாம் கூறலாம்.

LED ஸ்மார்ட் டிவிகளில் வெள்ளை நிற பேக்லைட்டை வெளிப்படுத்துகின்றன. QLED ஸ்மார்ட் டிவிகளில் ப்ளூ நிற பேக்லைட்டை வெளிப்படுத்துகின்றன. இரண்டின் தரமும் விதியசமைடிக்கிறது. வீடியோவின் நிறத்தில், கான்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என்று எல்லா அம்சத்திலும் QLED ஒரு படி மேலே ஓங்கி உள்ளது என்பதே உண்மையாகும். ரூ.15,000 விலையில் உண்மையாகவே ஒரு QLED டிவி வாங்க முடியுமா?
LED சிறந்ததா? அல்ல QLED சிறந்ததா? எந்த ஸ்மார்ட் டிவி டிஸ்பிளே சிறந்தது?(Is LED better or QLED is better? Which smart tv display is best):
முடியும் என்கிறது ஏசர் (Acer) நிறுவனம். ஸ்மார்ட் டிவி சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாகியுள்ள ஏசர் பிராண்ட், ஏசர் 32 இன்ச் V சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் QLED கூகுள் டிவி (Acer 32 inch V Series HD Ready Smart QLED Google TV AR32GR2841VQD) மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஏசர் 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் QLED கூகுள் டிவி (Acer 32 Inch HD Ready Smart QLED Google TV) 1366 x 768 பிக்சல் உடன் 60 Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) டிஸ்பிளே (Display) அம்சத்துடன் வருகிறது. இது HDR 10 சப்போர்ட் ஆதரவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி 30W ஹை-ஃபேடிலிட்டி ஸ்பீக்கர் (30W High Fidelity Speakers) உடன் டால்பி ஆடியோ (Dolby Audio) அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது 1.5GB RAM உடன் 16GB ஸ்டோரேஜ் (Storage) அம்சத்தை கொண்டுள்ளது. இது நெட்ஃபிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), ஈரோஸ் நவ் (Eros Now) சப்போர்ட் உடன் வருகிறது.
ஏசர் 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் QLED கூகுள் டிவி (Acer 32 Inch HD Ready Smart QLED Google TV):
ஜியோ சினிமா (JioCinema), சோனி லைவ் (SonyLiv), யூடியூப் (Youtube), ஹங்கம (Hungama), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற ஆப்ஸ்களுக்கான அனுமதியை இந்த ஸ்மார்ட்டிவி வழங்குகிறது. இது டூயல் பேண்ட் வைஃபை (Dual band WiFi), 2 வே ப்ளூடூத் (2 way Bluetooth) அம்சம் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 2 HDMI போர்ட் மற்றும் 2 USB போர்ட் உடன் வருகிறது.
இந்த QLED ஸ்மார்ட் டிவியின் அசல் MRP விலை ரூ.23,999 ஆகும். ஆனால், தற்போது கிடைக்கும் 33% சலுகைக்கு பிறகு, இதன் விலை ரூ.15,999 ஆக குறைந்துள்ளது. வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1500 முதல் கூடுதல் சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் புதிய QLED ஸ்மார்ட் டிவியை இன்னும் மலிவான விலையில் வாங்க முடியும்.
இந்த நல்ல வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இப்போது அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி ரூ.15,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட் (Flipkart) தளம் இந்த QLED ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.15,750 விலையில் பட்டியலிட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற தளத்தில் ஆர்டர் செய்து பயன்பெறுங்கள் மக்களே.


Click it and Unblock the Notifications








