அமேசான் அதிரும் பாருங்க.. 16GB ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ஏசர் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
ஏசர் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் தரமான 43-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த டிவியை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவியின் (Acer Advanced I Series Full HD Smart LED Google TV) அம்சங்கள்: 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.
ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். மேலும் இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் கிடைக்கும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. அதாவது இந்த டிவியின் ரிமோட் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்றவற்றின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது. அதேபோல் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.


Click it and Unblock the Notifications








