ஆளுக்கு 1 வாங்கலாம் போலயே.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஏசர் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி 16ஜிபி ஸ்டோரேஜ், கூகுள் டிவி இயங்குதளம், குவாட்-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவிக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.11,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1,199 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (Acer Advanced I Series Smart TV specifications): 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 Degree wide viewing angle மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ஆனது குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்புஎச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.
ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஸ்மார்ட் டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் டிவி மூலம் இயங்குகிறது இந்த ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோம்காஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. இதுதவிர 5 சவுண்ட் மோட்களை கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். கண்களுக்குப் பாதுகாப்பு தரும் லோவ் ப்ளூ லைட் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி மாடல். குறிப்பாக ஃபிரேம்லெஸ் டிசைன் (Frameless Design) கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்.
வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஸ்மார்ட் டிவி. பின்பு இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களும் உள்ளன. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications